2nd SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்-1
- பூமியில் இருந்து 15 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூரியனை ஆய்வுசெய்ய இஸ்ரோ 2008 ஜனவரியில் 'ஆதித்யா-1' என்ற திட்டத்தை அறிவித்தது.
- இதில், சுமார் 400 கிலோ எடை கொண்ட விண்கலத்தை பூமியில் இருந்து 800 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தி, சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய இஸ்ரோ திட்டமிட்டிருந்தது.
- ஆனால், சூரியனின் வெப்பம் மிகுந்த கரோனா மண்டலத்தை, பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் (Lagrangian Point One) என்ற பகுதியில் இருந்து பார்க்கும்போது, துல்லியமாக ஆய்வு செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் கருதினர்.
- அதற்கேற்ப தொழில்நுட்பத்திலும் நாம் வளர்ச்சி பெற்றதையடுத்து, ஆதித்யா-1 திட்டம் 'ஆதித்யா எல்-1' திட்டமாக மாறியது. இதற்காக ஆதித்யா எல்-1 என்ற அதிநவீன விண்கலத்தை இந்திய விஞ்ஞானிகள் வடி வமைத்தனர்.
- இதில், வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம், வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் பல்கலைக்கழக மையம், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவை முக்கியப் பங்காற்றின.
- ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா விண்கலம் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது.
- சுமார் ஒரு மணி நேரப் பயணத்துக்கு பின்னர், தரையில் இருந்து 648 கி.மீ. உயரம் கொண்ட, குறைந்த புவி தாழ்வட்ட சுற்றுப்பாதையில் ஆதித்யா வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டது.
- கடந்த 2014ம் ஆண்டு ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைத்ததில் இருந்தே, மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் குறித்து வலியுறுத்தி வருகிறது.
- இந்த யோசனையை ஆதரித்து கடந்த 2018ம் ஆண்டு ஒன்றிய சட்ட ஆணையம் வரைவு அறிக்கை சமர்பித்தது. அதில், 'அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மூலம் மட்டுமே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியும். குறைந்தபட்சம் 50 சதவீத மாநிலங்கள் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்' என பரிந்துரைத்தது.
- மேலும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்படும்.
- இந்நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள 8 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை ஒன்றிய சட்ட ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
- முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குழுவின் தலைவராகவும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத், முன்னாள் நிதி கமிஷன் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் தலைமை செயலாளர் சுபாஷ் காஸ்யப், மூத்த வக்கீல் ஹரிஷ் சால்வே மற்றும் முன்னாள் ஊழல் தடுப்பு துறை ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் உயர்மட்ட குழு கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பார். சட்ட விவகார செயலாளர் நிதன் சந்திரா குழுவின் செயலாளராகவும் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே வளமாவூரில், மீன்வளத் துறை சார்பில் ரூ.127.71 கோடி மதிப்பில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
- இதில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலை வகித்தார். இந்தியாவிலேயே இதுதான் முதல் பல்நோக்கு கடற்பாசி பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது.
- மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, என் மண் எனது தேசம் ('மேரா மட்டி மேரா தேஷ்') இயக்கத்தின் கீழ் அமிர்தக் கலச யாத்திரையை புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
- இந்நிகழ்ச்சியில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், மத்திய சட்டம் மற்றும் கலாசாரத் துறை இணை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், கலாசாரம் மற்றும் வெளியுறவுத் துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.