இந்தியக் கடற்படை பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகம் / NAVAL MATERIALS RESEARCH LABORATORY - NMRL
TNPSCSHOUTERSOctober 25, 2023
0
இந்தியக் கடற்படை பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகம் / NAVAL MATERIALS RESEARCH LABORATORY - NMRL: இந்தியக் கடற்படை பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகம் (Naval Materials Research Laboratory (NMRL)) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டி. ஆர். டீ. ஓ) கீழ் செயல்படும் ஒரு ஆய்வகமாகும்.
இந்த ஆய்வகம் மகாராட்டிர மாநிலத்தில் மும்பையில் தானே என்ற இடத்தில் அமைந்துள்ளது.
இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளைக் கணக்கில் கொண்டு இந்த ஆராய்ச்சி ஆய்வகம் இந்தியக் கப்பற்படையின் பொருட்கள், கலப்புலோகங்கள் ஆகியவற்றின் தேவைகளுக்கு ஏற்றவாறு ஆராய்ச்சிகள் புரிந்து, இலகுவான பொருட்கள், கலப்புலோகங்கள் ஆகியவற்றை வழங்கி வருகிறது.
இத்தேவைகளுக்கான ஒற்றைச் சாளரம் கொண்ட ஒரே அமைப்பாக இந்த ஆய்வகம் திகழ்ந்து வருகிறது.
இவ்வமைப்பு டி. ஆர். டீ. ஓ வின் கீழ் செயல்படும் கப்பற்படை ஆராய்ச்சி மேம்பாட்டு இயக்குநரகத்தின் கீழ் செயல்படுகிறது.
தற்பொழுது இதன் இயக்குனராக டாக்டர் ஜே. நாராயண் தாஸ் செயல்படுகிறார்.
வரலாறு
இந்தியக் கடற்படை பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகம் / NAVAL MATERIALS RESEARCH LABORATORY - NMRL: 1953 ஆம் ஆண்டில், இந்தியக் கப்பற்படையின் தேவைகளைக் கருதி, முதலில் இந்தியக் கப்பற்படை இரசாயன உலோகவியல் ஆய்வுக்கூடமாக இந்த அமைப்பு மும்பையில் உள்ள கப்பல் பட்டறையில் (Naval Dockyard) செயல்பட்டு வந்தது.
1960 ஆம் ஆண்டுகளில் இந்த அமைப்பு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் நிருவாகத்திற்கு மாற்றமடைந்தது.
இதன் ஆய்வகம் மும்பையில் அம்பர்நாத்தில் ஒரு குடியிருப்புடன் கூடிய ஒரு தொழில் நுட்ப வளாகமாக அமைந்துள்ளது.
இருந்தாலும், கப்பற்படையின் உடனடித் தேவைகளுக்காக கப்பல் பட்டறையிலேயே ஒரு சிறிய அலுவலகம் இன்றும் செயல்பட்டு வருகிறது.
ஆராய்ச்சி
இந்தியக் கடற்படை பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகம் / NAVAL MATERIALS RESEARCH LABORATORY - NMRL: எரிபொருள் மின்கலம் திறன் பெட்டக தொழில் நுட்பம் (Fuel Cell Power Pack Technology)
கடல்சூழ்நிலைக்கு ஏற்ற மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பம் (Advanced Protection Technology in Marine Environment)
மின்வேதியியல் சார்ந்த மின்வேதியியல் செயல்முறை (Electrochemistry & Electrochemical Processes)
மறைந்து தாக்கும் பொருட்களுடன் கூடிய கூட்டணுத் தொகுப்பு, நெகிழ்ச்சிப் பொருட்கள் சார்ந்த அறிவியல் தொழில் நுட்பம் (Polymer and Elastomer Science and Technology including Stealth Material)
உலோகம் சார்ந்ததும், உலோகம் சாராததும் ஆன சிறப்புப் பொருட்களை பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் (Processing Technologies for Speciality Metallic and Non-metallic Materials)
கடல்சூழ்நிலை கட்டுப்பாட்டிற்கான இரசாயன, உயிரியல் வழிமுறைகள் (Chemical and Biological Control of Marine Environment)
வணிகமயமாக்கிய திட்டங்கள்
இந்தியக் கடற்படை பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகம் / NAVAL MATERIALS RESEARCH LABORATORY - NMRL: உயிரி-பால்மம் ஆக்கி வழிமுறையில் மிதக்கும் எண்ணைக கழிவுகளை நீக்கும் செயல்பாடு, உயிரி- சீர்திருத்த முறையின் அடிப்படையில் செயல்படுவது (Bio-remediation type Bio-emulsifier)
ஆர்செனிக் விலக்கும் கைப்பெட்டி : குடிக்கும் நீரில் கலந்த நச்சுப்பொருளான ஆர்செநிக்கை விலக்கும் வழிமுறையை செயல்படுத்துவதற்கான ஒரு கைப்பெட்டி, வணிக முறையில் வெற்றியாகும்.
ENGLISH
NAVAL MATERIALS RESEARCH LABORATORY - NMRL: The Naval Materials Research Laboratory (NMRL) is a laboratory under the Defense Research and Development Organization (DRDO).
The lab is located at Thane in Mumbai, Maharashtra.
Keeping India's defense needs in mind, this research laboratory has been researching and providing lightweight materials and alloys tailored to the needs of the Indian Navy's materials and alloys.
This lab is the only single window facility for these requirements.
This system d. R. Tea. Operates under the Directorate of Naval Research and Development, operating under O.
At present Dr. J. is its director. Narayan Das acts.
History
NAVAL MATERIALS RESEARCH LABORATORY - NMRL: In 1953, considering the requirements of the Indian Navy, the organization was first established as the Indian Naval Chemical Metallurgical Laboratory at the Naval Dockyard, Mumbai.
In the 1960s the organization was transformed into the Administration of Defense Research and Development Organization.
Its laboratory is located in a technical complex with a residence at Ambernath in Mumbai.
However, a small office still functions in the ship's workshop for the fleet's immediate needs.
Research
NAVAL MATERIALS RESEARCH LABORATORY - NMRL: Fuel Cell Power Pack Technology
Advanced Protection Technology in Marine Environment
Electrochemistry & Electrochemical Processes
Polymer and Elastomer Science and Technology including Stealth Material
Processing Technologies for Specialty Metallic and Non-metallic Materials
Chemical and Biological Control of Marine Environment
Commercialized projects
NAVAL MATERIALS RESEARCH LABORATORY - NMRL: Bio-remediation Type Bio-emulsifier
Arsenic Removal Kit: A kit for implementing a process to remove arsenic, a toxic substance from drinking water, is a commercial success.