18th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் - இந்தியாவின் ஈஷா, ஷிவா ஜோடி தங்கம் வென்று அசத்தல்
- அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஈஷா சிங், ஷிவா நர்வால் ஜோடி, துருக்கியின் லேடா தர்ஹான், யூசுப் டிகெக் ஜோடியை எதிர்கொண்டது. இதில் ஈஷா, ஷிவா ஜோடி 16-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது.
- அதேவேளையில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்திய ஜோடிகள் தகுதி சுற்றை தாண்டவில்லை. மெகுலி கோஷ், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஜோடி 630.2 புள்ளிகள் சேர்த்து 9-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தது. மற்றொரு இந்திய ஜோடியான ரமிதா, திவ்யான்ஷ் சிங் பன்வார் 628.3 புள்ளிகளுடன் 17-வது இடம் பிடித்தது.
- மகளிருக்கான ஸ்கீட் பிரிவில் பரினாஸ் தலிவால், கனேமத் செகோன் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 351 புள்ளிகளுடன் 4-வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தது. இந்த தொடரில் இந்தியா பதக்க பட்டியலில் ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என 2-வது இடத்தில் உள்ளது. சீனா 5 தங்கம், 2 வெண்கலத்துடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அன்று (18.8.2023) இராமநாதபுரம் ஆய்வு மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
- முதலமைச்சர் அவர்களின் கனவு திட்டமான பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் வனப் பரப்பினை அதிகரிக்கும் நோக்கத்தோடு இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு பல்வேறு துறைகளின் மூலம் மாவட்டம் முழுவதும் வளர்க்கப்பட்டு வருகிறது.
- பெருநெல்லி, வாகை, மூங்கில், ஆலமரம், அரசமரம், அத்தி, விளாம்பழம், ஆவிமரம், கொடுக்கப்புளி. புங்கன், வன்னி, கொய்யா, பூவரசு போன்ற மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
- அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நிறைவு செய்யப்படும்.
- இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை வெளியிட்ட மத்திய பொதுத்துறை நிறுவனத் திட்டத்தின் கட்டம் -2 தவணை -3ல் இந்நிறுவனம் 510 மெகாவாட் சூரிய மின் திட்டத் திறனைப் போட்டி ஏலத்தின் மூலம் பெற்றுள்ளது.
- ராஜஸ்தானின் பிகானீர் மாவட்டத்தில் உள்ள பர்சிங்சாரில் 300 மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தி திட்டத் திறன் செயல்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தம் போட்டி ஏலம் மூலம் டாடா பவர் சோலார் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
- அடுத்த 25 ஆண்டுகளுக்கு ராஜஸ்தான் மாநிலத்திற்கு சூரிய ஒளி மின்சாரத்தை வழங்குவதற்கான இந்த ஒப்பந்தம், என்.எல்.சி இந்தியா லிமிடெட், ராஜஸ்தான் உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் இடையே 2023 ஆகஸ்ட் 17 அன்று ஜெய்ப்பூரில் கையெழுத்தானது.
- இதில் ராஜஸ்தான் உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் இயக்குநர் (நிதி) திரு.டி.கே.ஜெயின், என்.எல்.சி இந்தியா லிமிடெடின் பொது மேலாளர் திரு.டி.பி.சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
- இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 750 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, மொத்தப் பசுமை மின்சாரமும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு வழங்கப்படும். இத்திட்டம் ராஜஸ்தான் மாநிலத்தின் புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கொள்முதல் இலக்குகளை அடைய உதவும்.
- இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஒவ்வொரு ஆண்டும் 0.726 மில்லியன் டன் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்க உதவும்.
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் தற்போதுள்ள 1.40 ஜிகாவாட் உற்பத்தித் திறனைத் தவிர, என்எல்சிஐஎல் இந்தத் திறனை மற்ற மாநிலங்களில் விரிவுபடுத்துவது இதுவே முதல் முறையாகும்.
- என்.எல்.சி.ஐ.எல் தற்போது 1,421 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனைக் கொண்டுள்ளது. நிறுவனத்தின் கார்ப்பரேட் திட்டத்தின்படி, 2030-க்குள் 6,031 மெகாவாட் திறனை நிறுவ திட்டமிட்டுள்ளது.