Type Here to Get Search Results !

29th SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


29th SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

19-வது ஆசிய விளையாட்டு போட்டி - 6ஆம் நாள்
  • 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. முதலில் நடந்த 50மீட்டர் ரைபிள் ஆடவர் குழுப் போட்டியின் இறுதி ஆட்டம் நடந்தது. 
  • அதில் இந்திய வீரர்கள் ஐஸ்வரி பிரதாப் சிங், ஸ்வாப்னில் குசேலே, அஹில் ஷெரோன் ஆகியோர் அடங்கிய குழு 1769புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்தது. கூடவே போட்டியின் 7வது நாளான நேற்று முதல் தங்கத்தை சுட்டு தூக்கியது. தொடர்ந்து ஐஸ்வரி பிரதாப் சிங் நேற்று நடந்த ஆடவர் 50மீட்டர் ரைபிள் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • தொடர்ந்து மகளிர் குழு 10மீட்டர் ஏர் பிஸ்டல் பதக்கப் போட்டி நடந்ததது. அதில் இந்திய வீராங்கனைகள் பாலக் குலியா, ஈஷா சிங், திவ்யா சுப்ராஜூ ஆகியோர் களம் கண்டனர். சீன மகளிர் 1736புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. 
  • இந்திய மகளிர் பாலக், ஈஷா, திவ்யா ஆகியோர் 1721 புள்ளிகள் குவித்து 2வது இடம் பிடித்த வெள்ளியை வசப்படுத்தினர். அதேநேரத்தில் 1723 புள்ளிகள் சேர்த்த தைவான் வெண்கலம் வென்றது.
  • குழுப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனைகள் பாலக் குலியா, ஈஷா சிங் ஆகியோர் தனிநபர் மகளிர் 10மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு பதக்கச் சுற்றில் களமிறங்கினர். ஆரம்பம் முதலே எல்லாச்சுற்றுகளிலும் முன்னிலை வகித்த 17வயதான இந்திய வீராங்கனை பாலக் முதலிடம் பிடித்த தங்கத்தை முத்தமிட்டார். அவர் 242.1புள்ளிகளை குவித்தார். இது நேற்று இந்தியா வென்ற 2வது தங்கமாகும். மற்றொரு இந்திய வீராங்கனை ஈஷா சிங் 239.7 புள்ளிகள் சேர்த்து வெள்ளியை வசப்படுத்தினார். ஈஷாவுக்கு இது நேற்று கிடைத்த 2வது வெள்ளி. மொத்தம் 218.2 புள்ளிகள் பெற்ற துப்பாக்கிச் சுடுதலில் ஒரே நாளில் 2 தங்கம், 3 வெள்ளி என 5 பதக்கங்களை இந்தியா வென்றது. 
  • ஆசிய விளையாட்டில் ஆடவர் இரட்டையர் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு இந்திய இணையான ராம்குமார் ராமநாதன், சாகித் மைநேனி ஆகியோர் முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதிப் படுத்தினர். இறுதி ஆட்டத்தில் அவர்கள் தைவான் இணையான ஜேசன் ஜங், ஷியோ ஷயூ உடன் மோதினர். அதில் தைவான் இணை 6-4, 6-4 என நேர் செட்களில் வென்று தங்கத்தை வசப்படுத்தியது. அதனால் இரண்டாவது இடம் பிடித்த இந்திய இணை வெள்ளியை கைப்பற்றியது.
  • ஸ்குவாஷ் மகளிர் குழுப் போட்டியில் மகளிர் அரையிறுதியில் ஹாங்காங் மகளிர் அணியிடம் வெற்றிப் வாய்ப்பை இழந்த இந்திய வீராங்கனைகள் அனஹட்சிங், தன்வி கன்னா, ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பலிகல் ஆகியோர் வெண்கலத்தை வெற்றனர்.
வெம்பக்கோட்டை 2-ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான குவளை கண்டுபிடிப்பு
