17th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உலக தடகள கூட்டமைப்பின் துணைத் தலைவராக சுமரிவாலா தேர்வு
- உலக தடகள கூட்டமைப்பின் நிர்வாகிகள் தேர்தல் ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. இதில் தலைவராக பிரிட்டனை சேர்ந்த செபாஸ்டியன் கோ மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2015 முதல் செபாஸ்டியன் கோ தலைவராக செயல்பட்டு வருகிறார். இவரது பதவிக்காலம் 4 ஆண்டுகள் கொண்டது.
- உலக தடகள கூட்டமைப்பின் விதிகளின் படி 4-வது முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிட முடியாது. இதனால் 66 வயதான செபாஸ்டியன் கோ, தலைவராக பதவி வகிப்பது இதுவே கடைசி முறையாக இருக்கும்.
- துணைத் தலைவர்களாக இந்திய தடகள சங்கத்தின் தலைவர் ஆதில் சுமரிவாலா, கென்யா தடகள சங்கத்தின் தலைவர் ஜாக்சன் டுவி, கொலம்பியாவின் ஸிமெனா ரெஸ்ட்ரேபோ, ஸ்பெயினின் ரால் சாபடோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
- துணைத் தலைவர் பதவிக்கு 8 பேர் போட்டியிட்ட நிலையில் சுமரிவாலா உள்ளிட்ட 4 பேரும் அதிக அளவிலான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றனர். 65 வயதான சுமரிவாலா, துணைத் தலைவர் பதவியில் 4 வருடங்கள் இருப்பார். துணைத் தலைவர்களாக தேர்வாகி உள்ள 4 பேரும், உலக தடகள கூட்டமைப்பின் நிர்வாகக் குழுவில் இடம் பெறுவார்கள்.
- இதன் மூலம் வலிமையான உலக தடகள நிர்வாகக் குழுவில் இடம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சுமரிவாலா.
- நிர்வாகக் குழுவில் தலைவர், நான்கு துணைத் தலைவர்கள், மூன்று நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் ஒரு தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோர் இருப்பார்கள். இந்த குழுவே அனைத்து வகையிலான உயர்மட்ட முடிவுகளையும் எடுக்கும்.
- பிரான்சில் உலக கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ்-4) நடக்கிறது. 'ரீகர்வர்' பிரிவில் இந்தியாவின் அடானு தாஸ், திராஜ், பிரபாகர் இடம் பெற்ற ஆண்கள் அணி, அரையிறுதியில் சீன தைபேவிடம் 0-6 என தோற்றது. பின் நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் ஸ்பெயினை சந்தித்தது.
- இதில் இந்திய ஆண்கள் அணி 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்ற, வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.
- பெண்கள் அபாரம்பெண்கள் 'ரீகர்வ்' பிரிவில் இந்தியாவின் பஜன் கவுர், அன்கிதா கவுர், சிம்ரன்ஜீத் இடம் பெற்ற அணி களமிறங்கியது. அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி, 4-5 என சீன தைபேவிடம் வீழ்ந்தது.
- வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா, மெக்சிகோ மோதின. ஸ்கோர் 4-4 என சமனில் முடிந்தது. பின் நடந்த 'ஷூட் ஆப்' முறையில் அசத்திய இந்திய பெண்கள் 5-4 என வென்று வெண்கலம் வென்றனர்.
- 'புராஜெக்ட் ஏ' என்ற திட்டத்தின் கீழ், நம் கடற்படைக்கு உள்நாட்டிலேயே அதி நவீன பாதுகாப்பு அம்சங்கள் உடைய போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
- ஏற்கனவே, 'நீலகிரி, உதயகிரி, ஹிம்கிரி, தாராகிரி, துனாகிரி' ஆகிய ஐந்து போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இந்த போர்க்கப்பல்களுக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலைகள் மற்றும் மலைத் தொடர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
- இதன்படி, கர்நாடகாவில் உள்ள விந்தியகிரி மலைத் தொடரை பெருமைப்படுத்தும் வகையில், ஆறாவது கப்பலுக்கு விந்தியகிரி என பெயரிடப்பட்டு, அந்த கப்பலை வடிவமைக்கும் பணி, மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் ஹூக்ளியில் உள்ள, 'கார்டன் ரீச் ஷிப் பில்டர்' நிறுவனத்தில் நடந்து வந்தது.
- இந்நிலையில், கோல்கட்டாவில் நடந்த விழாவில் இந்த கப்பலை, ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்பின் மிக உயர்ந்த தரங்களைப் பராமரிக்கும் அதே நேரத்தில் அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் சமூகத்தை ஊக்குவிப்பதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், தொலைத்தொடர்பு, ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், டிஜிட்டல் மாற்றம் மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான இரண்டு சீர்திருத்தங்களை (கேஒய்சி சீர்திருத்தங்கள், விற்பனைப் புள்ளி (பிஓஎஸ்), பதிவு சீர்திருத்தம்) இன்று அறிமுகம் செய்தார்
- பாயிண்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) பதிவு சீர்திருத்தங்கள்-இந்தச் சீர்திருத்தம் உரிமதாரர்கள், முகவர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை (பிஓஎஸ்) கட்டாயமாகப் பதிவு செய்வதற்கான செயல்முறையை அறிமுகப்படுத்துகிறது. மோசடி நடைமுறைகள் மூலம் சமூக விரோத / தேச விரோத சக்திகளுக்கு சிம்களை வழங்கும் பி.ஓ.எஸ்ஸை அகற்ற இது உதவும்.
- கேஒய்சி சீர்திருத்தங்கள் -கேஒய்சி என்பது ஒரு வாடிக்கையாளரை தனித்துவமாக அடையாளம் காணும், ஒரு செயல்முறையாகும். அச்சிடப்பட்ட ஆதார் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, அச்சிடப்பட்ட ஆதாரின் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் மக்கள்தொகை விவரங்கள் கட்டாயமாக பெறப்படும். மொபைல் எண் துண்டிக்கப்பட்டால், அது 90 நாட்களில் காலாவதியாகும் வரை வேறு எந்த புதிய வாடிக்கையாளருக்கும் ஒதுக்கப்படாது. ஒரு சந்தாதாரர் தனது சிம் மாற்றுவதற்கு முழுமையான கேஒய்சி- ஐ மேற்கொள்ள வேண்டும், மேலும் வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் எஸ்எம்எஸ் வசதிகளுக்கு 24 மணி நேர தடை இருக்கும்.
- அடையாளம், தரவு மற்றும் கட்டண சேவைகளை பெரிய அளவில் எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட டிஜிட்டல் பொது பொருட்களின் தொகுப்பான இந்தியா ஸ்டேக்கைப் பகிர்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும், டிரினிடாட் மற்றும் டொபாகோவும் கையெழுத்திட்டுள்ளன.
- திறன் மேம்பாடு, பயிற்சித் திட்டங்கள், சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ளுதல், அரசு அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் பரிமாற்றம், பைலட் அல்லது செயல்முறை தீர்வுகளை உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் டிஜிட்டல் மாற்றம் போன்ற துறைகளில் ஒத்துழைக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
- மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தேசிய மின் ஆளுமைப் பிரிவு மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகள் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.