Type Here to Get Search Results !

26th OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


26th OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஐரோப்பிய ஒன்றியமும், இந்தியாவும் முதலாவது கூட்டுக் கடற்படைப் பயிற்சி
  • இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்தின் கப்பல்கள் கினியா வளைகுடாவில் கூட்டுக் கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டன. இந்தப் பிராந்தியத்தில் கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் இது மேற்கொள்ளப்பட்டது.
  • ஐரோப்பிய ஒன்றியமும், இந்தியாவும், கினியா வளைகுடாவில் அக்டோபர் 24 அன்று, தங்கள் முதலாவதுக் கூட்டு கடற்படை பயிற்சியை நடத்தின. 
  • பிரஸ்ஸல்ஸில் 2023 அக்டோபர் 5 அன்று ஐரோப்பிய ஒன்றியம் - இந்தியா கடல்சார் பாதுகாப்பு உரையாடலின் மூன்றாவது கூட்டத்தைத் தொடர்ந்து இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
  • பயிற்சியின் போது, இந்திய கடற்படையின் கடலோர ரோந்து கப்பல் ஐ.என்.எஸ் சுமேதா, கினியா வளைகுடாவில் மூன்று ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் கப்பல்களுடன் இணைந்தது. 
  • இத்தாலிய கடற்படை கப்பல் ஐ.டி.எஸ் ஃபோஸ்காரி, பிரெஞ்சு கடற்படை கப்பல் எஃப்.எஸ் வென்டோஸ், ஸ்பானிஷ் கடற்படை கப்பல் டோர்னாடோ ஆகிய நான்கு கப்பல்களும் கானா கடற்கரையில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் தொடர்ச்சியான பயிற்சியை மேற்கொண்டன.
  • இதில் கப்பலில் ஏறும் பயிற்சி, பிரெஞ்சு கப்பல் வென்டோஸ் மற்றும் இந்திய கடற்படை கப்பல் சுமேதாவில் புறப்பட்ட ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி பறக்கும் பயிற்சி, கப்பல்களுக்கு இடையே பணியாளர்களை மாற்றுதல் ஆகியவை அடங்கும்.
  • இந்த நடவடிக்கைகள் கினியா வளைகுடாவில் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதில் கடலோர நாடுகள் மற்றும் யாவுண்டே கடல்பகுதி பாதுகாப்பை ஆதரிப்பதில் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகின்றன.
மஹாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் ரூ.7500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்தத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
  • மஹாராஷ்டிரா மாநிலம், அகமதுநகர், ஷீரடியில் சுகாதாரம், ரயில், சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற துறைகளில் சுமார் ரூ.7500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். 
  • பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களில் அகமதுநகர் சிவில் மருத்துவமனையில் உள்ள ஆயுஷ் மருத்துவமனை, குர்துவாடி-லாத்தூர் சாலை ரயில் பிரிவு மின்மயமாக்கல் (186 கி.மீ), ஜல்கானிலிருந்து பூசாவலை (24.46 கி.மீ) இணைக்கும் 3 -வது மற்றும் 4 -வது ரயில் பாதைகள்; தேசிய நெடுஞ்சாலை 166-ல் சாங்லி முதல் போர்கான் வரையிலான நான்கு வழிச்சாலை (தொகுப்பு-1); மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மன்மத் முனையத்தில் கூடுதல் வசதிகள். அகமதுநகர் அரசு மருத்துவமனையில் தாய் -சேய் நலப் பிரிவுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் அட்டைகள் மற்றும் ஸ்வமித்வா அட்டைகளையும் திரு மோடி வழங்கினார்.
  • நில்வாண்டே அணையின் இடது கரை (85 கி.மீ) கால்வாய் கட்டமைப்பை நாட்டுக்கு அர்ப்பணித்து ஷீரடியில் தரிசனம் செய்வதற்கான புதிய வரிசை வளாகத்தை திரு மோடி திறந்து வைத்தார். மேலும் 86 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் விவசாயிகளுக்கான நிதி ஆதரவுத் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
  • முன்னதாக, ஷீரடி சாய்பாபா சமாதி கோயிலில் பூஜை மற்றும் தரிசனம் செய்த பிரதமர் மோடி, நில்வாண்டே அணையின் ஜல பூஜையையும் செய்தார்.
37-வது தேசிய விளையாட்டு போட்டி நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
  • 37-வது தேசிய விளையாட்டு போட்டி கோவாவில் தொடங்கியது. கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோவா மாநில முதல்வர் பிரமோத்சாவந்த், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்அனுராக் தாக்குர், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர்பி.டி.உஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தொடக்க விழா நிகழ்ச்சியில் கண்கவர்கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.போட்டியில் கலந்துகொண்டுள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங் களின் அணி வகுப்பு நடைபெற்றது.
  • தொடர்ந்து ராட்சத பலூனில் பறந்து வந்தபடி வீராங்கனை ஒருவர் போட்டிக்கான ஜோதியை இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத்சிங், அலைச்சறுக்கு வீராங்கனை காத்யா கொய்லோ ஆகியோரிடம் வழங்கினார். அவர்கள் மைதானத்தை வலம் வந்தபடி விழா மேடையில் இருந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜோதியை வழங்கினார்கள். அதைப் பெற்றுக்கொண்ட அவர், போட்டி முறைப்படி தொடங்குவதாக அறிவித்தார். வரும் நவம்பர்9-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel