7th OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில் பேசிய நிதியமைச்சர், 70 சதவிகிதத்திற்கு மேல் சிறு தானியங்கள் கலந்த மாவு வகைகளை சில்லறையில் விற்கும்போது முழு வரி விலக்கு அளிக்கப்படும் என தெரிவித்தார்.
- இம்மாவையே பேக்கேஜ் செய்து லேபிளுடன் விற்றால் 5% மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
- சர்க்கரை ஆலைகளில் உருவாகும் துணைப்பொருளான மொலாசஸ் மீதான ஜிஎஸ்டி வரி 28-இல் இருந்து 5 விழுக்காடாக குறைக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் கரும்பு விவசாயிகள் பலன்பெறுவதுடன் கால்நடை தீவனங்கள் விலை குறையும் வாய்ப்பு ஏற்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
- TO KNOW MORE ABOUT - DOUBLEDOWN PROMO CODE
- மனித பயன்பாட்டுக்கான ஆல்கஹால்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான ஆல்கஹால்களுக்கு வரி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதற்கிடையே ஆல்கஹாலுக்கு இரு வித வரி விதிப்பு நடைமுறையால் நிர்வாக ரீதியில் சிக்கல் ஏற்படும் என கூட்டத்தில் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கவலை தெரிவித்தார். மேலும் இதனால் தமிழக அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
- ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாநில அரசின் சின்னம் இருப்பதைப் போன்று, விலங்கு, பறவைகள் மற்றும் ஆகியவை உள்ளன. அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலத்திம்ன் நீர்வாழ் விலங்கான டால்ஃபினை அறிவித்துள்ள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.
- எனவே டால்பின்கள் வாழும் நதிகளை தூய்மையாகவும், புனிதமாகவும், வைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், கங்கை, யமுனை, சம்பல் உள்ளிட்ட நதிகளில் சுமார் 2 ஆயிரம் டால்ஃபிங்கள் உயிர் வாழ்வதாக கூறப்படுகிறது.
- 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தற்போது நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றறனர்.
- ஒவ்வொரு நாளும் இந்தியா வீரர்கள் பதக்கங்களை குவித்தனர். செஸ்செஸ் போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.வில்வித்தைஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.
- தென்கொரிய வீராங்கனையை 149- 145 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி ஜோதி தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா இதுவரை 3 தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
- வில்வித்தை போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை அதிதி சுவாமி வெண்கலம் வென்றார்.
- ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்திய வில்வித்தை வீரர்கள் ஓஜாஸ் பிரவீன் தங்கமும், அபிஷேக் வர்மா வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
- மகளிர் கபடிப் போட்டிமகளிர் கபடிப் போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. சீன தைபே அணியை 26-24 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிள் கபடி அணி தங்கம் வென்றது.
- ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாட்மின்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம் கிடைத்துள்ளது.
- இந்திய இணை சாத்விக், சிராக் ஆகியோர் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
- டி20 கிரிக்கெட் ஆசிய விளையாட்டு ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் கிடைத்துள்ளது. மழையால் ஆப்கானிஸ்தான் அணியுடனான இறுதிப் போட்டி ரத்தான நிலையில், சர்வதேச வரிசையில் முன்னிலையில் இருப்பதால் இந்திய அணி தங்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
- ஆடவர் கபடி போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் கிடைத்துள்ளது. இறுதிப்போட்டியில் ஈரான் அணியை 33-29 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்றது.
- சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தியா பங்கேற்கும் போட்டிகள் நிறைவு பெற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவாக 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என 107 பதக்கங்களுடன் நிறைவு செய்துள்ளது.