தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023 / TAMILNADU TOURISM POLICY 2023
TNPSCSHOUTERSSeptember 27, 2023
0
தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023 / TAMILNADU TOURISM POLICY 2023: சுற்றுலாத் துறை, வேலைவாய்ப்பு அளிப்பதுடன், அன்னியச் செலாவணியை ஈட்டுவதில் முக்கிய பங்காற்றுகிறது. தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதற்கு ஏற்ற இடமாக தமிழகத்தை உயர்த்துவது, சுற்றுலாப்பயணிகள் தங்கும் காலத்தை அதிகரிப்பது, அன்னியச் செலாவணியை ஈர்க்கும் வகையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக்கவரும்வகையிலான வசதிகளை, கட்டமைப்புகளை அதிகப்படுத்தும் வகையில் தமிழ்நாடு சுற்றுலாகொள்கை உருவாக்கப்பட்டுள் ளது. இந்நிலையில், தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுலா கொள்கையை வெளியிட்டார்.
சுற்றுலாத் திட்டங்களுக்கு தொழில் அந்தஸ்து வழங்குவதன் மூலம், தொழில்துறை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதே பலன்கள் சுற்றுலாத் துறைக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
குறிப்பாக, சாகச சுற்றுலா, பொழுதுபோக்கு சுற்றுலா, கேரவன் சுற்றுலா, கிராமப்புற மற்றும்தோட்ட சுற்றுலா, கடலோர சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, கூட்டங்கள், ஊக்கத் தொகைகள், மாநாடுகள் மற்றும்கண்காட்சிகள் சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா மற்றும் திரைப்படச் சுற்றுலா ஆகிய 12 முன்னுரிமை சுற்றுலாப் பிரிவுகளின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகரில் 100 ஏக்கரில் 'தீம் பார்க்'
தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023 / TAMILNADU TOURISM POLICY 2023: தனியார் பங்களிப்பில் சென்னை புறநகரில் 100 ஏக்கரில், அமெரிக்காவில் உள்ள டிஸ்னி தீம் பார்க் போன்ற பூங்காவை அமைக்கசுற்றுலாத் துறை முடிவெடுத்துள்ளது.
சர்வதேச முக்கியத்துவம் பெறும்வகையில் அமைக்கப்படும் இந்த மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்காவில், அட்வென்ச்சர் ரைடிங், குழந்தைகளுக்கான விளையாட்டுகள், பொழுதுபோக்கு அம்சங்கள், செயற்கை நீர்வீழ்ச்சி, சர்வதேச கண்காட்சிகள், விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதுகுறித்த தகவல்கள் சுற்றுலா கொள்கையில் இடம்பெற்றுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருவதற்கு ஏற்ற இடமாக தமிழ்நாட்டை உயர்த்துவதையும், சுற்றுலாப் பயணிகளின் தங்கும் காலத்தை அதிகரிப்பதையும், அன்னிய செலாவணியை ஈர்க்கும் வகையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான வசதிகளை, கட்டமைப்புகளை அதிகப்படுத்தும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு வலுவான அடித்தளத்தையும், மாறிவரும் காலங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்றவாறு முன்னேறும் அணுகுமுறையையும் உறுதி செய்யும் வகையில் ஆராய்ச்சி மற்றும் விரிவான ஆய்வின் அடிப்படையில் இக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை சார்ந்த நிபுணர்கள், சுற்றுலாத் தொழிலில் பல்வேறு தளங்களில் செயல்பட்டு வரும் பங்குதாரர்கள் மற்றும் சுற்றுலா வல்லுநர்களின் பங்களிப்புடன் தமிழ்நாடு சுற்றுலா கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா கொள்கை – 2023ன் சிறப்பம்சங்கள்
1. தொழில் அந்தஸ்து
தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023 / TAMILNADU TOURISM POLICY 2023: இந்தக் கொள்கையானது சுற்றுலாத் திட்டங்களுக்கு தொழில் அந்தஸ்தை வழங்குகிறது, இதன்மூலம் இதுவரை தொழில்துறை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதே பலன்களை சுற்றுலாத் துறைக்கும் விரிவுபடுத்தி, சுற்றுலாத்துறையில் ஈடுபட்டு வரும் பல்வேறு நிலையிலான பங்குதாரர்களின் நீண்டகால கோரிக்கையை சுற்றுலா கொள்கை பூர்த்தி செய்கிறது.
2. முன்னுரிமை சுற்றுலா பிரிவுகள்
சாகச சுற்றுலா, பொழுதுபோக்கு சுற்றுலா, கேரவன் சுற்றுலா, கிராமப்புற மற்றும் தோட்ட சுற்றுலா, கடலோர சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் (MICE) சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா மற்றும் திரைப்படச் சுற்றுலா ஆகிய 12 முன்னுரிமை சுற்றுலாப் பிரிவுகளின் வளர்ச்சியினை நோக்கமாக கொண்டுள்ளது.
நிலைப்படுத்தப்பட்ட சுற்றுலா தலங்கள் மற்றும் வழித்தடங்கள் ஆகியவற்றின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, இந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் மானியங்கள் அளிக்கப்படும்.
3. சுற்றுலாத் திட்டங்களுக்கு ஒற்றைச் சாளர அனுமதி
அனைத்து தகுதியான சுற்றுலா திட்டங்களுக்கும் ஒற்றை சாளர அனுமதியுடன் கூடிய நெறிப்படுத்தப்பட்ட ஒப்புதல் செயல்முறை மேற்கொள்ளப்படும்
4. தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்கு தகுதியான சுற்றுலாத்திட்டங்கள்
தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023 / TAMILNADU TOURISM POLICY 2023: தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக முக்கிய கவனம் செலுத்தும் அடிப்படையில் பொழுதுபோக்கு பூங்காக்கள், பாரம்பரிய ஹோட்டல்கள், அனுபவமிக்க ஓய்வு விடுதிகள், சுற்றுச்சூழல்-குடிசைகள்/ முகாம்கள், ரோப்வேகன்கள், ஆரோக்கிய ஓய்வு விடுதிகள், ஓசியானேரியம் / மீன்வளம், கோல்ஃப் மைதானம், தோட்டம் / பண்ணை சுற்றுலா திட்டங்கள், அருங்காட்சியகங்கள், சாகச சுற்றுலா திட்டம், குரூஸ் சுற்றுலா திட்டம் மற்றும் கேரவன் சுற்றுலா திட்டம் ஆகிய 13 தகுதியான சுற்றுலாத் திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
5. ஊக்கத்தொகை
a. வகை A திட்டப்பணிகள் (ரூ.50 கோடி வரையிலான முதலீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்)
25% அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை மூலதன மானியம் வழங்கப்படும்.
பெண்கள் / எஸ்சி / எஸ்டி / திருநங்கைகள் / மாற்றுத்திறனாளி (திவ்யாங்) நபர்களால் ஊக்குவிக்கப்படும் திட்டங்களுக்கு 5% அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கூடுதல் மூலதன மானியம் வழங்கப்படும்.
நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு 5% அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை கூடுதல் மூலதன மானியம் வழங்கப்படும்.
குறு நிறுவனங்களுக்கு 10% அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கூடுதல் மூலதன மானியம் வழங்கப்படும்.
20 நபர்களுக்கு மேல் வேலை வழங்கும் நிறுவனங்களில் உள்ள பணியாளர்களுக்கு ஊதிய ஊக்கத்தொகை ஆண்டொன்றுக்கு ரூ.24,000 வீதம் ஒரு பணியாளருக்கு 3 ஆண்டுகள் வரை வழங்கப்படும்.
குறு/சிறு நிறுவன, புதிய மற்றும் விரிவாக்க சுற்றுலாத் திட்டங்களுக்கான வட்டி மானியத்தை திரும்ப பெறுவதற்கும், தேசிய மற்றும் பன்னாட்டு தரச்சான்றிதழ்கள் பெறுவதற்கான மானியமும் வழங்கப்படும்.
b. வகை B திட்டப்பணிகள் (ரூ.50 கோடி முதல் 200 கோடி வரையிலான முதலீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்)
தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023 / TAMILNADU TOURISM POLICY 2023: 5% அதிகபட்சமாக ரூ. 3 கோடி வரை மூலதன மானியம் வழங்கப்படும்.
20 பேருக்கு மேல் வேலை வழங்கும் நிறுவனங்களில் உள்ள பணியாளர்களுக்கு ஊதிய ஊக்கத்தொகை ஆண்டொன்றுக்கு ரூ.24,000 வீதம் ஒரு பணியாளருக்கு 3 ஆண்டுகள் வரை வழங்கப்படும்.
தேசிய தரச்சான்றிதழ்கள் பெறுவதற்கு ரூ.2 இலட்சம் வரையிலான மானியமும், பன்னாட்டு தரச்சான்றிதழ்கள் பெறுவதற்கு ரூ.10 இலட்சம் வரையிலும் மானியம் வழங்கப்படும்.
நிறுவனங்களில் பசுமை முன் முயற்சி திட்டங்களுக்கான ஊக்கத்தொகையாக 25 சதவீதம், அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் வரை வழங்கப்படும்.
c. வகை C திட்டப்பணிகள் (ரூ.200 கோடிக்கு மேலான முதலீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்)
நிறுவனங்களின் திட்டங்கள் அடிப்படையில் கட்டமைப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
நிறுவன பயன்பாட்டிற்கான மின்கட்டணம் முக்கிய சுற்றுலாத்தலங்களில் புதிய விடுதிகளுக்கு வணிக மின் கட்டணம் மற்றும் நிறுவன மின் கட்டண வித்தியாச தொகை முதலீட்டுத் தொகையில் 10% வரை அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு திரும்ப வழங்கப்படும்.
ரூ.200 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள மற்றும் குறைந்தபட்சம் 50 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் புதிய திட்டங்களுக்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி செலுத்திய சான்றிதழ் ஆய்வு அடிப்படையில், மின் பயன்பாட்டில் கட்டணச் சலுகைகள் அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு திரும்ப வழங்கப்படும்.
