நாரி சக்தி வந்தன் மசோதா / NARI SHAKTI VANDAN BILL: நாரி சக்தி வந்தன் மசோதா என்பது 128-வது அரசியலமைப்பு திருத்த மசோதா ஆகும். இந்த மசோதா மக்களவை, மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.
இதன்பிறகு நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில் சுமார் 50 சதவீத மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் நாரி சக்தி வந்தன் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.
கடந்த 2021-ம் ஆண்டிலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த கணக்கெடுப்பு காலதாமதமாகி வருகிறது.
வரும் 2027-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட உள்ளன.
புதிய தொகுதிகளின் அடிப்படையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் செய்யப்படும். இதன்படி வரும் 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போதுதான் மசோதா அமலுக்கு வரும்.
சட்ட மசோதா அமலுக்கு வந்த பிறகு 15 ஆண்டுகள் செல்லுபடியாகும். அதன்பிறகு காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம். இவ்வாறு சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மசோதா கடந்து வந்த பாதை
நாரி சக்தி வந்தன் மசோதா / NARI SHAKTI VANDAN BILL: கடந்த 1996-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் தேவகவுடா தலைமையிலான ஆட்சியின்போது முதல்முறையாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால் மசோதா தோல்வி அடைந்ததால் நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. அதே ஆண்டு மக்களவை கலைக்கப்பட்டதால் மசோதா காலாவதியானது.
1998-ல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதும் போதிய ஆதரவு இல்லாததால் மசோதா காலாவதியானது.
கடந்த 1999, 2002, 2003-ம் ஆண்டுகளில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறாமல் போனது. கடந்த 2010-ல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் நிறைவேற்ற முடியவில்லை.
சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற தீவிரம் காட்டப்படுகிறது.
ENGLISH
NARI SHAKTI VANDAN BILL: The Nari Shakti Vandan Bill is the 128th Constitutional Amendment Bill. The bill needs to be passed with the support of two-thirds of the Lok Sabha and Rajya Sabha. After this, the Nari Shakti Vandan Bill should be passed in the legislatures of about 50 percent of the total states in the country.
Census should have been conducted in 2021 itself. But this survey is getting late. It is expected that the census may be conducted in the coming year 2027. Constituencies are then redefined on the basis of population.
The Women's Reservation Bill will be implemented on the basis of new constituencies. According to this, the bill will come into effect only during the Lok Sabha elections in 2029. The Bill will be valid for 15 years after its enactment. After that time can be extended. Legal experts have said this.
The passage through which the bill passed
NARI SHAKTI VANDAN BILL: The Women's Reservation Bill was first introduced in Parliament in 1996 during the then Prime Minister Deve Gowda's regime. But the bill failed and was referred to a joint parliamentary committee. The bill lapsed as the Lok Sabha was dissolved the same year.
In 1998, the Women's Reservation Bill was reintroduced during the regime of former Prime Minister Vajpayee. Even then, the bill lapsed due to lack of support.
In the past years 1999, 2002, 2003, the bill was filed and failed to pass. In 2010, the Women's Reservation Bill was passed in the Rajya Sabha. But it could not be passed in the Lok Sabha.
After about 27 years now Prime Minister Narendra Modi led government is showing seriousness to pass the Women's Reservation Bill.
Check புன்னகை திட்டம்
ReplyDelete