Type Here to Get Search Results !

தகைசால் தமிழர் விருது / THAKAISAL TAMILAR AWARD

THAKAISAL TAMILAR AWARD 2021 / தகைசால் தமிழர் விருது 2021

  • தகைசால் தமிழர் விருது / THAKAISAL TAMILAR AWARD: தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை கவுரவிக்கும் வகையில், விருது மற்றும் பரிசுத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டது. 
  • அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி, "தகைசால் தமிழர்" என்ற பெயரில் புதிய விருது உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த விருதுக்குரியவர்களை அடையாளம் காண்பதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட இருக்கிறது. 
  • தகைசால் தமிழர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட என். சங்கரய்யாவுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டு சான்றிதழும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

THAKAISAL TAMILAR AWARD 2022 / தகைசால் தமிழர் 2022

  • தகைசால் தமிழர் விருது / THAKAISAL TAMILAR AWARD: தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்ளைப் பெருமைப்படுத்தும் வகையில், 2021 -ஆம் ஆண்டு முதல் "தகைசால் தமிழர்" என்ற பெயரில் புதிய விருது தமிழ்நாடு அரசு வழங்கிவருகிறது.
  • இந்த ஆண்டிற்கான விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் தலைமையில் நடைபெற்றது.
  • கூட்டத்தில், இளம் வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, விடுதலைப் போராட்ட வீரராகத் தன் இளம் வயதைச் சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவரும் ஏழை எளிய மக்களுக்காகக் குரல் கொடுத்து, சமூக நல்லிணக்கத்தினையும், சுற்றுச்சூழலையும் காத்திடத் தொடர்ந்து பாடுபட்டு வருவதுடன், சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியாகவும் பணியாற்றி, தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்பை அளித்த தமிழருமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவுக்கு 2022 ஆம் ஆண்டிற்கான "தகைசால் தமிழர் விருது" வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
  • "தகைசால் தமிழர்" விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர். நல்லகண்ணுவுக்கு, ரூ. 10 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டுச்சான்றிதழும், வரும் சுதந்திர நாள் விழாவில் முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்குவார்.

THAKAISAL TAMILAR AWARD 2023 / தகைசால் தமிழர் விருது 2023

  • தகைசால் தமிழர் விருது / THAKAISAL TAMILAR AWARD: தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 
  • அதன்படி, 'சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு' ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்த கி.வீரமணிக்கு இவ்விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர நாள் விழாவின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கி.வீரமணிக்கு விருதை வழங்குவார் என்றும் அப்போது 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel