Type Here to Get Search Results !

23rd OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


23rd OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2023க்கான அதிகாரப்பூர்வ தேர்வை இந்தியன் பனோரமா 2023 அறிவித்தது
  • இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் முக்கிய அங்கமான இந்தியன் பனோரமா 25 திரைப்படங்கள் மற்றும் 20 கதையம்சமற்ற திரைப்படங்கள் தேர்வை அறிவித்துள்ளது. 
  • தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் 2023 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறும் 54 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும்.
  • இந்தியன் பனோரமாவை நாடு முழுவதிலுமிருந்து புகழ்பெற்ற நபர்கள் தேர்வு செய்கிறார்கள், இதில் திரைப்படங்களுக்கான மொத்தம் பன்னிரண்டு நடுவர் குழு உறுப்பினர்களும், கதையம்சமற்ற திரைப்படங்களுக்கான ஆறு நடுவர் குழு உறுப்பினர்களும் உள்ளனர்.
  • பன்னிரண்டு உறுப்பினர்களைக் கொண்ட திரைப்பட நடுவர் குழுவுக்கு புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர், தலைவர் திரு டி.எஸ்.நாகபரணா தலைமை தாங்கினார். 
கனிம உற்பத்தி 2023 ஆகஸ்டில் 12.3% அதிகரிப்பு
  • இந்திய சுரங்க பணியகத்தின் தற்காலிக தரவுகளின்படி, 2023 ஆகஸ்ட் மாதத்திற்கான சுரங்கம் மற்றும் குவாரித் துறையின் கனிம உற்பத்தி குறியீடு (அடிப்படை: 2011-12 = 100) 111.9 ஆக உள்ளது, இது 2022 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது 12.3% அதிகமாகும்.
  • அதே நேரத்தில், 2023-24-ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்திற்கான ஒட்டுமொத்த வளர்ச்சி முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 8.3 சதவீதமாகும்.
  • 2023 ஆகஸ்ட் மாதத்தில் முக்கியமான கனிமங்களின் உற்பத்தி நிலை - நிலக்கரி 684 லட்சம் டன், பழுப்பு நிலக்கரி 28 லட்சம் டன், இயற்கை எரிவாயு (பயன்படுத்தப்பட்டது) 3110 மில்லியன் கன மீட்டர், பெட்ரோலியம் (கச்சா) 25 லட்சம் டன், பாக்சைட் 1428 ஆயிரம் டன், குரோமைட் 148 ஆயிரம் டன், தாமிரம் 10 ஆயிரம் டன், தங்கம் 113 கிலோ கிராம், இரும்புத்தாது 181 லட்சம் டன், ஈயம் 30 ஆயிரம் டன், மாங்கனீசு 233 ஆயிரம் டன், துத்தநாகம் 132 ஆயிரம் டன், சுண்ணாம்புக்கல் 365 லட்சம் டன், பாஸ்போரைட் 107 ஆயிரம் டன், மாக்னசைட் 10 ஆயிரம் டன்.
  • 2022- ஆகஸ்ட் மாதத்தைவிட, 2023 ஆகஸ்ட் மாதத்தில் நேர்மறையான வளர்ச்சியைக் காட்டும் முக்கிய கனிமங்கள் - தங்கம் (46.8%), பாஸ்போரைட் (40.7%), மாங்கனீசு தாது (36.9%), தாமிரக் கனிமங்கள் (18.9%), நிலக்கரி (17.8%), இரும்புத் தாது (14.9%), சுண்ணாம்புக்கல் (13.8%), இயற்கை எரிவாயு (பயன்படுத்தப்பட்டது) (9.9%), மாக்னசைட் (4.5%), பெட்ரோலியம் (கச்சா) (2.1%), குரோமைட் (1.4%).
  • முக்கிய கனிமங்களின் எதிர்மறை வளர்ச்சி - பாக்சைட் (-1.5%), துத்தநாகம் (-4.1%), லிக்னைட் (-5.4%), ஈயம் (-15.1%). 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel