17th SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பாரம்பரிய கைவினை கலைஞர்கள் பயன்பெறும் வகையில் ரூ.13,000 கோடியிலான 'பிஎம் விஸ்வகர்மா' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
- ஸ்ரீவிஸ்வகர்மா ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ரூ.13,000 கோடியிலான 'பிஎம் விஸ்வகர்மா' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
- இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள தச்சுத் தொழிலாளி, படகு செய்பவர், ஆயுதம் செய்பவர், இரும்பு கொல்லர், கூடை, மிதியடி, துடைப்பம், கயிறு திரிப்பவர், பாரம்பரிய மொம்மை தயாரிப்பவர், பொற்கொல்லர், குயவர், காலணி கைவினைஞர், சுத்தி மற்றும் சாதனங்கள் தயாரிப்பவர், சிற்பி, கல் உடைப்பவர், கொத்தனார், முடி திருத்துபவர், பூமாலை தயாரிப்பவர், துணி துவைப்பவர் , துணி தைப்பவர், மீன் வலை செய்பவர் என 18 வகையான பாரம்பரிய கைவினை தொழில்களில் ஈடுபட்டிருக்கும் சுமார் 30 லட்சம் குடும்பங்கள் அடுத்த 5 ஆண்டுகாலம் பயன்பெறும்.
- இத்திட்டத்தின்கீழ் மேற்கண்ட கைவினை கலைஞர்களுக்கு ரூ.3 லட்சம் வரை ஈட்டுறுதி இல்லாமல் கடன் வழங்கப்படும். இதில் முதல் தவணையாக அளிக்கப்படும் ரூ.1 லட்சத்தை 18 மாதத்துக்குள் திருப்பி செலுத்தவேண்டும்.
- 2-வது தவணையில் பெறப்படும் ரூ.2 லட்சத்தை 30 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும். 5 சதவீத சலுகை வட்டியில் இந்த கடன் வழங்கப்படுகிறது. கடன் உத்தரவாத கட்டணத்தை மத்திய அரசு ஏற்கும்.
- கைவினை கலைஞர்களுக்கு 5 நாட்கள் முதல் ஒரு வாரம் வரை40 அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட்டு சான்றிதழ், அடையாள அட்டைவழங்கப்படும்.
- விருப்பம் உள்ளவர்கள், 15 நாட்களுக்கு அளிக்கப்படும் மேம்பட்ட பயிற்சியில் இணையலாம். அப்போது அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 உதவித் தொகை அளிக்கப்படும்.
- அத்துடன், கைவினை கலைஞர்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்க ரூ.15,000 உதவித்தொகை வழங்கப்படும். சுய வேலைவாய்ப்பில் ஈடுபடும் கலைஞர்களும் இதில் பதிவு செய்து கொள்ளலாம். பயனாளி 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.
- யஷோபூமி துவாரகா செக்டார் 25ல், துவாரகா செக்டார் 21ல் இருந்து புதிய மெட்ரோ நிலையம் ‘யஷோபூமி துவாரகா செக்டர் 25’ வரை தில்லி விமான நிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் சேவையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
- புதிய மெட்ரோ நிலையம் மூன்று சுரங்கப்பாதைகளைக் கொண்டிருக்கும் - 735மீ நீளமுள்ள சுரங்கப்பாதை நிலையத்தை கண்காட்சி அரங்குகள், மாநாட்டு மையம் மற்றும் மத்திய அரங்குடன் இணைக்கிறது.
- துவாரகா விரைவுச்சாலையின் குறுக்கே நுழைவதை/வெளியேறுவதை இணைக்கும் மற்றொன்று; மூன்றாவது, மெட்ரோ நிலையத்தை ‘யஷோபூமி’யின் எதிர்கால கண்காட்சி அரங்குகளின் லாபியுடன் இணைக்கிறது.
- தில்லி மெட்ரோ விமானநிலைய எக்ஸ்பிரஸ் பாதையில் மெட்ரோ ரயில்களின் செயல்பாட்டு வேகத்தை மணிக்கு 90 முதல் 120 கிமீ வேகத்தில் அதிகரிக்கும், இதனால் பயண நேரம் குறையும். ‘புது தில்லி’யிலிருந்து ‘யஷோபூமி துவாரகா செக்டார் 25’ வரையிலான பயணம் சுமார் 21 நிமிடங்கள் ஆகும்.
- தௌலா குவான் மெட்ரோ நிலையத்திலிருந்து மெட்ரோ வழியாக யஷோபூமி துவாரகா செக்டார் 25 மெட்ரோ நிலையத்தை பிரதமர் வந்தடைந்தார்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள துவாரகாவில் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் முதல் கட்டமான 'யசோபூமி'யை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- 'யசோபூமி' ஒரு அற்புதமான மாநாட்டு மையம், பல கண்காட்சி அரங்குகள் மற்றும் பிற வசதிகளைக் கொண்டுள்ளது.
- இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் தொடங்கியது.
- இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 15.2 ஓவர்களிலேயே தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து 50 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய கிரிக்கெட் அணி 6.1 ஓவர்களில் 51 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
- இலங்கை அணியை வீழ்த்தியதன் மூலம் 2023 ஆசியகோப்பையை இந்திய வென்று 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தை பதிவு செய்துள்ளது.
- பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில். உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி சார்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன் கலந்து கொண்டார்.
- சிறப்பான முறையில் திறமையை வெளிப்படுத்திய இளவேனில் வாலறிவன் 252.2 புள்ளிகளை பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.
- பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒகேன் முல்லர் 251.9 புள்ளிகள் உடன் வெளி பதக்கத்தை பெற்றார். சீனாவின் ஜாங் ஜியாலேவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. இதேபோன்று ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் சந்தீப் சிங் 628.2 புள்ளிகளை பெற்று 14 வது இடத்தை பிடித்துள்ளார்.
- சர்வதேச அரங்கில் இளவேனில் வாலறிவன் பெறும் 2-ஆவது தங்கப்பதக்கம் இதுவாகும்.
- தமிழகத்தின் 29 மாவட்டங்களில் உள்ள 104 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த 7,469 வீடுகள் புதிதாக கட்டித்தரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021-ல் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
- இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ரூ.176.02 கோடி மதிப்பில் மொத்தம் 3,510 வீடுகள் கட்டும் பணியை முதல்வர் ஸ்டாலின் 2021 நவ.2-ல் வேலூர் அருகே மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தொடங்கி வைத்தார்.
- இந்நிலையில், 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர்முகாம்களில் மொத்தம் ரூ.79.70 கோடி மதிப்பில் 1,591 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், முகாம்களில் ரூ.11.33 கோடி மதிப்பில் இதர அடிப்படை வசதிகளும் செய்துதரப்பட்டுள்ளன.
- இதையடுத்து, தமிழகம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கான 1,591 குடியிருப்புகள் திறப்பு விழாவேலூர் அருகேயுள்ள மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நேற்று நடைபெற்றது.
- இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று 12 மாவட்டங்களில் கட்டியுள்ள குடியிருப்புகளை காணொலி வாயிலாகவும் வேலூர் முகாமில் நேரடியாகவும் திறந்து வைத்து பயனாளிகள் வசம் வீடுகளை ஒப்படைத்தார்.
- பயனாளிகளுக்கு வீட்டு உபயோக பொருட்களையும் இனிப்புகளையும் வழங்கினார். பின்னர், புதிய குடியிருப்புகள் குறித்து இலங்கை தமிழர்களுடன் காணொலி வழியாக கலந்துரையாடினார்.