Type Here to Get Search Results !

24th SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


24th SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 - 2-ம் நாள்
  • ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. 2-ம் நாள் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா 3 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.
  • ஆடவர் லைட்வெயிட் இரட்டையர் துடுப்புப் படகுப் போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் லால் ஜாட், அரவிந்த் சிங் ஜோடி 2-வதாக வந்து வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்தப் பிரிவில் சீனாவின் ஜுன்ஜி ஃபேன், மான் சுன் ஜோடி தங்கமும், உஸ்பெகிஸ்தானின் ஷாக்சோத் நுர்மடோவ், சோபிர்ஜான் சபரோலியேவ் ஜோடி வெண்கலமும் கைப்பற்றியது.
  • 8 பேர் பங்கேற்கும் துடுப்புப் படகுப் போட்டியில் நீரஜ், நரேஷ்க் கல்வானியா, நீத்திஷ் குமார், சரண்ஜீத் சிங், ஜஸ்விந்தர் சிங், பீம்சிங், புனீத் குமார், ஆசிஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 2-வது இடம்பிடித்து வெள்ளியைக் கைப்பற்றியது.
  • காக்ஸ்லெஸ் ஜோடி பிரிவில் இந்தியாவின் பாபுலால் யாதவ், லேக் ராம் ஜோடி 3-வது இடம் பிடித்து வெண்கலத்தைத் தட்டிச் சென்றது. இதன்மூலம் துடுப்புப் படகுப் போட்டியில் மட்டும் 3 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியது.
  • துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ரமிதா ஜிண்டால் 3-வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.
  • மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிப் பிரிவில் இந்தியாவின் ரமிதா, மெகுலி கோஷ், ஆஷி சோக்சி ஆகியோர் அடங்கிய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது. 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவிலும், அணிப் பிரிவிலும் 19 வயதான இந்திய வீராங்கனை ரமிதா பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 2-ம் நாள் முடிவில், இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
கீழடி அகழாய்வு - முதுமக்கள் தாழியில் கிடைத்த சிவப்பு மணிகள்
  • சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் மத்திய, மாநில அரசுகளின் மூலம் ஏற்கனவே எட்டு கட்டங்களாக தொல்லியல் அகழாய்வு நடத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
  • அவற்றில் பெரும்பாலானவை கீழடி அருங்காட்சியகத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கீழடி மற்றும் அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம் உள்ளிட்ட இடங்களில் ஒன்பதாம் கட்ட அகழாய்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  • இதிலும், ஏராளமான பொருட்கள், அகழாய்வு குழிகளை தோண்டும்போது கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஒன்பதாம் கட்ட அகழாய்வின் போது கார்னிலியன் கல் வகையை சார்ந்த இரண்டு உயர்வகை சிவப்பு கல்மணிகள் முதுமக்கள் தாழிக்குள் கண்டறியப்பட்டுள்ளது.
  • தற்போது, கண்டுபிடிக்கப்பட்ட மணியானது அலை, அலையான வரி வடிவத்துடன் வேலைப்பாடுகளுடன் கிடைத்துள்ளது. இந்த மணியின் நீளம் 1.4 செ.மீ., மற்றும் அதன் விட்டம் 2 செ.மீ. ஆக உள்ளது.
9 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
  • பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் 9 வந்தே பாரத் ரயில்களை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் இணைப்பை மேம்படுத்துவதற்கும் ரயில் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதற்கும் பிரதமரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதற்கான ஒரு முன்னெடுப்பாகும். 
கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்ட புதிய ரயில்கள்
  • உதய்பூர் - ஜெய்ப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
  • திருநெல்வேலி-மதுரை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
  • ஹைதராபாத் - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
  • விஜயவாடா - சென்னை (ரேணிகுண்டா வழியாக) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
  • பாட்னா - ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
  • காசர்கோடு - திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
  • ரூர்கேலா - புவனேஸ்வர் - பூரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
  • ராஞ்சி - ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
  • ஜாம்நகர்-அகமதாபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel