பிரதமரின் தேசிய தொழிற் பழகுனர் மேளா / PRADHAN MANTRI NATIONAL APPARENTICESHIP MELA
TNPSCSHOUTERSSeptember 07, 2023
0
பிரதமரின் தேசிய தொழிற் பழகுனர் மேளா / PRADHAN MANTRI NATIONAL APPARENTICESHIP MELA: வேலைவாய்ப்பு மற்றும் செய்முறைப் பயிற்சியை ஊக்குவிக்கும் விதமாக, பிரதமரின் திறன் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக, மத்திய திறன் வளர்ச்சி மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், பிரதமரின் தேசிய தொழிற் பழகுனர் மேளா நடத்தி வருகிறது.
இதில் விண்ணப்பதாரர்கள் தொழிற்பழகுனர் மேளாவில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். இந்த ஒரு நாள் மேளா-வில் பல துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் வெவ்வேறு வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் பங்கேற்று, தொழிற் பழகுனர்களை தேர்வு செய்வர்.
மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம், 200-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த மேளாவை நடத்தி, தொழிற்பழகுனர் பயிற்சி மூலம், விண்ணப்பதாரர்களின் வேலைவாய்ப்புக்கு உதவ உள்ளது.
குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து தேர்ச்சி பெற்றிருப்பதுடன், திறன் பயிற்சி சான்றிதழ், ஐடிஐ, டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்துள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மேளாவில் பங்கேற்கலாம்.
மேலும், வெல்டிங், மின்சார பணியாளர் வேலை, வீட்டு பராமரிப்பு, அழகுக்கலை, மெக்கானிக் போன்ற 500-க்கும் மேற்பட்ட தொழிற் பிரிவுகளில், தங்களுக்குப் பிடித்தமான பிரிவை விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யலாம்.
இந்தப் பயிற்சியை முடிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, NCVET எனப்படும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் அங்கீகார சான்றிதழைப் பெறலாம்.
PRADHAN MANTRI NATIONAL APPARENTICESHIP MELA: To promote employment and vocational training, the Union Ministry of Skill Development and Entrepreneurship is conducting the Prime Minister's National Career Fair as part of the Prime Minister's Skill India initiative.
In this the candidates can apply to participate in the professional mela. In this one-day mela, companies from various sectors and people involved in different types of industries will participate and choose professionals.
The Union Ministry of Skill Development is organizing this mela at more than 200 locations to help the candidates in their employment through vocational training.
Candidates who have passed at least 5th to 12th standard and have completed skill training certificate, ITI, diploma or degree can participate in this mela. Also, candidates can choose their favorite category from more than 500 career categories like welding, electrician job, housekeeping, beautician, mechanic etc.
Candidates who complete this training can receive a National Council for Vocational Education and Training (NCVET) accreditation certificate.