Type Here to Get Search Results !

19th SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


19th SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி - வெள்ளி பதக்கம் வென்ற நிஸ்செல்
  • பிரேசில் நாட்டின் ரியோ டிஜெனீரோவில் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. 
  • இதில் இந்திய வீராங்கனை நிஸ்செல் பங்கேற்றார். அபாரமாக தனது திறமையை வெள்ளிப்படுத்திய அவர் 458 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.
  • தான் பங்கேற்ற முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே பதக்கம் வென்று இருப்பதுடன் தகுதிச்சுற்றில் 592 புள்ளிகள் குவித்ததன் மூலம் சக வீராங்கனை அஞ்சும் மோட்ஜிலின் (591 புள்ளி) தேசிய சாதனையையும் முறியடித்துள்ளார். நார்வே வீராங்கனை ஜியானெட்டி ஹிக் டஸ்டாட் 461.5 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார்.
96 ஆண்டுகள் பழமையான நாடாளுமன்றம் 'அரசியல்சாசன அவை' என அழைக்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு
  • நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடம் பற்றி நேற்று முன்தினம் புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி, எம்.பி.க்கள், புதிய நம்பிக்கையுடன் புதிய நாடாளுமன்றத்துக்குள் நுழைவர் என குறிப்பிட்டார். 
  • இந்நிலையில், நாடாளுமன்ற பழைய கட்டிடத்துக்கு பிரியா விடையளிக்கும் வகையில் மைய மண்டபத்தில் நேற்று கடைசியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
  • விநாயகர் சதுர்த்தி புனித நாளில் நாம் இங்கிருந்து விடைபெற்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு செல்கிறோம். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான உறுதியுடனும் தீர்மானத்துடனும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி நாம் செல்கிறோம். 
  • இந்த அவையில்தான் அரசியல் சாசனம் உருவானது. இந்த மைய மண்டபத்தில் நாட்டின் தேசியக் கொடியும், தேசிய கீதமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதை பழைய நாடாளுமன்றம் என நாம் அழைக்கக் கூடாது. 
  • இதை 'சம்விதான் சதன்' (அரசியல்சாசன அவை) என அழைக்க அனுமதிக்கும்படி மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவை தலைவரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். 
  • அதன்பின் அனைத்து எம்.பி.க்களும் பிரதமர் மோடி தலைமையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு நடந்து சென்றனர். 
  • நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடம் ஆங்கிலேய கட்டிடக் கலை நிபுணர்கள் சர் எட்விட் லத் யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் என்பவர்களால் வடிவமைக்கப்பட்டது. 1927-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட பழைய நாடாளுமன்றம் 96 ஆண்டுகள் பழமையானது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel