Type Here to Get Search Results !

சூப்பர் ப்ளூ மூன் / SUPER BLUE MOON

சூப்பர் மூன்

  • சூப்பர் ப்ளூ மூன் / SUPER BLUE MOON: நிலவு பூமியை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இந்தப் பாதையில், நிலவு பூமியில் இருந்து மிகத் தொலைவான புள்ளியில் இருக்கும்போது சற்று சிறியதாகத் தோன்றும். இந்தப் புள்ளி பூமியில் இருந்து சராசரியாக 405,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
  • அதுவே நிலவு தனது நீள்வட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது சற்றே பெரிதாகத் தெரியும். இந்தப் புள்ளி பூமியில் இருந்து கிட்டத்தட்ட 363,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
  • இது மனித வரலாற்றில் நாட்காட்டிகள் கடந்து வந்த மாற்றத்தால் நிகழும் ஒரு சக நிகழ்வு மட்டுமே.

ப்ளூ மூன் என்றால் என்ன? 

  • சூப்பர் ப்ளூ மூன் / SUPER BLUE MOON: ப்ளூ மூன் என்பது, ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது முழுநிலவு. இது அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுவதால், ஆங்கிலத்தில் 'ப்ளூ', அதாவது அரிதான நிகழ்வு என்ற அர்த்தத்தில் மேற்குலகில் அழைக்கப்படுகிறது.
  • ஐரோப்பிய காலண்டர் அமைப்பில் ஜூலியஸ் சீசர் மற்றும் அகஸ்டஸ் சீசர் ஆகிய ரோமானிய மன்னர்களின் பெயரில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் அடுத்தடுத்து 31 நாட்களுடன் இணைக்கப்பட்டதால், மாதங்களின் நாட்கணக்குகள் கூடக் குறைய மாறின. 
  • உதாரணத்துக்கு பிப்ரவரி மாதத்துக்கு 29 நாட்கள். ஆனால், நிலவு பூமியைச் சுற்றிவர 29.5 நாட்கள் ஆகிறது. இதனால், ஆங்கில நாட்காட்டியின் படி, ஒரே மாதத்தில் இரண்டு முழுநிலவுகள் வருவது அரிதானது. அதைக் குறிக்கவே இதை 'ப்ளூ மூன்' என்று அழைத்தனர். 
  • உதாரணத்துக்கு வட இந்தியப் பஞ்சாங்கத்தின்படி ஒரு மாதத்துக்கு 29 அல்லது 30 நாட்கள் இருப்பதால், ப்ளூ மூன் என்னும் நிகழ்வு சாத்தியப்படாது. ஆனால் தமிழ் மாதங்கள் சூரியனை அடிப்படையாகக் கொண்டவை. 
  • சில நேரங்களில் தமிழ் மாதங்களுக்கு 32 நாட்கள்கூட இருக்கும். அதனால் தமிழ் மாத அமைப்பின்படி, 'ப்ளூ மூன்' சாத்தியப்படும். ஆனால் தமிழ் கலாசாரத்தில் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. 
  • முக்கியமாக, 'ப்ளூ மூனு'க்கும் நீல வண்ணத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.  ஓர் ஆண்டுக்கு மொத்தம் 12 முழுநிலவுகள். 168 முழுநிலவுகள் நடந்தால்தான் ஒரு 'சூப்பர் ப்ளூ மூன்' நிகழும்.

சூப்பர் ப்ளூ மூன்

  • சூப்பர் ப்ளூ மூன் / SUPER BLUE MOON: மேற்சொன்ன இரண்டு நிகழ்வுகளும் ஒன்றாக நடக்கும் நிகழ்வே 'சூப்பர் ப்ளூ மூன்' என்று அழைக்கப்படுகிறது.
  • அதாவது நிலவு தனது நீள்வட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது, அதுவே மாதத்தின் இரண்டாவது முழுநிலவாக அமைந்து விட்டால், அது சூப்பர் ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகிறது.
  • இது மிக அரிதான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. கடந்த சூப்பர் ப்ளூ மூன் 2009ஆம் ஆண்டு நிகழ்ந்தது. அடுத்த முறை இது 2037ஆம் ஆண்டு தான் நிகழும்.
  • ஓராண்டுக்கு மொத்தம் 12 முழுநிலவுகள். 168 முழுநிலவுகள் நடந்தால்தான் ஒரு 'சூப்பர் ப்ளூ மூன்' நிகழும்.  இனி அடுத்த சூப்பர் ப்ளூ மூன் இன்னும் 14 ஆண்டுகள் கழித்து 2037-ம் ஆண்டு ஜனவரியில்தான் தோன்றும். 

ENGLISH

    Super Moon

    • SUPER BLUE MOON: The Moon orbits the Earth in an elliptical path. In this path, the Moon appears slightly smaller when it is at its farthest point from Earth. This point is at an average distance of 405,500 kilometers from Earth.
    • That's why the Moon appears slightly larger when it comes closest to Earth in its elliptical path. This point is almost 363,300 kilometers from Earth. This is just a co-occurrence of the change that calendars have undergone in human history.

    What is a Blue Moon?

    • SUPER BLUE MOON: A blue moon is the second full moon in a month. Because it is seen as a rare event, it is called 'blue' in the West, meaning 'rare event' in English.
    • In the European calendar system, the months of July and August, named after the Roman emperors Julius Caesar and Augustus Caesar, were combined with consecutive 31 days, so even the calendars of the months became shorter.
    • For example February has 29 days. However, the moon takes 29.5 days to orbit the earth. Thus, according to the English calendar, two full moons in the same month are rare. It is called 'Blue Moon' to indicate that. For example, as a month has 29 or 30 days according to the North Indian almanac, a blue moon is not possible. But Tamil months are based on Surya.
    • Sometimes Tamil months even have 32 days. So according to the Tamil month system, 'Blue Moon' is possible. But it is not given much importance in Tamil culture. Importantly, a 'blue moon' has nothing to do with the color blue. Total 12 full moons in a year. A 'Super Blue Moon' occurs only when 168 full moons occur.

    Super Blue Moon

    • SUPER BLUE MOON: The combination of the above two events is known as 'Super Blue Moon'. That is, when the moon comes closest to the earth in its elliptical path, and it is the second full moon of the month, it is called a super blue moon.
    • This is considered a very rare occurrence. The last Super Blue Moon occurred in 2009. The next time it will happen is in 2037. Total 12 full moons in a year. A 'Super Blue Moon' occurs only when 168 full moons occur. The next Super Blue Moon will be 14 years later in January 2037.

    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Top Post Ad

    Below Post Ad

    Hollywood Movies

    close

    Join TNPSC SHOUTERS Telegram Channel

    Join TNPSC SHOUTERS

    Join Telegram Channel