13th OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
காவிரி மேலாண்மை வாரிய கூட்டம்
- தமிழ்நாடு - கர்நாடகா இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை தொடர்பாக, இன்று காவிரி மேலாண்மை வாரிய கூட்டம் நடைபெற்றது.
- அதன்படி, டெல்லியில் காவிரி மேலாண்மை வாரிய தலைவர் எஸ்.கே.ஹெல்தர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது, காவிரியில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- அதன்படி, அக்டோபர் 16ம் தேதி முதல் 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்க காவிரி ஆணையம் ஆணையிட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள யஷோபூமியில் 9 வது ஜி20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டை (பி20) இன்று தொடங்கி வைத்தார். 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலத்திற்கான நாடாளுமன்றங்கள்' என்ற கருப்பொருளுடன் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் பரந்த கட்டமைப்பின் கீழ் இந்த உச்சி மாநாட்டை இந்திய நாடாளுமன்றம் நடத்துகிறது.
- இயற்கையுடன் இணக்கமாக பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை நோக்கிய முன்முயற்சிகள் குறித்து விவாதிப்பதற்காக 12 அக்டோபர் 2023 அன்று லைஃப் (சுற்றுச் சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை) குறித்த உச்சிமாநாட்டிற்கு முந்தைய நாடாளுமன்ற அமைப்பின் கூட்டமும் நடைபெற்றது.