24th OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மாமன்னர் ராஜராஜசோழனின் 1038வது சதய விழா தொடங்கியது
- மாமன்னர் ராஜராஜசோழனின் 1038வது சதய விழா நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. தஞ்சை பெரிய கோயிலில் மங்கள இசை, தமிழ்முறைப்படி திருமறை அரங்கத்துடன் சதய விழா தொடங்கியது. ராஜராஜசோழனின் புகழைப் போற்றும் வகையில் பட்டிமன்றம், கருத்தரங்கம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன.
- மத்திய மேற்கு வங்க கடலில் உருவான உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ஹாமூன் என பெயரிடப்பட்டுள்ள நிலையில் வடகிழக்காக நகர்ந்து ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து 400 கி.மீ., தொலைவிலும், மேற்கு வங்கத்தில் திகாவிலிருந்து 550 கி.மீ., தென்மேற்கு திசையிலும் மையம் கொண்டிருந்த இப்புயல் ஒடிசா மாநிலத்தில் பல இடங்களில் மழைப்பொழிவை ஏற்படுத்தியுள்ளது.
- குறிப்பாக கடலோர மாவட்டங்களான கியோஞ்சர், மயூர் பஞ்ச் , அங்குல், கந்தமால், ராயகடா, தேன்கனல், ராயகடா, மல்கங்கிரி ஆகிய பகுதிகள் அதிகப்படியான மழையை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்புயல் அக்டோபர் 25 வங்கதேசத்தில் உள்ள கெபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.