தோழி விடுதி / THOZHI VITUTHI: தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று பணிபுரியும் பெண்களுக்கு உதவும் விதமாக தமிழக அரசானது மகளிர் தங்கும் விடுதிகளை தொடங்கியுள்ளது.
தோழி விடுதி என்று அழைக்கப்படும் இவ்விடுதி பெண்களுக்கு பாதுகாப்பான, மலிவு விலையில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் 11 விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.
முன்னதாக, வெளியூர்களில் தங்கிப் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 'தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்' என்கிற அமைப்பைத் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு அடிப்படைத் தேவைகளோடு பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்த இந்த விடுதிகளில் மாத அடிப்படையிலும் நாள் கணக்கிலும் பெண்கள் தங்கலாம். தேவைப்படுவோர் www.tnwwhcl.in என்கிற இணைய தளத்துக்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
ENGLISH
THOZHI VITUTHI: The Tamil Nadu government has started women's hostels to help the women who are working in various places of Tamil Nadu. Called Thozhi Hostel, this facility is designed to be safe and affordable for women.
11 hotels have been started in 9 districts namely Chennai, Chengalpattu, Perambalur, Salem, Trichy, Tirunelveli, Thanjavur, Vellore and Villupuram. Earlier, the Tamil Nadu Government has established an organization called 'Tamil Nadu Working Women's Hostels' to protect the safety of women working abroad.
Women can stay in these hostels with various basic needs and safety features on monthly and daily basis. The government has announced that those who need it can visit the website www.tnwwhcl.in and register.