Type Here to Get Search Results !

23rd SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


23rd SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

கோலாகலமாக தொடங்கியது ஆசிய விளையாட்டு போட்டி
 • 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் உள்ள லோட்டஸ் மைதானத்தில் வண்ணமயான நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது.
 • செயற்கை நுண்ணறிவு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பம் ஆகியவற்றின் கூறுகளை ஒருங்கிணைத்து கண்கவர் தொடக்க விழாவுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. 
 • சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற விழாவில் தொழில்நுட்பம், சீனாவின் கலாச்சார வரலாறு மற்றும் கண்டத்தின் ஒற்றுமையின் உணர்வு ஆகியவை பிரதிபலித்தன.
 • 'ஆசியாவில் அலைகள் எழுச்சியடைகின்றன' என்ற முக்கிய கருப்பொருளுக்கு ஏற்ப, தொடக்க விழாவில் புதிய சகாப்தத்தில் சீனா, ஆசியா மற்றும் உலகம் ஒன்றிணைவது, ஆசிய மக்களின் ஒற்றுமை, அன்பு ஆகியவை கண்கவர் நிகழ்ச்சிகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டன. தொடக்க விழா நிகழ்ச்சிகளை காண மைதானத்தில் சுமார் 80,000 பேர் திரண்டிருந்தனர்.
 • வண்ணமயமான நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும் விழா மேடையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் போட்டிக்கான தீபம் ஏற்றபட்டது. தொடர்ந்து சீன அதிபர் ஜி பின்பிங், ஆசிய விளையாட்டு போட்டி தொடங்குவதாக முறைப்படி அறிவித்தார்.
 • 19-வது ஆசிய விளையாட்டு போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். வரும் அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெற இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து 655 பேர் பங்கேற்கின்றனர். 
 • தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியா 8-வது நாடாக வலம் வந்தது. இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைய்ன் ஆகியோர் இணைந்து தேசிய கொடியை ஏந்திச் சென்றனர். அவர்களுடன் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த 100 வீரர், வீராங்கனைகள் அணிவகுத்து வந்தனர்.
 • ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு ஆசிய விளையாட்டு பெரிய அளவிலான போட்டியாக திகழ்கிறது. 2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போடடியில் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில் தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஹாங்சோ ஆசிய விளையாட்டில் பங்கேற்றுள்ளனர். 
 • ஆசிய விளையாட்டுபோட்டியானது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றாக அமைந்துள்ளதால் இந்த போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. 
 • ஆசிய விளையாட்டு போட்டியில் 45 நாடுகளை சேர்ந்தவீரர், வீராங்கனைகள் 40 விளையாட்டுகளில் 61 பிரிவுகளில் 481 தங்கப் பதக்கங்களை வெல்ல கடுமையாக போராட உள்ளனர்.
உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்படும்
 • உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.
 • குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.
 • தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும். 
உபியின் வாரணாசியில் ரூ.450 கோடியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அடிக்கல் நாட்டினார் மோடி
 • பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க நேற்று சென்றார். அங்கு, ராஜாதலாபியில் ரூ.450 கோடி செலவில் கட்டப்பட உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார். 
 • இவ்விழாவில், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் ரோஜர் பின்னி, துணைத்தலைவர் ராஜிவ் சுக்லா மற்றும் செயலாளர் ஜெய் ஷா, கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி மற்றும் திலீப் வெங்சர்கார் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
 • நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர், பிரதமர் மோடிக்கு இந்திய அணியின் டீசர்ட் ஒன்றை நினைவுப்பரிசாக வழங்கினார். டீசர்ட் பின்புறத்தில் நரேந்திர மோடி என்பதன் சுருக்கமாக 'நமோ' என்றும், 1ம் எண்ணும் அச்சிடப்பட்டிருந்தது. 
 • இந்த ஸ்டேடியத்திற்கான நிலத்தை வழங்க உபி ரூ.121 கோடி செலவிட்டுள்ளது. ஸ்டேடியம் கட்டுமான பணிக்காக பிசிசிஐ ரூ.330 கோடி செலவிடும். கட்டுமான பணிகள் முடிந்து 2025 டிசம்பரில் ஸ்டேடியம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • சிவபெருமானை மையமாக வைத்து இந்த மைதானம் கட்டப்பட உள்ளது. இதன் மேற்கூரை சிவன் தலையில் உள்ள பிறை போன்ற வடிவத்திலும், உயர்கோபுர மின் விளக்குகள் திரிசூலம் வடிவிலும், மீடியாக்களுக்கான அரங்கம் உடுக்கை போலவும், கேலரிகள் கங்கை படித்துறை வடிவிலும் அமைக்கப்பட உள்ளன.
 • உத்தரப்பிரதேசத்தில் கட்டப்படும் 3வது கிரிக்கெட் மைதானம் இது. ஏற்கனவே லக்னோ மற்றும் கான்பூரில் கிரிக்கெட் மைதானங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
புதுதில்லியில் 'சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு 2023'ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்
 • புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 'சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு 2023' ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு சட்டத் தலைப்புகளில் அர்த்தமுள்ள உரையாடல் மற்றும் கலந்துரையாடலுக்கான தளமாக செயல்படுவதையும், கருத்துக்கள் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதை ஊக்குவிப்பதையும், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் சட்ட சிக்கல்கள் குறித்த புரிதலை வலுப்படுத்துவதையும் இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
 • சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு 2023 இந்திய பார் கவுன்சிலால் 'நீதி வழங்கல் அமைப்பில் வளர்ந்து வரும் சவால்கள்' என்ற தலைப்பில் 2023 செப்டம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 • தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு சட்டத் தலைப்புகளில் அர்த்தமுள்ள உரையாடல் மற்றும் கலந்துரையாடலுக்கானத் தளமாக செயல்படுவதையும், கருத்துக்கள் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதை ஊக்குவிப்பதையும், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் சட்ட சிக்கல்கள் குறித்த புரிதலை வலுப்படுத்துவதையும் இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. 
 • நாட்டிலேயே முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் வளர்ந்து வரும் சட்டப் போக்குகள், எல்லை தாண்டிய வழக்குகளில் உள்ள சவால்கள், சட்ட தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் சட்டம் போன்ற தலைப்புகளில் விவாதிக்கப்படும்.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான உயர்மட்டக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது
 • நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான பிரச்னைகள் குறித்து ஆராய்ந்து அதன் மீது பரிந்துரைகளை வழங்குவதற்காக செப்டம்பர் 2ஆம் தேதி உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.
 • உயர்மட்டக்குழுவின் முதல் கூட்டம் அதன் தலைவர் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா, மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோர் பங்கேற்றனர்.
 • மேலும் மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதி ஆணையத்தின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் டாக்டர் சுபாஷ் சி.காஷ்யப், முன்னாள் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
 • மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே இணைய வழியில் கூட்டத்தில் கலந்து கொண்டார். மக்களவை தனிப்பெரும் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
 • உயர்மட்டக் குழுவின் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் குழு உறுப்பினர்களை வரவேற்று பேசியதுடன் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து விளக்கினார்.
 • அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசியல் கட்சிகள், மாநில அரசியல் கட்சிகள், நாடாளுமன்றத்தில் பிரதிநித்துவம் கொண்ட அரசியல் கட்சிகள், பிற அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சிகள் ஆகியவற்றிடம் நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனைகள், கருத்துக்களைப் பெறுவது தொடர்பான கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 
 • மேலும், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து இந்திய சட்ட ஆணையம் தனது ஆலோசனைகள், கருத்துக்களை தெரிவிக்கவும் குழு அழைப்பு விடுக்க உள்ளது.
மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் எஸ் பூரி திங்கள்கிழமையன்று முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் செல் பேருந்தை தொடங்கி வைக்கிறார்
 • மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, வரும் திங்கள் கிழமையன்று (செப்டம்பர் 25) தில்லியில் உள்ள கடைமைப் பாதையில் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் செல் பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
 • தில்லி, ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட வழித்தடங்களில் பசுமை ஹைட்ரஜனால் இயக்கப்படும் 15 எரிபொருள் செல் பேருந்துகளை இயக்கி சோதனை மேற்கொள்வதற்கான திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் தொடங்கியுள்ளது.
 • இந்தத் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 2 எரிபொருள் செல் பேருந்துகள் 25.09.2023 (திங்கட்கிழமை) அன்று இந்தியா கேட்டில் இருந்து இயக்கப்படவுள்ளன. இந்தியாவின் இந்த முதல் முயற்சியில் எரிபொருள் செல் பேருந்துகளுக்கு 350 பார் என்ற ஆற்றல் அடர்த்தியில் பசுமை ஹைட்ரஜன் விநியோகிக்கப்பட உள்ளது.
 • சோலார் பி.வி பேனல்களைப் பயன்படுத்தி மின்னாற்பகுப்பிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பசுமை ஹைட்ரஜனுக்கு எரிபொருள் நிரப்பக்கூடிய அதிநவீன விநியோக வசதி இந்தியன் ஆயில் நிறுவனத்தின், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான ஃபரிதாபாத் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
 • 2 பேருந்துகளும் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் செயல்திறன் மற்றும் ஆயுட்காலம் குறித்த நீண்ட கால மதிப்பீட்டிற்காக அனைத்து பேருந்துகளிலும் 3 லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமான பயண தூரம் மதிப்பீடு செய்யப்படும்.
 • இந்தக் கடுமையான சோதனைகள் மூலம் உருவாக்கப்படும் தரவுகள் பசுமை ஹைட்ரஜனால் இயக்கப்படும் நாட்டில் பூஜ்ஜிய உமிழ்வு இயக்கத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு தேசிய களஞ்சியமாக செயல்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel