Type Here to Get Search Results !

கல்லூரிக் கனவு நிகழ்ச்சி / KALLURI KANAVU PROGRAM

  • கல்லூரிக் கனவு நிகழ்ச்சி / KALLURI KANAVU PROGRAM: “நான்‌ முதல்வன்‌” திட்டத்தின்‌ கீழ்‌ 12ஆம்‌ வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும்‌ “கல்லூரிக் கனவு” நிகழ்ச்சி 25.06.2022 அன்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில்‌ தொடங்கி வைக்கப்பட்டது.
  • இத்திட்டத்தின்‌ நோக்கம்‌, மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ படித்து தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள்‌ தங்களின்‌ எதிர்காலக் கனவினை நனவாக்கும்‌ வகையில்‌ அவர்களின்‌ உயர்கல்விக்கான வாய்ப்புகள்‌ பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள்‌, பட்டயப்படிப்புகள்‌ என்னென்ன உள்ளன என்பதையும்‌, கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும்‌, மேற்படிப்பினை முடித்தவுடன்‌ கிடைக்கும்‌ வேலைவாய்ப்புகள்‌ போன்ற விவரங்கள்‌, புகழ்பெற்ற வல்லுநர்கள்‌ மற்றும்‌ கல்வியாளர்களைக்‌ கொண்டு வழிகாட்டுதல்கள்‌ வழங்கப்பட உள்ளன. 
  • இத்தகைய நிகழ்ச்சிகள்‌ மாணவர்களின்‌ எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும்‌, வெற்றி பெறவும்‌ வழிவகை செய்யும்‌.
  • இந்நிகழ்ச்சியில்‌, உயர்கல்வித்துறை, தொழில்நுட்பக்‌ கல்வி இயக்ககம்‌, அண்ணா பல்கலைக்கழகம்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்‌கழகம்‌, தமிழ்நாடு டாக்டர்‌ அம்பேத்கார்‌ சட்டப்‌ பல்கலைக்கழகம்‌, தமிழ்நாடு டாக்டர்‌ ஜெ. ஜெயலலிதா மீன்வளப்‌ பல்கலைக்‌கழகம்‌, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்‌ பல்கலைக்கழகம்‌, தமிழ்நாடு டாக்டர்‌ எம்‌.ஜி.ஆர்‌. பல்கலைக்கழகம்‌, கல்லூரி இயக்குநரகம்‌ மற்றும்‌ தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகம்‌ சார்பில்‌ அரங்குகள்‌ அமைக்கப்பட்டிருக்கும்.
  • “நான்‌ முதல்வன்‌” திட்டத்தின்‌ கீழ்‌ “கல்லூரிக் கனவு” நிகழ்ச்சியானது அனைத்து மாவட்டங்களிலும்‌ நடைபெறும்‌.

ENGLISH

  • KALLURI KANAVU PROGRAM: The “Kalluri Kanavu (College Dream)” program to guide the students of 12th standard to higher education under the “Naan Mudhalvan” program was launched on 25.06.2022 at Nehru Indoor Stadium, Chennai.
  • The objective of this program is to guide the students who have completed their studies in higher secondary schools to realize their future dreams with details such as section-wise degree courses, diploma courses, how to choose colleges, employment opportunities available after graduation, and guidance from renowned experts and academicians. Such programs enable students to plan their future goals and achieve success.
  • In this event, Department of Higher Education, Directorate of Technical Education, Anna University, Tamil Nadu Agricultural University, Tamil Nadu Dr. Ambedkar Law University, Tamil Nadu Dr. J. Jayalalitha Fisheries University, Tamil Nadu Veterinary Science University, Tamil Nadu Dr. M.G.R. Halls will be set up by the University, College Directorate and Tamil Nadu Skill Development Corporation.
  • "Kalluri Kanavu (College Dream)" program will be held in all the districts under the "Naan Mudhalvan" programme.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel