21st OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ககன்யான் முதல் சோதனை வெற்றி
- ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதலாவது ஆளில்லா டிவி-டி1 ராக்கெட் இன்று காலை 8 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டிருந்தது.
- இதற்கான 13 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. மோசமான வானிலை காரணமாக காலை 8 மணிக்குப் பதிலாக காலை 8.30 மணிக்கு மாதிரி விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது.
- ஆனால், வானிலை சீராகாததால் 15 நிமிடம் தாமதமாக காலை 8 45 மணிக்கு இறுதிகட்ட கவுன்ட்டவுன் தொடங்கியது. கவுன்ட்டவுன் நிறைவடைய 5 விநாடிகள் இருந்தபோது திடீரென மிஷன் நிறுத்தப்பட்டது.
- கடைசி நேரத்தில் என்ஜினின் எரியூட்டம் நிகழ்வு இயல்பாக இல்லாததால் டிவி-டி1 ராக்கெட்டில் உள்ள கணினி ஏவுதலை தானாக நிறுத்திவிட்டதாகவும், அதில் நடந்த கோளாறு என்ன என்பது கண்டறியப்பட்டு சரி செய்த பின்னர் விரைவில் விண்கலம் ஏவப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சோமநாத் அறிவித்தார்.
- இதன் தொடர்ச்சியாக ராக்கெட்டில் ஏற்பட்ட பிரச்னையை இஸ்ரோ விஞ்ஞானிகள் அடுத்த சில நிமிடங்களில் கண்டறிந்து சரி செய்தனர். காலை 10 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்றும் இஸ்ரோ அறிவித்தது. அதன்படி சரியாக காலை 10 மணியளவில் Crew escape system அமைப்புடன் ககன்யான் திட்டத்திற்கான ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
- 16 புள்ளி 6 கிலோமீட்டர் தூரம் பயணித்ததும் விண்வெளி வீரர்கள் அமரக் கூடிய கலன் பகுதி ராக்கெட்டில் இருந்து தனியாக பிரிந்து சோதனை செய்யப்பட்டது. அதன்பின்னர் பாராசூட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் வங்ககடலில் இறக்கி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
- இந்நிலையில், வங்கக் கடலில் பாதுகாப்பாக தரையிறங்கிய விண்வெளி வீரர்கள் அமரக் கூடிய கலன் பகுதி கடற்படையால் மீட்கப்பட்டது.
- இந்திய ராணுவ பாரம்பரிய விழாவின் முதல் பதிப்பை புதுதில்லியில் பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். உரையாடல்கள், கலை, நடனம், நாடகம், கதை சொல்லல் மற்றும் கண்காட்சிகள் மூலம் பல நூற்றாண்டுகளாக பரிணமித்த இந்தியாவின் வளமான ராணுவ கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதை இந்த இரண்டு நாள் திருவிழா நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இதில் முதன்மையாக புகழ்பெற்ற அறிஞர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் குழு விவாதங்கள் மூலம் வெவ்வேறு புரிதல்களையும் கண்ணோட்டங்களையும் முன்வைக்கும்.
- இந்த நிகழ்வின் போது, நாட்டின் பண்டைய உத்தியிலான புத்திசாலித்தனத்தை சமகால ராணுவ களத்துடன் ஆராய்ந்து ஒருங்கிணைப்பதன் மூலம் உள்நாட்டு உரையாடலை மேம்படுத்துவதற்காக இந்திய ராணுவம் மற்றும் யுனைடெட் சர்வீஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்பான 'புராஜெக்ட் உத்பவ்' திட்டத்தையும் பாதுகாப்பு துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
- மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், கஸ்தூரி காட்டன் பாரத் https://kasturicotton.texprocil.org என்ற இணையதளத்தை இன்று தொடங்கி வைத்தார்.
- கஸ்தூரி காட்டன் பாரத் பிராண்டை உற்பத்தி செய்ய ஜின்னர்களுக்கான பதிவு செயல்முறை மற்றும் பிராண்டட் இந்திய பருத்தியை தனித்துவமாக்கும் அதன் செயல்முறைகளை முன்னிலைப்படுத்துகிறது. இந்த முன்முயற்சிகள் குறித்த தேவையான தகவல்கள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு ஒரு டிஜிட்டல் தளத்தையும் இந்த இணையதளம் வழங்குகிறது
- கஸ்தூரி காட்டன் பாரத் என்பது ஜவுளி அமைச்சகம், இந்திய பருத்தி கார்ப்பரேஷன், வர்த்தக அமைப்புகள் மற்றும் தொழில்துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். இது உலகளாவிய சந்தையில் அதன் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும், சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் நிலையான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் இந்திய பருத்தியின் பிராண்டிங், கண்டுபிடிப்பு மற்றும் சான்றிதழின் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதன் மூலம் சுய ஒழுங்குமுறை கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படுகிறது.
- கஸ்தூரி காட்டன் பாரத் பிராண்டை நிர்ணயிக்கப்பட்ட நெறிமுறைகளின்படி உற்பத்தி செய்ய நாட்டில் உள்ள அனைத்து ஜின்னர்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.