  • வெம்பக்கோட்டை வைப்பாற்று கரையோரம் உச்சிமேடு பகுதியில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தொடங்கப்பட்ட இரண்டாம் கட்ட அகழாய்வில், இதுவரை 18 குழிகள் தோண்டப்பட்டு சங்கு, வளையல்கள், தங்க அணிகலன்கள், புகைப்பிடிப்பான் கருவி, சுண்ணாம்பு தடவிய சுடுமண் பானைகள், சில்வட்டுகள் உள்ளிட்ட 4,184 பொருள்கள் கிடைத்தன. இந்த நிலையில், சுடுமண்ணாலான குவளை வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.
  • இதுவரை கிடைத்த பொருள்களை வைத்துப் பாா்க்கும் போது இந்தப் பகுதியில் தொழில்கூடங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் தென்படுவதாக தொல்லியல் துறையினா் தெரிவித்தனா். 
  • மேலும், இந்த மாத இறுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடைய உள்ளதாகவும், இதில் கண்டறியப்பட்ட பொருள்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு, இந்தப் பகுதியில் கண்காட்சியாக வைக்கப்படும் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.
என்எல்சி இந்தியா லிமிடெட் 800 மெகாவாட் மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் கிரிட்கோ லிமிடெட் உடன் கையெழுத்திட்டது
  • நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள என்எல்சி இந்தியா லிமிடெட் (என்எல்சிஐஎல்) மற்றும் புவனேஸ்வரில் உள்ள கிரிட்கோ லிமிடெட் ஆகியவை மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் (பிபிஏ) கையெழுத்திட்டன.
  • என்எல்சி இந்தியா லிமிடெட்டின் முன்மொழியப்பட்ட நெய்வேலி தலபிரா சூப்பர் பவர் கிரிட்டிகல் தெர்மலின் நிலை-1 இல் 400 மெகாவாட் மற்றும் 400 மெகாவாட் நிலை-2 இல் மின்சாரம் பெறுவதற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இந்த ஒப்பந்தத்தின் மூலம், என்எல்சி இந்தியா லிமிடெட் அதன் முழுத் திறனான 2400 மெகாவாட் திறன் கொண்ட நெய்வேலி தலபிரா சூப்பர் கிரிட்டிகல் அனல் மின் நிலையம் நிலை-I ஐ இணைத்துள்ளது.
  • என்எல்சி இந்தியா லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (சிஎம்டி) எம். பிரசன்ன குமார் மோடுபள்ளி மற்றும் கிரிட்கோ லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் த்ரிலோச்சன் பாண்டா மற்றும் கிரிட்கோ லிமிடெட் இயக்குநர் (எஃப்&சிஏ) ஸ்ரீ ககன் பிஹாரி ஸ்வைன் ஆகியோர் முன்னிலையில், மின் கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
பி.டி.ஐ., தலைவராக சாந்த் குமார் தேர்வு
  • பி.டி.ஐ., எனப்படும், 'பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா' செய்தி நிறுவன இயக்குனர்களின் ஆண்டு கூட்டம் புதுடில்லியில் நடந்தது. இதில், பி.டி.ஐ.,யின் புதிய தலைவராக, கே.என்.சாந்த் குமார் தேர்வு செய்யப்பட்டார்.
  • இந்த பதவியை, 'ஆனந்த பஜார் பத்திரிகா'வின் அவீக் சர்க்கார் கடந்த இரண்டு ஆண்டுகளாக வகித்து வந்தார். 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழின் தலைமை செயல் அதிகாரியான பிரவீன் சோமேஷ்வர், துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
  • இவர்கள் இருவரை தவிர, 'தினமலர்' நாளிதழின் இல.ஆதிமூலம், 'டைம்ஸ் ஆப் இந்தியா'வின் வினீத் ஜெயின், 'தி ஹிந்து'வின் என்.ரவி, 'தி எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் விவேக் கோயங்கா, முன்னாள் வெளியுறவுத் துறை செயலர் உட்பட, 16 பேர் பி.டி.ஐ., உறுப்பினர்களாக உள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel