Type Here to Get Search Results !

முதல்வரின் பசுமை புத்தாய்வு திட்டம் / CHIEF MINISTERS GREEN INNOVATION SCHEME

  • முதல்வரின் பசுமை புத்தாய்வு திட்டம் / CHIEF MINISTERS GREEN INNOVATION SCHEME: முதல்வரின் பசுமை புத்தாய்வு திட்டம் திட்டம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் கீழ் செயல்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கல்விகளுக்கான நிறுவனம், திட்டத்தின் அறிவுசார் பங்குதாரராக செயல்படும். 
  • திட்டத் தலைவர், 40 பசுமைஆர்வலர்கள், 4 ஆராய்ச்சி இணையாளர்கள் ஆகியோர் தகுதியின்அடிப்படையில் இந்த திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், வேலைவாய்ப்பு, வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகிய மூன்று துறைகளின் துணைகொண்டு, தமிழகத்தை மற்ற மாநிலங்களுக்குத் தலைமை வகிக்கும் வகையில், சுற்றுச்சூழல் ரீதியாக முன்னேறிய மாநிலமாக மாற்றுவது, சுற்றுச்சூழல் சார் கொள்கைகள் வடிவமைப்பு, செயலாக்கம் மற்றும் நிர்வாகத்தில் உறுதிமிக்கஇளைஞர்களை ஈடுபடுத்தல், தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழல் சேவைகளை சிறப்பாக வழங்குவதில் மாவட்ட நிர்வாகங்களுக்கு உறுதுணையாக இருத்தல், சுற்றுச்சூழல் கொள்கை மேலாண்மைக்குவலுவான நிறுவன அமைப்புகளையும், செயல்முறைகளையும் உருவாக்குதல் போன்றவையாகும்.
  • பசுமை ஆர்வலர்கள், தமிழகத்தில் உள்ள மாவட்ட நிர்வாகங்களின் சுற்றுச்சூழல் முன்னெடுப்புகளுக்கு உறுதுணையாக முக்கியப் பங்காற்றுவர். 
  • சிறப்பான சுற்றுச்சூழல் சேவைகளை வழங்குதல் மற்றும் 'மீண்டும் மஞ்சப்பை' போன்றசூழல்சார் மாற்றுப் பொருட்களின் பயன்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற பணிகளிலும் அவர்கள் ஈடுபடுவர். இரண்டாண்டுகள் சேவைபுரியும் காலகட்டத்தில், அவர்களுக்கு மாதம் ரூ.60,000 உதவித்தொகை வழங்கப்படும்.
  • அதேபோல, திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி வகுப்புகள், பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படும். 
  • 2 ஆண்டு சேவையின் முடிவில் அண்ணா பல்கலைக்கழகத்திடமிருந்து 'கால நிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை' என்ற முதுகலை பட்டயப் படிப்புக்கான பட்டத்தையும் பெறுவர்.

ENGLISH

  • CHIEF MINISTERS GREEN INNOVATION SCHEME: The Chief Minister's Green Innovation Program will function under the Department of Environment and Climate Change. 
  • Anna University's Institute for Energy Studies will act as the intellectual partner of the project. Project Leader, 40 Green Activists, 4 Research Associates have been selected for this project based on merit.
  • The main objective of this program is to make Tamil Nadu an environmentally advanced state with the help of three sectors namely employment, development and environmental sustainability, to lead other states, to involve committed youth in the design, implementation and management of environmental policies, to support the district administrations in providing better environmental services across Tamil Nadu such as developing organizational structures and processes for environmental policy management.
  • Green activists are a major contributor to the environmental initiatives of district administrations in Tamil Nadu. They are also involved in providing better environmental services and promoting the use of eco-friendly alternatives like 'recycling'. They will be paid a stipend of Rs.60,000 per month during their two years of service.
  • Similarly, opportunities to participate in skill development training courses, training workshops etc. will also be provided. At the end of 2 years of service they will also receive a Master's Degree in 'Climate Change and Sustainability' from Anna University.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel