Type Here to Get Search Results !

கர்நாடகாவின் ஹொய்சாளா கோவில்கள் / HOYSALA TEMPLES OF KARNATAKA

  • கர்நாடகாவின் ஹொய்சாளா கோவில்கள் / HOYSALA TEMPLES OF KARNATAKA: யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில், கர்நாடகாவின் ஹொய்சாளா கோவில்கள் சேர்க்கப்பட்டுள்ளன.முன்னர், கர்நாடகாவை பல மன்னர் வம்சத்தினர் ஆண்டனர்.
  • அவர்களில் ஹொய்சாளா வம்சத்தினர் சிற்ப கலைக்கு முன்னுரிமை வழங்கி, கோவில்கள் கட்டி வணங்கினர். அந்த வகையில், ஹாசனின் பேலுார், ஹலேபீடு மற்றும் மைசூரின் சோமநாதபுராவில் புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன.
  • பேலுாரில் உள்ள சென்னகேசவா கோவிலும்; ஹலேபீடுவில் உள்ள ஹொய்சாளேஸ்வரா கோவிலும், 12ம் நுாற்றாண்டில் விஷணுவர்த்தனா என்ற மன்னர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. 
  • இதுபோன்று, மைசூரின் சோமநாத்பூரில் காவிரி ஆற்றங்கரையில், 13ம் நுாற்றாண்டில் மூன்றாவது நரசிம்மா காலத்தில் சென்னகேசவா கோவில் கட்டப்பட்டது.
  • இந்த மூன்று கோவில்களும் மிகவும் கலை நயமிக்க சிற்பங்கள் கொண்டுள்ளதால், கண்களுக்கு விருந்தளிக்கின்றன. இவற்றை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்ப்பதற்கு இந்திய அரசு சிபாரிசு செய்திருந்தது.
  • ஆய்வு செய்த யுனெஸ்கோ, நேற்று முன்தினம் பாரம்பரிய பட்டியலில் சேர்ப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தது. 
  • ஹொய்சாளா கோவில்கள் ஏப்ரல் 2014 முதல் யுனெஸ்கோவின் தற்காலிக பட்டியலில் இருந்தன. தற்போது யுனெஸ்கோ நிரந்தர பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • ஹொய்சாளா கோவில்கள் காலத்தால் அழியாத அழகும், இந்தியாவின் வளமான கலாசார பாரம்பரியத்திற்கும், நம் முன்னோர்களின் அசாதாரண கைவினைத் திறனுக்கும் சான்றாகும். யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்த்திருப்பது நாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.

ENGLISH

  • HOYSALA TEMPLES OF KARNATAKA: The Hoysala temples of Karnataka have been included in UNESCO's list of World Heritage Sites. Earlier, Karnataka was ruled by several royal dynasties.
  • Among them the Hoysala dynasty gave priority to sculpture and worshiped by building temples. In that respect, there are famous temples in Hassan's Belur, Halipedu and Somanathapura in Mysore. 
  • Chennakesava temple in Belur; The Hoysalaswara temple at Halebidu was built in the 12th century during the reign of King Visnuvardhana. Thus, the Chennakesava Temple was built in the 13th century during the reign of Narasimha III on the banks of the Cauvery river at Somanathpur, Mysore. 
  • All three temples are a feast for the eyes as they have very artistic sculptures. The Government of India had recommended these to be included in the UNESCO World Heritage List. Hoysala temples were on UNESCO's provisional list since April 2014. Currently included in the UNESCO Permanent List.
  • Hoysala temples are a testament to the timeless beauty and rich cultural heritage of India and the extraordinary craftsmanship of our forefathers. Inclusion in the UNESCO World Heritage List has added pride to the country.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel