22nd AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்திய தேர்தல் ஆணையத்தின் 2023 ஆம் ஆண்டின் தேசிய அடையாளமாக சச்சின் டெண்டுல்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்
- தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்பதற்காக வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்றவர்களை தேசிய அடையாளமாக தேர்தல் ஆணையம் நியமித்து வருகிறது.
- கடந்த ஆண்டு நடிகர் பங்கஜ் திரிபாதியை தேசிய அடையாளமாக ஆணையம் அங்கீகரித்திருந்தது. முன்னதாக, 2019 லோக்சபா தேர்தலின் போது, எம்.எஸ்.டோனி, அமீர் கான் மற்றும் மேரி கோம் போன்றவர்கள் தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளங்களாக இருந்தனர்.
- அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக சச்சின் டெண்டுல்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (புதன்கிழமை) அன்று டெண்டுல்கருக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையே கையெழுத்தாகிறது. மூன்று வருட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, டெண்டுல்கர் வாக்காளர் விழிப்புணர்வை பரப்புவார் என்று கூறப்படுகிறது.
- ஜோகன்னஸ்பர்க்கில் ஆகஸ்ட் 22 முதல் 24 வரை நடைபெறும் 15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, அந்நாட்டின் அதிபர் மதமேலா சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை முன்னதாக தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார்.
- பிரதமர் மோடியை தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா வரவேற்றார். தென்னாப்பிரிக்காவின் சிரில் ராமபோசா, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொண்ட போதிலும், சீன அதிபர் ஜி ஜிங்பிங் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இந்நிகழ்ச்சியில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்து கொண்டார்.
- பிரதமர் மோடியின் தென்னாப்பிரிக்காவிற்கு இது மூன்றாவது பயணம் ஆகும், மேலும் இந்த பயணம் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான தூதரக உறவின் 30 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
- 2023 ஆண்டு BRICS தென்னாப்பிரிக்காவின் தலைமையின் கீழ் உள்ளது.
- 2023 ஆண்டு உச்சிமாநாட்டின் கருப்பொருள்: "பிரிக்ஸ் மற்றும் ஆப்பிரிக்கா: பரஸ்பர வேகமான வளர்ச்சி, நிலையான வளர்ச்சி மற்றும் உள்ளடக்கிய பலதரப்புக்கான கூட்டு" என்பதாகும்.
- ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வரும் இந்த தொடரின் மகளிர் 100 மீட்டர் பைனலில், ஷ கேரி (23 வயது) 10.65 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார். ஜமைக்கா வீராங்கனைகள் ஷரிகா ஜாக்சன் (10.72 விநாடி) வெள்ளிப் பதக்கமும், 2 முறை ஒலிம்பிக் சாம்பியன் ஷெல்லி ஆன் பிரேசர் பிரைஸ் (10.77) வெண்கலமும் வென்றனர்.
- உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஷ கேரி வென்ற முதல் தங்கப் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஏற்கனவே 4 வீராங்கனைகள் 10.65 விநாடிகளில் கடந்து தங்கம் வென்று படைத்த சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
- இந்தியாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்திய கடலோரக் காவல்படை, பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படையுடன் (பி.சி.ஜி) மேம்பட்ட கடல்சார் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய கடலோரக் காவல்படைத் தலைமை இயக்குநர் டிஜி ராகேஷ் பால் மற்றும் பி.சி.ஜி கமாண்டன்ட் சி.ஜி அட்மிரல் ஆர்டெமியோ எம் அபு ஆகியோர் புதுதில்லியில் உள்ள கடலோரக் காவல்படைத் தலைமையகத்தில் கையெழுத்திட்டனர். இரு தரப்பினரும் கடல்சார் பிரச்சினைகள் குறித்து தங்கள் முதல் இருதரப்பு சந்திப்பை நடத்தினர்.
- கடல்சார் சட்ட அமலாக்கம் (எம்.எல்.இ), கடல்சார் தேடல் மற்றும் மீட்பு (எம்-எஸ்.ஏ.ஆர்) மற்றும் கடல் மாசு மீட்பு (எம்.பி.ஆர்) ஆகிய துறைகளில் இரு கடலோரக் காவல்படைகளுக்கும் இடையிலான தொழில்முறை இணைப்பை மேம்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முயற்சிக்கிறது.
- இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதன் மூலம், பிராந்தியத்தில் பாதுகாப்பான, சுத்தமான கடல்களை உறுதி செய்வதற்காக இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்தும்.
- இரு கடல்சார் அமைப்புகளுக்கும் இடையிலான முதல் இருதரப்பு சந்திப்பு, சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலமும், கூட்டுப் பயிற்சிகளை நடத்துவதன் மூலமும், பயிற்சி ஒத்துழைப்புகளை அதிகரிப்பதன் மூலமும் தொழில்முறை பிணைப்புகளை வலுப்படுத்துவதில் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது.
- நிதி அமைச்சகம் மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் மூன்று நாள்சிந்தன் ஷிவீர்இன்று குஜராத்தின் கேவாடியாவில் நிறைவடைந்தது. மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில், மத்திய நிதித்துறை இணையமைச்சர்கள் திரு பங்கஜ் சவுத்ரி மற்றும் டாக்டர் பகவத் கிசான்ராவ் கரத் ஆகியோர் முன்னிலையில் சிந்தனை அமர்வு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிதி அமைச்சகம் மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடியின் கனவுப்படி, ஐந்து உறுதிமொழிகளை பின்பற்றி அமிர்த கால இலக்குகளை அடைவது எப்படி என்பது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் எம்.சி.ஏ.வின் 100 க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகளால் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விவாதங்கள் நடத்தப்பட்டன.
- நாட்டில் 3.5 டன் எடை வரையிலான வாகனங்களுக்கான பாதுகாப்பு தரத்தை மேம்படுத்தி, அதன் மூலம் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பாரத் என்சிஏபி என்ற புதிய கார் மதிப்பீட்டு திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி (22.08.2023) புதுதில்லியில் அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார்.
- இந்தத் திட்டம் 2023 அக்டோபர் 1 முதல் தொடங்கும். நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை அதிகரித்து வாகனப் பாதுகாப்பு அமைப்பில் முன்னேற்றத்தை உருவாக்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- என்சிஏபி உலகளாவிய பாதுகாப்பு தரத்தில் வாகனங்களைத் தயாரிப்பதற்கான வாய்ப்பை அசல் உபகரண உற்பத்தி நிறுவனங்களுக்கு (ஓஇஎம்) வழங்குகிறது. மத்திய சாலைப் போக்குவரத்து நிறுவனம் (சிஐஆர்டி.) இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறது.
- இத்துறையைச் சார்ந்த பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளின் அடிப்படையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.