ENGLISH
TAMILNADU TOURISM POLICY 2023: Tourism sector plays an important role in generating employment and earning foreign exchange. The government is implementing various schemes to improve the tourism sector in Tamil Nadu.
In this case, the Tamil Nadu Tourism Policy has been developed to promote Tamil Nadu as a suitable place for tourists to visit throughout the year, to increase the length of stay of tourists, and to increase the facilities and structures to attract foreign tourists. In this case, Chief Minister M.K.Stalin released the tourism policy at the Secretariat.
By granting industrial status to tourism projects, the same benefits reserved for industrial projects are extended to the tourism sector.
Specifically, 12 priority tourism sectors are adventure tourism, recreational tourism, caravan tourism, rural and horticultural tourism, coastal tourism, cultural tourism, medical and wellness tourism, spiritual tourism, eco-tourism, meetings, incentives, conferences and exhibitions tourism, heritage tourism and film tourism. Created with an eye towards the development of sections.
'Theme Park' on 100 acres in the outskirts of Chennai
TAMILNADU TOURISM POLICY 2023: The tourism department has decided to build a park similar to the Disney theme park in America on 100 acres in the outskirts of Chennai with private contribution. This largest amusement park, which is set up to gain international importance, will have adventure riding, children's games, entertainment features, artificial waterfall, international exhibitions, sports arenas.
Information about this is contained in the tourism policy. The Tamil Nadu government has decided to implement this scheme in the next 5 years.
The Tamil Nadu Tourism Policy has been developed to promote Tamil Nadu as a suitable destination for tourists throughout the year, to increase the length of stay of tourists and to increase the facilities and structures to attract foreign tourists to attract foreign investment.
The policy has been developed based on research and extensive study to ensure a strong foundation and a progressive approach to suit the changing times and needs.
The Tamil Nadu Tourism Policy has been developed with the participation of tourism experts, stakeholders and tourism professionals working at various platforms in the tourism industry.
Highlights of Tamil Nadu Tourism Policy – 2023
1. Career status
TAMILNADU TOURISM POLICY 2023: The policy provides industry status to tourism projects, thereby extending the same benefits to the tourism sector as hitherto reserved for industrial projects, meeting the long-standing demand of various stakeholders involved in the tourism sector.
2. Priority tourism categories
Adventure Tourism, Recreational Tourism, Caravan Tourism, Rural and Garden Tourism, Coastal Tourism, Cultural Tourism, Medical and Wellness Tourism, Spiritual Tourism, Eco Tourism, Meetings, Incentives, Conferences and Exhibitions (MICE) Tourism, Heritage Tourism and Film Tourism 12 Aims at development of priority tourism sectors.
Priority will be given to the development of established tourist destinations and routes and incentives and subsidies will be provided for projects undertaken in these areas.
3. Single window clearance for tourism projects
TAMILNADU TOURISM POLICY 2023: A streamlined approval process with single window clearance will be undertaken for all eligible tourism projects
4. Eligible tourism projects to encourage private investment
TAMILNADU TOURISM POLICY 2023: Main focus for promoting private investment is based on amusement parks, heritage hotels, experiential resorts, eco-lodges/camps, ropeways, wellness resorts, oceanarium/aquarium, golf course, garden/farm tourism projects, museums, adventure tourism project, cruise tourism. Scheme and Caravan Tourism Scheme 13 eligible tourism schemes have been selected.
5. Incentives
A. Category A projects (Projects to be implemented with an investment of up to Rs. 50 crores)
25% capital subsidy up to a maximum of Rs.1.50 crore.
Additional capital subsidy of 5% up to a maximum of Rs.5 lakh will be given to projects promoted by Women / SC / ST / Transgender / Persons with Disabilities (Divyang).
5% additional capital subsidy up to a maximum of Rs.25 lakhs for expansion of companies.
Additional capital subsidy of 10% up to a maximum of Rs.5 lakh will be given to micro enterprises.
Wage incentives for employees in establishments employing more than 20 persons will be provided at the rate of Rs.24,000 per annum per employee for up to 3 years.
Interest subsidy for micro/small enterprise, new and expansion tourism projects and subsidy for obtaining national and international certifications.
B. Category B projects (Projects to be implemented with an investment of Rs.50 crore to Rs.200 crore)
5% to a maximum of Rs. A capital grant of up to 3 crores will be provided.
Wage incentives for employees in establishments employing more than 20 persons will be provided at the rate of Rs.24,000 per year per employee for up to 3 years.
A subsidy of up to Rs.2 lakh will be given for obtaining national certificates and up to Rs.10 lakh for obtaining international certificates.
25 per cent incentive up to a maximum of Rs 25 lakh for green initiatives in companies.
C. Category C Projects (Projects to be implemented with an investment of more than Rs. 200 crores)
Structural incentives will be provided based on the schemes of the companies.
Electricity charges for corporate use For new hotels in major tourist destinations, the difference between commercial electricity charges and corporate electricity charges will be refunded up to 10% of the investment amount for a maximum period of 3 years.
For new projects with an investment of more than Rs.200 crore and providing employment to at least 50 persons, tariff concessions on electricity usage will be granted for a maximum period of 3 years, based on a certificate survey paid by the Labor Provident Fund.