Type Here to Get Search Results !

NAAN MUDHALVAN UPSC SCHOLARSHIP 2023: நான் முதல்வன் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை பெற மதிப்பீட்டுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

NAAN MUDHALVAN UPSC SCHOLARSHIP 2023

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான்‌ முதல்வன்‌ திட்டத்தின்‌ கீழ்‌ போட்டித்‌ தேர்வுப்‌ பிரிவானது மாண்புமிகு இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும்‌, சிறப்புத்‌ திட்ட செயலாக்க துறை அமைச்சர்‌ திரு. உதயநிதி ஸ்டாலின்‌ அவர்களால்‌ 07.03.2023 அன்று துவங்கி வைக்கப்பட்டது. 

அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள்‌ ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித்‌ தேர்வுகளை எளிதாக அணுகும்‌ வண்ணம்‌ பல பயிற்சித்‌ திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

இந்நிலையில்‌ 2023-24 க்கான தமிழ்‌ நாடு அரசின்‌ பட்ஜெட்‌ உரையில்‌, தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகம்‌ (114600), அண்ணா நிர்வாகப்‌ பணியாளர்‌ கல்லூரியுடன் இணைந்து, ஒன்றிய அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ குடிமைப்‌ பணிகள்‌ தேர்வுகளுக்காக பயின்று வரும்‌ ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும்‌ இதர தேவையான வசதிகளைச்செய்து உதவும்‌ வகையில்‌ ஒரு திட்டத்தை செயல்படுத்தும்‌ என்று அறிவிக்கப்பட்டது. 

இந்தத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, ஒவ்வொரு ஆண்டும்‌. 1,000 சிவில்‌ சர்வீசஸ்‌ பயின்று வரும்‌ மாணவர்கள்‌, மதிப்பீட்டுத்‌ தேர்வு மூலம்‌ தேர்வு செய்யப்படுவார்கள்‌. 

NAAN MUDHALVAN UPSC SCHOLARSHIP 2023

முதல்நிலைத்‌ தேர்வுக்குத்‌ தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும்‌ 1௦ மாதங்களுக்கு மாதம்‌ ரூ.7,500 வழங்கப்படும்‌. இது சமீப காலமாக 056 சிவில்‌ சர்வீசஸ்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெறும்‌ தமிழக மாணவர்களின்‌ எண்ணிக்கை குறைந்து வரும்‌ விகிதத்தை மாற்றியமைக்க தமிழக அரசால்‌ எடுக்கப்பட்டிருக்கும்‌ மாபெரும்‌ முயற்சியாகும்‌. 

இதன்படி 114800 அதன்‌ கீழ்‌ இயங்கிவரும்‌ நான்‌ முதல்வன்‌ போட்டித்‌ தேர்வுகள்‌ சரிவின்‌ வாயிலாக 0550 முதல்நிலை தேர்வின்‌ ஊக்கதொகைக்கான மதிப்நிட்டுத்‌ தேர்வை 10.09.2023 அன்று நடத்தத்‌ திட்டமிட்டுள்ளது. இதன்மூலம்‌ தேர்ந்தெடுக்கப்படும்‌ 10௦௦ மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம்‌ 7500 ரூபாய்‌ வீதம்‌ 10 மாதங்களுக்கு வழங்கப்படும்‌. 

ஏற்கனவே அண்ணா நிர்வாகப்‌ பணியாளர்‌ கல்ஜூரியின்‌ கீழ்‌ இயங்கி வரும்‌ அகில இந்திய குடிமை பணிகள்‌ பயிற்சி மையங்களுக்கான (ஆர்‌.ஏ புரம்‌ சென்னை, பாரதியார்‌ ண பல்கலைக்கழகம்‌ கோவை மற்றும்‌ காமராஜர்‌ பல்கலைக்கழகம்‌ மதுரை) நுழைவுத்‌ தேர்வும்‌ இதில்‌ ஒருங்கிணைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மதிப்பிட்டுத்‌ தேர்வை எழுதி ஊக்கத்தொகை பெற விரும்பும்‌ ஆர்வமுள்ள மாணவர்கள்‌ https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விரிவான அறிவிக்கையைப் படித்து பார்த்து, 2.8.2023 அன்று முதல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 17.08.203 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel