30th OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ரக்பி உலக கோப்பை 2023 - தென் ஆப்ரிக்கா சாம்பியன்
- பிரான்சின் செயின்ட் டெனிஸ் நகரில் நடந்த ரக்பி உலக கோப்பை தொடரின் பைனலில் நடப்பு சாம்பியன் தென் ஆப்ரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதின.
- மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், தென் ஆப்ரிக்கா 12-11 என்ற கோல் கணக்கில் போராடி வென்று கோப்பையை தக்கவைத்தது. அந்த அணி 4வது முறையாக ரக்பி உலக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. அதிபர் சிரில் ராம்போசா (இடது) வாழ்த்து தெரிவிக்க, தென் ஆப்ரிக்க அணியினர் உலக கோப்பையுடன் ஆர்ப்பரிக்கின்றனர்.
- தெற்காசிய பிராந்தியத்தில் உணவு இழப்பு மற்றும் வீணாவதைத் தடுப்பது குறித்த சர்வதேச பயிலரங்கை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் திருமிகு ஷோபா கரண்ட்லாஜே தில்லியில் தொடங்கி வைத்தார்.
- தெற்காசிய பிராந்தியத்தில் உணவு இழப்பு மற்றும் வீணாவதைத் தடுப்பது குறித்த சர்வதேச பயிலரங்கை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் ஜெர்மனியின் துனன் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
- ஐ.சி.ஏ.ஆரின் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் எஸ்.கே.சவுத்ரி, ஜெர்மனியின் துனென் நிறுவனத்தின் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் ஸ்டீபன் லாங்கே, ஐ.சி.ஏ.ஆரின் துணை தலைமை இயக்குநர் (ஏ.ஜி. இன்ஜினியரிங்), டாக்டர் எஸ்.என்.ஜா மற்றும் இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, நேபாளம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுமார் 120 பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
- பருவநிலை மாற்றம், கடற்கொள்ளை, பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், அதிகப்படியான மீன்பிடித்தல் மற்றும் ஆழ்கடலில் வர்த்தக சுதந்திரம் போன்ற பொதுவான கடல்சார் சவால்களைத் திறம்படச் சமாளிக்க இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பன்னாட்டு கூட்டு தணிப்பு கட்டமைப்புகளை நிறுவுமாறு பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்தார். கோவா கடல்சார் மாநாட்டின் (ஜி.எம்.சி) நான்காவது பதிப்பில் இன்று அவர் சிறப்புரையாற்றினார்.
- கடந்த 29ம் தேதி தொடங்கிய மூன்று நாள் மாநாட்டில், பாதுகாப்பு பிரதிநிதி கொமோரோஸ் திரு முகமது அலி யூசோபா மற்றும் பங்களாதேஷ், இந்தோனேசியா, மடகாஸ்கர், மலேசியா, மாலத்தீவுகள், மொரிஷியஸ், மியான்மர், சீஷெல்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து ஆகிய பதினொரு இந்தியப் பெருங்கடல் நாடுகளின் கடற்படைத் தலைவர்கள், கடல்சார் படைகளின் தலைவர்கள், மூத்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
- இந்த நான்காவது பதிப்பின் கருப்பொருள்' இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு பொதுவான கடல்சார் முன்னுரிமைகளை கூட்டு தணிப்பு கட்டமைப்புகளாக மாற்றுதல்' என்பதாகும். கோவாவின் கடற்படை போர் கல்லூரியின் ஏற்பாட்டில் இந்த மாநாட்டின் போது பல அமர்வுகள் நடத்தப்படுகின்றன. சிறந்த பேச்சாளர்கள் மற்றும் பாட வல்லுநர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன.
- தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய குழுவின் 76வதுஅமர்வில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று உரையாற்றினார்.
- அவருடன் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸும் கலந்து கொண்டார்.
- தென்கிழக்கு ஆசியாவின் பிராந்தியக் குழுவின் 76வது அமர்வின் தலைவராக டாக்டர் மாண்டவியா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- மாலத்தீவு, இலங்கை, நேபாளம், வங்கதேசம், இந்தோனேஷியா, பூட்டான் ஆகிய நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சர்கள், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் மானஸ்வி குமார், மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
- நிலக்கரி இந்தியாவின் துணை நிறுவனமான தென்கிழக்கு கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் 2023-24 நிதியாண்டில் 100 மில்லியன் டன் நிலக்கரியை மின் நிலையங்கள் உள்ளிட்டவற்றுக்கு அனுப்பியுள்ளது. சத்தீஸ்கரைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து அடைந்த அதிவேக 100 மெட்ரிக் டன் நிலக்கரி அனுப்புதல் இதுவாகும்.
- கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சுமார் 85 மில்லியன் டன் நிலக்கரி அனுப்பப்பட்டது. இதனால் இந்த நிதியாண்டில் நிறுவனம் 17.65% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
- நாடு முழுவதும் உள்ள மின் நிலையங்களுக்கு சுமார் 81 மில்லியன் டன் நிலக்கரியை நிறுவனம் அனுப்பியுள்ளது. இதன் மூலம் மொத்த நிலக்கரியில் 80% க்கும் அதிகமானவை மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. வரவிருக்கும் பண்டிகை காலத்தை மனதில் கொண்டு, மின்தேவை உச்சத்தை எட்டும் நிலையில், இது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
- கோர்பா மாவட்டத்தில் அமைந்துள்ள தென்கிழக்கு கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தின் மெகா திட்டங்களான கெவ்ரா, டிப்கா மற்றும் குஸ்முண்டா ஆகியவை 100 மில்லியன் டன் நிலக்கரியை அனுப்புவதில் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளன.
- நாட்டின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கமான கெவ்ரா 30.3 மில்லியன் டன் நிலக்கரியையும், டிப்கா மற்றும் குஸ்முண்டா முறையே 19.1 மில்லியன் டன் மற்றும் 25.1 மில்லியன் டன் நிலக்கரியையும் அனுப்பியுள்ளன. இந்த மூன்று மெகா திட்டங்களில் இருந்து 74 சதவீத நிலக்கரி அனுப்பப்பட்டுள்ளது.