2nd AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி - ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- டெல்லியில் 51வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கியது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில அரசுகளின் சார்பில் நிதி அமைச்சகத்தின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- இந்த கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
- இறுதியில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
- இதற்காக ஒன்றிய மற்றும் மாநில சட்டங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகு, புதிய வரி விதிப்பு அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும். இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வந்த 6 மாதங்களுக்குப் பிறகு மறுஆய்வு செய்யப்படும்.
- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் இரண்டாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இங்கு 15 அடி ஆழத்தில் 15 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. தற்போது 15வது குழியில் அகழாய்வு நடந்து வருகிறது.
- இதுவரை நடந்த அகழாய்வில் தங்க அணிகலன்கள், பகடைக்காய், தோசைக் கல், சுடுமண் பொம்மை, புகை பிடிப்பான் கருவி, காதணி உள்ளிட்ட 3,150க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- இந்த நிலையில், 15வது குழியில் நடந்த அகழாய்வில் சுடுமண்ணாலான வடிதட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- ஆயுஷ் மருத்துவ முறைகள் / இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சை பெறுவதற்காக வெளிநாட்டினருக்கு புதிய வகை ஆயுஷ் விசா அறிமுகப்படுத்தப்படுவதாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
- ஆயுஷ் முறைகள், சிகிச்சை பராமரிப்பு, ஆரோக்கியம் மற்றும் யோகா போன்ற இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு ஒரு சிறப்பு விசா திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது
- இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சையைக் கையாளும் விசாவில், 11-வது பிரிவுக்குப் பிறகு 11 ஏ என்ற பிரிவு இணைக்கப்பட்டுள்ளது, அதன்படி தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.