தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள மின்-மாவட்ட மேலாளர் (E- District Manager) பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆள்சேர்க்கை விவரங்கள்
- நிறுவனம் / துறை = தமிழ்நாடு மின் ஆளுமை முகமை
- பதவி = மின்-மாவட்ட மேலாளர்
- இணையதளம் மூலம் விண்ணப்பம் தொடங்கும் நாள் = ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி
- இணையதளம் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் = செப்டம்பர் 11ம் தேதி
வயது தகுதி
- 01- 06-2023 அன்றைய தேதியில் 21 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும்
காலியிடங்கள்
- நாமக்கல் - 1
- நாகப்பட்டினம் - 1
- பெரம்பலூர் - 1
- திருச்சி - 1
- திருப்பூர் - 1
- வேலூர் - 1
- விழுப்புரம் - 1
- காஞ்சிபுரம் - 1
கல்வித் தகுதி
- கணினி அறிவியல் / கணினி அறிவியல் மற்றும் பொறியியல் / தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பி.இ, பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்
- ஏதாவது இளநிலை பட்டத்துடன் எம்.சி.ஏ, எம்.எஸ்.சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாள்
- தேர்வு முறை = கணினி வழி
- தேர்வு நடைபெறும் நாள் = 24.09.2023
விண்ணப்பிக்கும் முறை
- ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்ப கட்டணம் ரூ. 250/-
- tnega என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- ஆள்சேர்க்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். அதேபோன்று, மேற்குறிப்பிட்ட பாடங்களைத் தவிர வேறு துறையில் பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வில் பங்கேற்க முடியாது.
- விண்ணப்பதாரர் கண்டிப்பாக அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான, இருப்பிட சான்றிதழ் அல்லது பிறப்பிட சான்றிதழை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
IMPORTANT LINKS
- விண்ணப்பதாரர்கள் https://tnega-edm.onlineregistrationform.org/TEG/ என்ற இணையதளத்திற்கு வருகை தந்து சமீபத்திய தகவல்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
- மேலும் தெளிவான விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள், பின்வரும் தொலைபேசி என்னிலும் தொடர்பு கொள்ளலாம் 044-40016235.
- மின்னஞ்சல் தொடர்புக்கு edm2023@onlineregistrationform.org ஆகும்.