Type Here to Get Search Results !

4th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


4th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ராணுவசேவைகளுக்கு இடையிலான அமைப்பு (கட்டளை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம்) மசோதா - 2023 மக்களவையில் நிறைவேறியது
  • ராணுவ சேவைகளுக்கு இடையிலான அமைப்பு (கட்டளை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம்) மசோதா - 2023 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 
  • இந்த மசோதா, ராணுவ சேவைகளுக்கு இடையிலான அமைப்புகள் அல்லது அதனுடன் இணைக்கப்பட்ட அமைப்புகள், அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பாக, தலைமைத் தளபதி மற்றும் தலைமை கமாண்டர், கமாண்டிங் அதிகாரி ஆகியோருக்கு, அனைத்து ஒழுங்கு மற்றும் நிர்வாக அதிகாரங்களை வழங்க வகைசெய்கிறது.
  • தற்போது, ராணுவவீரர்கள் தங்களுக்கென்று குறிப்பிட்ட சேவை சட்டங்களாக இருக்கும் ராணுவச் சட்டம் 1950, கடற்படைச் சட்டம் 1957, விமானப்படைச் சட்டம் 1950 ஆகியவற்றில் உள்ள விதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறார்கள். தவறான நடத்தை அல்லது ஒழுக்கமின்மை வழக்குகளை விரைவாக தீர்ப்பது மற்றும் பல நடவடிக்கைகளைத் தவிர்ப்பதன் மூலம் பொதுமக்களின் பணம் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்துவது போன்ற உறுதியான நன்மைகளை இந்த மசோதா உருவாக்கும்.
  • இந்த மசோதா முப்படைகளுக்கும் இடையே அதிக ஒருங்கிணைப்புக்கு வழிவகுக்கும்; வரும் காலங்களில் கூட்டான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும், ராணுவத்தினரின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் வலுவான அடித்தளத்தை அமைக்கும்.    
அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 38-வது கூட்டம்
  • மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமையில், அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 38-வது கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது. 
  • அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு அறிக்கையின் 12 ஆவது தொகுதிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு குடியரசு தலைவரிடம் கையளிக்கப்படவுள்ளது. 12 வது தொகுதியின் கருப்பொருள் 'எளிமைப்படுத்துதல்'.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel