Type Here to Get Search Results !

26th SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


26th SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழ்நாடு சுற்றுலா கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
  • சுற்றுலாத் துறையில் தமிழகத்தை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட 'தமிழ்நாடு சுற்றுலா கொள்கை'யை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
  • இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கா.ராமச்சந்திரன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலாத் துறை செயலர் க.மணிவாசன், இயக்குநர் சந்தீப் நந்தூரி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
51,000 பேருக்கு பணி நியமன ஆணை -  பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக வழங்கினார்
  • மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி தொடங்கிவைத்தார்.
  • இதன்தொடர்ச்சியாக 9-வது ரோஜ்கர் மேளா நாடு முழுவதும் 46 இடங்களில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்று நாடு முழுவதும் 51,000 பேருக்குமத்திய அரசு பணி நியமனத்துக்கான ஆணைகளை வழங்கினார்.
மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமையில் வடக்கு மண்டல கவுன்சிலின் 31-வது கூட்டம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடைபெற்றது
  • பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வடக்கு மண்டல கவுன்சிலின் 31-வது கூட்டம் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. 
  • பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேச முதலமைச்சர்கள், தில்லி, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் துணை நிலை ஆளுநர்கள், சண்டிகர் நிர்வாகி, உறுப்பு மாநிலங்களின் மூத்த அமைச்சர்கள், மத்திய உள்துறை செயலாளர், மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் செயலகத்தின் செயலாளர், வடக்கு மண்டலத்தில் உள்ள உறுப்பு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த பிற மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தாதாசாகேப் பால்கே விருது 2023
  • இந்தியத் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருந்தவர்களுக்கு வழங்கப்படுவது `தாதாசாகேப் பால்கே விருது'. அவ்வகையில், இந்தியச் சினிமாவின் மிக உயரிய விருதான இது, இந்த ஆண்டு பழம்பெரும் நடிகையான வஹீதா ரஹ்மானுக்கு வழங்கப்படும் என ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டி - 3 ஆம் நாள்
  • ஈக்வெஸ்ட்ரியன் எனப்படும் குதிரையேற்ற விளையாட்டில், டிரெஸ்úஸஜ் அணிகள் பிரிவில் இந்தியாவின் சுதீப்தி ஹலிஜா, திவ்யகிருத்தி சிங், விபுல் ஹிருதய் செதா, அனுஷ் அகர்வல்லா ஆகியோர் அடங்கிய அணி 209.205 சதவீத புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தைக் கைப்பற்றியது.
  • சீனா, ஹாங்காங் அணிகள் முறையே அடுத்த இரு பதக்கங்களைப் பெற்றன. 
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் குதிரையேற்றத்தில் இதற்கு முன் கடந்த 1982 எடிஷனில் இந்தியாவுக்கு 3 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. 
  • தனிநபர் ஈவன்டிங் பிரிவில் ரகுவீர் சிங், அணிகள் ஈவன்டிங் பிரிவில் ரகுவீர் சிங், குலாம் முகமது கான், விஷால் சிங், மில்கா சிங் கூட்டணி, தனிநபர் டென்ட் பெக்கிங் பிரிவில் ரூபிந்தர் சிங் பிரார் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றிருந்தனர். 
  • அதன் பிறகு 1986 எடிஷனில் இதே டிரெஸ்úஸஜ் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்ததே கடைசியாக இருந்தது.
  • சேயிலிங் எனப்படும் பாய்மரப்படகுப் போட்டியில் மகளிருக்கான டிஞ்ஜி ஐஎல்சிஏ-4 பிரிவில் நேஹா தாக்குர் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளி பெற்றார்.
  • ஆடவர் விண்ட்சர்ஃபர் ஆர்எஸ் எக்ஸ் பிரிவில் எபாதத் அலி மொத்தமாக 52 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel