Type Here to Get Search Results !

22nd SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


22nd SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

இந்தியா இந்தோனேஷியா ஆஸ்திரேலியா முத்தரப்பு கடற்பயிற்சியில் இந்திய கடற்படை கப்பல் சஹ்யாத்ரி பங்கேற்பு
  • இந்திய கடற்படையின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல் ஐ.என்.எஸ் சஹ்யாத்ரி, இந்தோ-பசிபிக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 
  • ராயல் ஆஸ்திரேலிய கடற்படை (ஆர்.ஏ.என்) மற்றும் இந்தோனேசிய கடற்படையின் கப்பல்கள் மற்றும் விமானங்களுடன்  செப்டம்பர் 20 முதல் 21 வரை முதல் முத்தரப்பு கடல்சார் கூட்டாண்மை பயிற்சியில் அந்தக் கப்பல்  பங்கேற்றது.
  • இந்த முத்தரப்பு பயிற்சி மூன்று கடல்சார் நாடுகளுக்கும் தங்கள் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், நிலையான, அமைதியான மற்றும் பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை ஆதரிப்பதற்கான கூட்டுத் திறனை மேம்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்கியது. 
  • இந்தப் பயிற்சியில் பங்கேற்ற கடற்படைகள் ஒருவருக்கொருவர் பெற்ற அனுபவம் மற்றும் நிபுணத்துவத்திலிருந்து பயனடைய வாய்ப்பளித்தது. சிக்கலான உத்திகள் மற்றும் வியூகப்  பயிற்சிகள், குறுக்கு-டெக் வருகைகள் மற்றும் ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர்களின் குறுக்கு-டெக் தரையிறக்கங்கள் ஆகியவை பணியாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்கும் ஒருவருக்கொருவர் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் நடத்தப்பட்டன.
  • உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட புராஜெக்ட் -17 வகுப்பு மல்டிரோல் ஸ்டெல்த் போர்க்கப்பல்களின் மூன்றாவது கப்பலான ஐ.என்.எஸ் சஹ்யாத்ரி, மும்பையின் மசாகான் டாக் லிமிடெட்டில் கட்டப்பட்டது, இது கேப்டன் ராஜன் கபூரால் வழிநடத்தப்பட்டது.
ரயில் விபத்துகளில் சிக்கி இறந்தப் பயணிகளின் வாரிசுகளுக்கும் வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரயில்வே அமைச்சகம் மாற்றியமைத்துள்ளது
  • ரயில்வே சட்டம், 1989, பிரிவு 124 மற்றும் 124-ஏ-ன் கீழ் வரையறுக்கப்பட்டபடி ரயில் விபத்துகள் மற்றும் அசம்பாவித சம்பவங்களில் இறந்தப் பயணிகளின் வாரிசுகளுக்கும் காயமடைந்தவர்களுக்கும், ஆட்களால் பராமரிக்கப்படும் லெவல் கிராசிங் கேட் விபத்தில் ரயில்வேயின் பூர்வாங்கப் பொறுப்பு இருக்குமானால், விபத்தில் சிக்கிய சாலைப் பயனர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை மாற்றியமைக்கவும் ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
  • இதன்படி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குக் கருணைத் தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும். கடுமையான காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் கருணைத் தொகையாக வழங்கப்படும்.
  • அசம்பாவித சம்பவங்களில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம், கடுமையான காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் கருணைத் தொகையாக வழங்கப்படும்.
  • ஆட்களால் பராமரிக்கப்படும் லெவல் கிராசிங் கேட் விபத்தில் ரயில்வேயின் பூர்வாங்கப் பொறுப்பு இருக்குமானால், விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சாலைப் பயனரின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும். கடுமையான காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் கருணைத் தொகையாக வழங்கப்படும்.
  • ரயில் விபத்தில் கடுமையாக காயமடைந்தப் பயணிகள் 30 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால், நாள் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரம் வீதம், 10 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு செல்லும் நாள் வரை கருணைத் தொகை வழங்கப்படும். 
  • அசம்பாவித சம்பவங்களில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் 6 மாதங்கள் வரை அல்லது சிகிச்சை முடிந்து வீட்டுக்கு செல்லும் நாள் வரை நாள் ஒன்றுக்கு ரூ. 1500 வீதம் 10 நாட்களுக்கு ஒரு முறை விடுவிக்கப்படும்.
  • தொடக்க நிலை செலவுகளுக்காக அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம் வரை ரொக்கமாக வழங்கப்படும். எஞ்சிய தொகை கணக்கு வைத்திருப்பவருக்கு மட்டும் வழங்கும் வகையிலான காசோலையாக அளிக்கப்படும்.
பொருளாதார வளர்ச்சி 6.50 சதவீதமாக இருக்கும் - மத்திய நிதி அமைச்சகம்
  • வலுவான உள்நாட்டு தேவை, நுகர்வு மற்றும் முதலீடு காரணமாகவே, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதாரம் 7.80 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது. 
  • கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் பருவமழை பற்றாக்குறையால் பயிர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். 
  • எனினும், செப்டம்பர் மாதத்தில் பெய்து வரும் மழை, ஆகஸ்ட் மாத பற்றாக்குறையை ஓரளவு சரி செய்து விட்டது. பங்குச் சந்தையில் ஏற்படக்கூடிய மாற்றங்களினால் வரக்கூடிய சிக்கல்கள் எப்போதும் நிலவக் கூடியவையே.
  • இவற்றின் தாக்கத்தை குறைக்கும் வகையில், மேம்பட்டு வரும் பெரு நிறுவனங்களின் லாபம், தனியார் துறையின் மூலதன உருவாக்கம், வங்கிகள் வழங்கும் கடன்கள் அதிகரிப்பு மற்றும் கட்டுமானத் துறையின் நடவடிக்கைகள் இருக்கின்றன. 
  • இதன் காரணமாகவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. மூலதன செலவுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் வழங்கி வருவதாலேயே உள்நாட்டு முதலீடு அதிகரித்துள்ளது. 
  • மேலும், இது மாநில அரசுகளையும், அவற்றின் மூலதன செலவை அதிகரிக்க உத்வேகம் அளித்துள்ளது. சேவை துறை ஏற்றுமதி அதிகரித்துள்ளதால், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிகர ஏற்றுமதியின் பங்கு, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் அதிகரித்துள்ளது. 
  • வங்கி துறையை பொறுத்தவரை, வாராக்கடன்கள் குறைந்துவருகின்றன. மார்ச் 2023 தரவுகளின்படி, வங்கிகள் அல்லாத பிற நிதி நிறுவனங்களின் லாபமும், அவர்கள் துணிந்து மேற்கொள்ளும் முடிவுகளும் அதிகரித்து உள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel