Type Here to Get Search Results !

16th OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


16th OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.செந்தில்குமார், ஜி.அருள் முருகன் பொறுப்பேற்பு
  • சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய கூடுதல் நீதிபதிகளாக, நீதிபதிகள் என்.செந்தில்குமார் மற்றும் ஜி.அருள் முருகன் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இருவருக்கும் தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, பதவிப்பிரமானம் செய்துவைத்தார். 
  • இரண்டு புதிய நீதிபதிகளுடன் சேர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்து. காலியிடங்களின் எண்ணிக்கை 10-ஆக குறைந்துள்ளது.
TiE Delhi-NCR இன் நிலைத்தன்மை உச்சி மாநாடு 2023
  • 2070 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் பின்னணியில், நிலைத்தன்மையின் உணர்வைத் தூண்டும் நோக்கத்துடன், TiE Delhi-NCR, நிலைத்தன்மை உச்சி மாநாட்டை (சஸ்டெய்னபிலிடி சம்மிட்) நடத்தியது.இந்த மாநாட்டில் ஸ்டார்ட்அப் நிறுவனர்கள், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொடர்புடைய பங்குதாரர்களை ஒன்றிணைத்து, நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கண்டுபிடிப்புகள் மற்றும் தீர்வுகள் குறித்த விவாதங்கள் நடந்தன. 
  • இந்த உச்சிமாநாடு TiE Delhi-NCR இன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும். இது நிலைத்தன்மைத் துறையில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டார்ட்அப்களில் கவனம் செலுத்துகிறது. 
  • உணவு மற்றும் நீர் கண்டுபிடிப்பு, நிலையான உற்பத்தி மற்றும் சூழல்கள், இயக்க தீர்வுகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய நிலைத்தன்மையின் பல்வேறு அம்சங்களில் ஆழமான விவாதங்கள் நடந்தன. 
  • வணிக வெற்றி மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பை ஒன்றாகக் கொண்டுவருவது, உற்சாகமான சாத்தியக்கூறுகள் மற்றும் வணிக வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறப்பது ஆகியவை இந்த உச்சிமாநாட்டின் இலக்காகும். 
இந்தியாவில் 2023 செப்டம்பர் மாதத்திற்கான மொத்தவிலைக் குறியீட்டு எண்கள்
  • அகில இந்திய மொத்தவிலைக் குறியீட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட வருடாந்திர பணவீக்க விகிதம் 2023 செப்டம்பர் மாதத்தில் (-)0.26% (தற்காலிகம்) ஆக இருந்தது. 
  • ஆகஸ்டு- 2023-ல் இது (-) 0.52% ஆக இருந்தது. 2023 செப்டம்பரில் பண வீக்கம் குறைந்ததற்கு முக்கிய காரணம் ரசாயனம் மற்றும் ரசாயனப் பொருட்கள், கனிம எண்ணெய்கள், ஜவுளி, அடிப்படை உலோகங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளன.
  • கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு (10.31%) மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலை (0.86%) ஆகஸ்ட் 2023- உடன் ஒப்பிடும்போது 2023 செப்டம்பரில் அதிகரித்தன. கனிமங்கள் (-4.92%) மற்றும் உணவுப் பொருட்களின் விலை (-6.46%) ஆகஸ்ட் 2023-உடன் ஒப்பிடும்போது 2023 செப்டம்பரில் குறைந்துள்ளன.
  • கனிம எண்ணெய்கள் (3.67%), மின்சாரம் (0.51%) ஆகியவற்றின் விலை ஆகஸ்ட் 2023 உடன் ஒப்பிடும்போது 2023 செப்டம்பரில் அதிகரித்தன. ஆகஸ்ட் 2023 உடன் ஒப்பிடும்போது 2023 செப்டம்பரில் நிலக்கரி விலை (-0.65%) குறைந்துள்ளது.
  • மாதந்தோறும் விலை உயர்வுக்கு அடிப்படை உலோகங்கள் முக்கிய காரணமாகின்றன. பிற போக்குவரத்து உபகரணங்கள், உலோகப் பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றின் விலை அதிகரித்தது. 
  • உணவுப் பொருட்கள், மோட்டார் வாகனங்கள், டிரெய்லர்கள் மற்றும் செமி டிரெய்லர்கள், மின் உபகரணங்கள், தோல் மற்றும் தொடர்புடைய தயாரிப்புகள், ரசாயனம் மற்றும் ரசாயனப் பொருட்கள் போன்றவை ஆகஸ்ட், 2023 உடன் ஒப்பிடும்போது 2023 செப்டம்பரில் விலை குறைந்தது.
  • டபிள்யூபிஐ உணவு குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட வருடாந்திர பணவீக்க விகிதம் ஆகஸ்ட், 2023-ல் 5.62 சதவீதத்திலிருந்து 2023 செப்டம்பரில் 1.54 சதவீதமாக குறைந்தது.
இந்தியக் கடற்படைக் கப்பல் பியாஸின் இடைக்கால மேம்பாடு மற்றும் மறுசக்தி ஆக்கத்திற்காக கொச்சி கப்பல்கட்டும் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் 
  • இந்தியக் கடற்படைக் கப்பல் பியாஸின் இடைக்கால மேம்பாடு மற்றும் மறுசக்தி ஆக்கத்திற்காக கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ரூ.313.42 கோடி செலவுபிடிக்கும் ஒப்பந்தத்தில் 2023, அக்டோபர் 16 அன்று கையெழுத்திட்டது.
  • ஐ.என்.எஸ் பியாஸ், பிரம்மபுத்திரா வகை போர்க்கப்பலில் நீராவியிலிருந்து டீசல் உந்துவிசையால் இயக்கப்படும் முதல் போர்க்கப்பல் ஆகும். 2026ஆம் ஆண்டில் இடைக்கால மேம்படுத்தல் மற்றும் மறு-சக்தி பணிகள் நிறைவடைந்ததும் ஐ.என்.எஸ் பியாஸ் நவீன ஆயுதத் தொகுப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட போர்த் திறனுடன் இந்தியக் கடற்படையில் இணையும்.
  • இந்தியக் கடற்படையின் பராமரிப்பு முறையில் மாற்றக்கூடிய முதலாவது மறுசக்தி ஆக்கத் திட்டம் சிறப்பான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இந்தத் திட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படும்; 3500க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகுக்கும்.
  • இந்தத் திட்டம் மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் முன்முயற்சியில் தற்சார்பு இந்தியாவின் பெருமைமிகு அம்சமாக இருக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel