Type Here to Get Search Results !

13th SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


13th SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

இந்திய விமானப்படைக்காக ஏர்பஸ் நிறுவனம் தயாரித்த முதலாவது சி-295 ரக விமானம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
  • ஸ்பெயினில் உள்ள ஏர்பஸ் நிறுவனம் இந்திய விமானப்படைக்காக சி-295 ரக விமானங்களைத் தயாரித்து அளிக்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும், ஏர் பஸ் நிறுவனமும் கடந்த 2021-ல் கையெழுத்திட்டன.
  • இதைத் தொடர்ந்து ஸ்பெயினின் செவில் நகரிலுள்ள உற்பத்தி ஆலையில் விமானத்தை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. சி-295 வகையைச் சேர்ந்த 56 விமானங்களை இந்திய விமானப் படைக்கு அளிக்குமாறு அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டிருந்தது. இந்நிலையில் இதன் முதல் விமானம் 
  • ஸ்பெயினில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏர் பஸ் நிறுவனத்திடமிருந்து இந்திய விமானப்படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி முதல் விமானத்தைப் பெற்றுக்கொண்டார்.  
  • இந்த ஒப்பந்தத்தின்படி 16 விமானங்கள் ஸ்பெயினிலும், 40 விமானங்கள் குஜராத்திலுள்ள வதோதராவில் உள்ள ஆலையிலும் உற்பத்தி செய்யப்படும். 
  • வதோதரா ஆலையானது, ஏர் பஸ் நிறுவனமும், டாடா நிறுவனமும் கூட்டு சேர்ந்து ஏற்படுத்தியதாகும். இந்த சி-295எம்டபிள்யூ ரக விமானமானது 5 முதல் 10 டன் எடையை சுமந்து செல்லும் திறன் படைத்தது.
ஆயுஷ்மான் பவ இயக்கத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்
  • குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (13.09.2023) காந்திநகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயுஷ்மான் பவ இயக்கத்தை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். 
  • ஆயுஷ்மான் பவ இயக்கம் என்பது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒரு விரிவான நாடு தழுவிய சுகாதார முன்முயற்சியாகும். 
  • இது நாட்டின் ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரத்தையும் சென்றடையும் வகையில் விரிவான சுகாதார சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2023 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை இந்த இயக்கம் செயல்படுத்தப்படும்.
பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தை விரிவுபடுத்தி நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமரின் உஜ்வாலா யோஜனா (பி.எம்.யு.ஒய்) திட்டத்தை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
  • 2023-24-ம் நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டு வரை மூன்று ஆண்டுகளில் கூடுதலாக 75 லட்சம் இணைப்புகளை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
  • இந்தக் கூடுதல் உஜ்வாலா இணைப்புகளை வழங்குவதன் மூலம் பி.எம்.யு.ஒய் எனப்படும் பிரதமரின் உஜ்வாலா திட்ட பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை 10.35 கோடியாக உயரும்.
  • இந்தத் திட்டத்தில் நுகர்வோருக்கு ஆண்டுக்கு 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டருக்கு ரூ. 200 வீதம் 12 சிலிண்டர்கள் வரை மானியம் வழங்கப்படுகிறது. 
  • நாட்டில் 2014-ம் ஆண்டு வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் நுகர்வோர் எண்ணிக்கை 14 கோடியாக இருந்த நிலையில், இந்தாண்டு 32 கோடியாக அதிகரித்துள்ளது.
4 ஆண்டுகளுக்கு மூன்றாம் கட்ட மின் நீதிமன்றங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.7210 கோடி நிதி ஒதுக்கீட்டில் நான்கு ஆண்டுகளுக்கு (2023 முதல்) மத்திய அரசின் திட்டமான மின்னணு நீதிமன்றங்கள் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
  • தேசிய மின் நிர்வாகத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய நீதித்துறையின் தகவல் தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்காக மின் நீதிமன்றங்கள் திட்டம் 2007 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  
  • கட்டம்-1 மற்றும் கட்டம்-2 ஆகியவற்றின் ஆதாயங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதன் மூலம், மின்னணு, ஆன்லைன் மற்றும் காகிதமில்லா நீதிமன்றங்களை நோக்கி நகர்வதன் மூலம், பாரம்பரிய பதிவுகள் உட்பட முழு நீதிமன்ற பதிவுகளையும் டிஜிட்டல் மயமாக்குவதன் மூலமும், அனைத்து நீதிமன்ற வளாகங்களையும் இ-சேவை மையங்களுடன் இணைப்பதன் மூலம் மின்னணு தாக்கல் / மின்னணு செலுத்தல்களை பரவலாக்குவதன் மூலமும் அதிகபட்ச நீதியின் ஆட்சியை ஏற்படுத்துவதை இ-நீதிமன்றங்கள் கட்டம்-3 நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • இது வழக்குகளை திட்டமிடும்போது அல்லது முன்னுரிமையளிக்கும் போது நீதிபதிகள் மற்றும் பதிவேடுகளுக்கு தரவு அடிப்படையிலான முடிவுகளை எடுக்க உதவும் நுண்ணறிவு ஸ்மார்ட் அமைப்புகளை அமைக்கும். 
  • மூன்றாம் கட்டத்தின் முக்கிய நோக்கம் நீதித்துறைக்கு ஒரு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தளத்தை உருவாக்குவதாகும், இது நீதிமன்றங்கள், வழக்குதாரர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு இடையில் தடையற்ற மற்றும் காகிதமற்ற தொடர்பை வழங்கும்.
டிஜிட்டல் மாற்றத்திற்கான மக்கள்தொகை அளவுகோலில் அமல்படுத்தப்பட்ட வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் துறையில் இந்தியா - அமெரிக்கா இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • இந்தியக் குடியரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் ஆர்மீனியக் குடியரசின் உயர் தொழில்நுட்பத் தொழில் அமைச்சகம் இடையே டிஜிட்டல் மாற்றத்திற்கான மக்கள்தொகை அளவுகோலில் செயல்படுத்தப்பட்ட வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்வதில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2023 ஜூன் 12 ஆம் தேதி கையெழுத்திட்டதற்கு பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளின் டிஜிட்டல் மாற்ற முன்முயற்சிகளை செயல்படுத்துவதில் நெருக்கமான ஒத்துழைப்பு, அனுபவங்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகள் (இந்தியா ஸ்டாக்) ஆகியவற்றை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் மேம்பட்ட ஒத்துழைப்பை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்பினரும் கையொப்பமிட்ட நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.
  • டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புத் துறையில் அரசுடன் அரசு (ஜி 2 ஜி) வணிகத்துடன் வணிகம் (பி 2 பி) என இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும். 
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பரிசீலிக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அவற்றின் வழக்கமான நிர்வாகக் செயல்பாட்டு ஒதுக்கீடுகள் மூலம் நிதியளிக்கப்படும்.
டிஜிட்டல் மாற்றத்திற்கான தீர்வுகளைப் பகிர்ந்து கொள்வதில் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தியா மற்றும் ஆன்டிகுவா - பார்புடா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் ஆன்டிகுவா-பார்புடாவின் தகவல், தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள் அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே மக்கள் மத்தியிலான டிஜிட்டல் மாற்றத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2023 ஜூன் 13 அன்று இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
  • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளின் டிஜிட்டல் மாற்ற முன்முயற்சிகளை செயல்படுத்துவதில் நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்தும். அத்துடன் அனுபவங்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
டிஜிட்டல் மாற்றத்திற்கான தீர்வுகளைப் பகிர்ந்து கொள்வதில் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தியா மற்றும் சியாரா – லியோன் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் சியாரா – லியோன் நாட்டின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு இடையே மக்கள் மத்தியிலான டிஜிட்டல் மாற்றத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2023 ஜூன் 12 அன்று இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
  • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளின் டிஜிட்டல் மாற்ற முன்முயற்சிகளை செயல்படுத்துவதில் நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்தும்.
சுவென் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் ரூ.9589 கோடி வரை அன்னிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, சைப்ரஸில் உள்ள மெஸர்ஸ் பெர்ஹ்யாண்டா நிறுவனத்தின் சுவென் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் ரூ.9589 கோடி வரை அன்னிய முதலீட்டுக்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது. 
  • தேசிய பங்குச் சந்தை நிறுவனம் மற்றும் மும்பை பங்குச் சந்தை நிறுவனம் ஆகியவற்றில் பட்டியலிடப்பட்ட பொது வரையறுக்கப்பட்ட இந்திய மருந்து நிறுவனமான மெஸர்ஸ் சுவென் மருந்து லிமிடெட்டின் 76.1% பங்குகளை சைப்ரஸில் உள்ள மெஸர்ஸ் பெர்ஹியாண்டா நிறுவனம், தற்போதுள்ள பங்குதாரர்கள் மற்றும் பொது பங்குதாரர்களிடமிருந்து கட்டாய திறந்தவெளி வாய்ப்பு மூலம் பரிமாற்றம் செய்வதன் மூலம் கையகப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சுவென் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் மொத்த அன்னிய முதலீடு 90.1% வரை அதிகரிக்கலாம். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel