8th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு - முதல்வர் தொடங்கிவைத்து இலச்சினையை வெளியிட்டார்
- வனத் துறையின் 2021-22-ம் ஆண்டு மானியக் கோரிக்கையில், மாநில அளவில் திட்டமிடப்பட்ட வன உயிரின குற்றங்களைக் கண்டறிந்து தடுக்க வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- அதன்படி, தமிழ்நாடு வனம் மற்றும் வனஉயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டுப்பிரிவு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் நிறுவப்பட்டது.
- தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவை தொடங்கி வைத்து, இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
- திட்டமிட்ட வனம் மற்றும் வன உயிரின குற்றங்களைத் தடுக்கும் வகையில் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள இப்பிரிவு, வன உயிரினக் குற்றங்கள் குறித்த தகவல் மற்றும் நுண்ணறிவு விவரங்களை சேகரித்தல், சட்டவிரோதமாக வன உயிரினங்கள் மற்றும் வன உயிரினப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுத்தல், உலகளாவிய அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்படுதல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோள்களாகக் கொண்டு செயல்படுகிறது.
- உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் (டபிள்யூயுஜி) சீனாவின் செங்டு நகரில் நடைபெற்று வந்தன. இந்நிலையில் நேற்று போட்டியின் நிறைவு நாள் விழா நடைபெற்றது.
- இந்தப் போட்டியில் பங்கேற்ற இந்தியா மொத்தம் 26 பதக்கங்களைக் கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 7-வது இடத்தைப் பிடித்தது. இதில் 11 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். இதற்கு முன்னர் இந்தியா அதிகபட்சமாக 21 பதக்கங்களே வென்றிருந்தது.
- போட்டியை நடத்திய சீனா 178 பதக்கங்களை (103 தங்கம், 40 வெள்ளி, 35 வெண்கலம்), வென்று முதலிடத்தைப் பிடித்தது. ஜப்பான் 21 தங்கம், 29 வெள்ளி, 43 வெண்கலப் பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், கொரியா 17 தங்கம், 18 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தது.
- மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், தென்னாப்பிரிக்காவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ் நேற்று (07-08-2023) நடைபெற்ற 13-வது பிரிக்ஸ் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் காணொலி மூலம் கலந்து கொண்டார்.
- இந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் கருப்பொருள் "பிரிக்ஸ் மற்றும் ஆப்பிரிக்கா: பரஸ்பரம் விரைவுபடுத்தப்பட்ட வளர்ச்சி, நிலையான வளர்ச்சி மற்றும் உள்ளடக்கிய பன்முகத்தன்மைக்கான கூட்டு செயல்பாடு" என்பதாகும்.
- உலக வர்த்தக அமைப்பு, விநியோகச் சங்கிலி, டிஜிட்டல் மயமாக்கல், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து திரு பியூஷ் கோயல் கூட்டத்தில் பேசினார்.
- ஒருவருக்கொருவர் நம்பிக்கையை வளர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திரு பியூஷ் கோயல், உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பாக வலுவான நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.
- பருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவின் முயற்சிகளை பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு அமைச்சர் விளக்கினார்.
- இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் நடைபெறும் ஜி 20 வர்த்தக மற்றும் முதலீட்டு பணிக்குழுவின் முடிவுகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
- டிஜிட்டல் தொழில்நுட்பப் பயன்பாட்டை மேம்படுத்தவும் அனைவருக்கும் அதன் பயன்கள் கிடைக்கவும் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் திறமையான தலைமையின் கீழ் இந்தியா மேற்கொண்டுள்ள முன்முயற்சிகளை திரு பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.
- சவால்களை எதிர்கொள்வதற்கு ஒற்றுமை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுடன் கூட்டு முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் தேவையை அமைச்சர் திரு பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.