1st AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஜூலை மாதத்தில் ரூ.1.65 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்
- சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறைக்கு வந்த பிறகு ஐந்தாவது முறையாக மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடியை தாண்டி உள்ளது.
- கடந்த ஜூலை மாதம் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,65,105 கோடி. 2022 ஜூலை மாத ஜிஎஸ்டி வருவாயை விட இந்த ஆண்டு ஜூலை மாத ஜிஎஸ்டி வருவாய் 11 சதவீதம் அதிகமாக உள்ளது. 2022 ஜூலை மாதம் ரூ.1.49 லட்சம் கோடியாக இருந்தது.
- இந்த ஜூலை மாதம் வசூலான ரூ.1.65 லட்சம் கோடியில் ஒன்றிய ஜிஎஸ்டி ரூ.29,773 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.37,623 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.85,930 கோடியும் வசூலாகி உள்ளது.
- ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் பொருட்கள் இறக்குமதியில் வசூலான ரூ.41,239 கோடியும், ரூ.840 கோடி பொருட்கள் இறக்குமதி வசூல் உள்பட செஸ் வரியாக ரூ.11,779 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது.
- பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதாவை, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், லோக்சபாவில் தாக்கல் செய்தார். பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் இயற்றப்பட்டதில் இருந்து, கடந்த 54 ஆண்டுகளாக ஒருமுறை கூட திருத்தப்படவில்லை.
- சமூகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் மாறி வரும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப, பொதுமக்களுக்கு இந்த திருத்தங்கள் தேவைப்படுகின்றன. இதற்காக, பொதுமக்கள் மற்றும் மாநில அரசுகளுடன் ஆலோசித்து திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
- இந்த மசோதாவின்படி, பள்ளி, கல்லுாரிகளில் சேருவது, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் வாங்குவது, அரசு வேலைகளில் சேருவது போன்றவற்றுக்கு பிறந்த ஊர் மற்றும் தேதிக்கான ஒரே ஆவணமாக, பிறப்பு சான்றிதழை பயன்படுத்த முடியும்.
- இந்த திருத்தத்தின் படி, மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், இந்த பிறப்பு, இறப்பு தரவுகளை, சேவை திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும்.
- மக்கள் தொகை பதிவு, வாக்காளர் பட்டியல், ஆதார் எண், ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றுக்கு அரசு பயன்படுத்த முடியும். மேலும், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள், காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளின் பிறப்பு ஆவணங்களை பதிவு செய்யும் நடைமுறையை இந்த மசோதா எளிதாக்குகிறது.
- மேலும், அனைத்து மருத்துவமனைகளும் இறப்பு குறித்த சான்றிதழை பதிவாளரிடம் வழங்குவதை இந்த சட்ட திருத்தம் கட்டாயமாக்குகிறது. இந்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.
- பிரதமர் நரேந்திர மோடி புனே வந்தார். அங்கு ரூ.15,000 கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்டங்கள், மெட்ரோ ரயில் சேவைகள் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
- இதுபோல், லோக்மான்ய திலகரின் குடும்பத்தினர் உருவாக்கிய திலக் ஸ்மாரக் மந்திர் அறக்கட்டளை நடத்திய விழாவில் அவர் பங்கேற்றார்.
- 1983ம் ஆண்டு இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது. பாலகங்காதர திலகரின் 103வது நினைவு தினத்தையொட்டி, பிரதமருக்கு லோகமான்ய திலகர் விருது வழங்கப்பட்டது.