16th SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
யூஜின் டைமண்ட் லீக் போட்டி - நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளி
- அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தின் யூஜின் சிட்டியில் இன்று (செப்.,17 )நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி நடந்தது.
- இதில் 83.80 மீ. தூரம் எறிந்து இரண்டாவது இடத்தை கைப்பற்றினார். முதல் இடத்தில் செக் குடியரசின் ஜக்குப் வட்லெஜ்ச் தனது இறுதி முயற்சியில் 84.24மீ. தூரம் எறிந்து தங்கம் வென்றார்.
- பின்லாந்தின் ஆலிவர் ஹெலண்டர் 83.74 எறிந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். ஆண்ட்ரியன் மார்டரே (81.79 மீ), கர்டிஸ் தாம்சன் (77.01 மீ), ஆண்டர்சன் பீட்டர்ஸ் (74.71 மீ) ஆகியோர் முறையே நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தைப் பிடித்தனர்.
- அரசு சாரா நிறுவனங்கள்/ தனியார் பள்ளிகள்/ மாநில அரசுகளுடன் இணைந்து 6-ம் வகுப்பு முதல் வகுப்பு வாரியாக 100 புதிய சைனிக் பள்ளிகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த முயற்சியின் கீழ், சைனிக் பள்ளிகள் சங்கம் நாடு முழுவதும் அமைந்துள்ள 19 புதிய சைனிக் பள்ளிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- இந்த முன்முயற்சியின் மூலம் சைனிக் பள்ளி சங்கத்தின் கீழ் கூட்டாண்மை முறையில் செயல்படும் புதிய சைனிக் பள்ளிகளின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
- டெல்லியில் நடைபெற்ற சங்கீத நாடக அகாடமி அம்ரித் விருது வழங்கும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன். 75 வயதுக்கு மேற்பட்ட 70 ஆண்கலைஞர்களும் 14 பெண் கலைஞர்களும் இந்த விருதுகளைப் பெற்றனர்.
- தமிழ்நாட்டிலிருந்து 4 கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. ரூ.1 லட்சம் ரொக்கமும் விருதுப் பட்டயமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
- குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் இவ்விருதுகளை வழங்கினார்.
- மகாராஷ்டிராவிலிருந்து 6 கலைஞர்கள், அசாம் மற்றும் ராஜஸ்தானிலிருந்து தலா 5 கலைஞர்கள் இவ்விருதைப் பெற்றனர். தமிழ்நாடு, மேற்கு வங்கம், பிஹார், ஒடிசா, கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தலா 4 கலைஞர்கள் விருது பெற்றனர்.