19th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பிபா மகளிர் உலகக் கோப்பைகால்பந்து தொடர் 2023
- பிபா மகளிர் உலகக் கோப்பைகால்பந்து தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பிரிஸ்பன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, ஸ்வீடனுடன் மோதியது.
- முடிவில் ஸ்வீடன் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. அந்த அணி உலகக் கோப்பை வரலாற்றில் வெண்கலப் பதக்கம் வெல்வது இது 4-வது முறையாகும்.
- தமிழக அரசு சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் 'ஸ்டார்ட்-அப் திருவிழா' கோவை கொடிசியா தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் தொடங்கியது.
- விழாவில், `ஸ்டார்ட்-அப் தமிழ்நாடு' தகவல் சேவை மையத்தை அமைச்சர் டிஆர்பி.ராஜா தொடங்கிவைத்தார். மேலும், தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதித் திட்டம் மூலம் 20 பயனாளிகளுக்கு ஒப்புதல் ஆணைகளை வழங்கினார்.
- அதேபோல, பெண்களுக்கான சிறப்புத் தொழில் விரிவாக்கப் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனங்களில் தொழில்முனைவோர் குழுக்களை தொடங்கிவைத்தார்.
- விழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்துவைத்தார்.