சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையம் / INTERNATIONAL CONVENTION & EXPO CENTER
TNPSCSHOUTERSSeptember 18, 2023
0
சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையம் / INTERNATIONAL CONVENTION & EXPO CENTER: தலைநகர் டெல்லியில் உலகிலேயே மிகப்பெரிய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையம் (International Convention And Expo Centre) ஒன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
"யஷோபூமி" என பெயரிடப்பட்டுள்ள இம்மையம் "மைஸ்" எனப்படும் சந்திப்புகள், ஊக்கங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் (Meetings, Incentives, Conferences, and Exhibitions) ஆகிய நோக்கங்களுக்கான மையமாக 8.9 லட்சம் சதுர மீட்டர் திட்ட மதிப்பீட்டில், 1.8 லட்சம் சதுர மீட்டர் கட்டிடப்பரப்பில் அமைந்துள்ளது.
இதில் அமையவுள்ள மாநாட்டு மையம் 15 மாநாட்டு மையங்களை உள்ளடக்கி மொத்தமாக 73,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும். இதில் ஒரு முக்கிய கருத்தரங்க மண்டபமும், கலைநிகழ்ச்சிகளுக்கான மிகப்பெரிய அரங்கமும், 13 சந்திப்பு அறைகளும் என சுமார் 11 ஆயிரம் பிரதிநிதிகள் ஒரே நேரத்தில் பங்கேற்கும் வகையில் அமையவுள்ளது.
மைய கருத்தரங்க மண்டபம் சுமார் 6 ஆயிரம் விருந்தினர்கள் ஒன்றாக அமரும் வகையில் உள்ளது. கலைக்கூட அரங்கில் 2500 விருந்தினர்கள் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறை சார்ந்த சந்திப்புக்களை நடத்தும் வகையில் 8 தளங்களில் 13 சந்திப்பு கூடங்கள் அமைக்கப்படுகிறது. 1.07 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் உலகிலேயே பெரிய கண்காட்சிக்கூடமும் அமையவுள்ளது.
மழைநீர் சேகரிப்புக்கான வசதி, மறுசுழற்சி மூலம் கழிவுநீர் சுத்திகரிப்பு, சோலார் மின்சார வசதி என பசுமைவழி சார்ந்த முறைகளில் இயற்கையோடு இணைந்தவழியில் திட்டம் முழுவதும் கையாளப்பட்டுள்ளது.
ENGLISH
INTERNATIONAL CONVENTION & EXPO CENTER: Indian Prime Minister Narendra Modi inaugurated the world's largest International Convention and Expo Center in the capital Delhi.
Named as "Yashobhoomi", this center is a center for meetings, incentives, conferences, and exhibitions called "MISE" with a plan estimate of 8.9 lakh square meters and a built-up area of 1.8 lakh square meters.
The convention center will comprise of 15 convention centers and will be built on a total area of 73,000 square meters. It has a main conference hall, a large theater for performances, and 13 meeting rooms that can accommodate about 11,000 delegates at a time.
The central conference hall can accommodate about 6,000 guests. The art gallery has a seating capacity of 2500 guests. 13 meeting halls are set up on 8 floors to hold various departmental meetings.
The largest exhibition hall in the world will also be built with an area of 1.07 lakh square meters. The whole project has been handled in a green way like rainwater harvesting facility, waste water treatment through recycling, solar power facility in a green way.