15th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
10வது முறை செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி
- இந்தியாவின் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- மேலும் 1,000 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லி செங்கோட்டை பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- சுதந்திர தின விழாவில் பங்கேற்க சிறப்பு விருந்தினர்கள் 1,800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியைக் காண சுமார் 30 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தர உள்ளனர்.
- தேசிய பாதுகாப்பு படை, மத்திய பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் டெல்லி காவல் துறையினர் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
- சுதந்திர தினத்தை முன்னிட்டு 10-வது முறையாக செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
- கடந்த 2014-ல் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா 10-வது இடத்தில் இருந்தது. இப்போது 5-வது இடத்துக்கு நாடு முன்னேறியுள்ளது.
- அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும். வரும் 2047-ம் ஆண்டில் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுத்திருக்கும்.
- சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக்கம்பத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின்னர் சுதந்திர தின உரையாற்றிய முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது.,
- மாநிலங்களுக்கு மாநிலம் உணவு, மொழி, பண்பாட்டில் மாறுபாடு உள்ளது. வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையுடன் வாழ்வதே நம் பலம். மதங்களின் பெயரால் மக்களிடையே உள்ள பிளவை களைய முயன்றவர் மகாத்மா காந்தி.
- நாட்டின் வளர்ச்சி பெண்களிடம் இருந்தே தொடங்குகிறது என்பதை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். புதுமைப் பெண், கட்டணமில்லா பேருந்து சேவை என பெண்களுக்கான திட்டங்களை வகுத்துள்ளோம்.
- பெண்களுக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் இனி 'விடியல் பயணத் திட்டம்' என்று அழைக்கப்படும். மாநிலம் முழுவதும் அனைத்து அரசு ஆரம்ப பள்ளிகளிலும் ஆக.25 முதல் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
- இயற்கையாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத தம்பதிகளுக்கு மிகவும் பொதுவான செயற்கை கருத்தரிப்பு முறையாக 'இன் விட்ரோ கருத்தரிப்பு (ஐவிஎப்)' சிகிச்சை விளங்குகிறது.
- இந்நிலையில் கோவா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவச ஐவிஎப் சிகிச்சையை அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தொடங்கி வைத்தார்.
- இதன் மூலம் நாட்டில் இலவச செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை வழங்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை கோவா பெற்றுள்ளது.
- ஐவிஎப் சிகிச்சை மையத்துடன் உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் (ஏஆர்டி) மற்றும் இன்ட்ரா கருப்பையக கருவூட்டல் (ஐயூஐ) மையத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
- ஒவ்வொரு மாதமும் சிறந்த சர்வதேச வீரர்களை தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவித்து வருகிறது. அந்தந்த மாதங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 3 வீரர்கள், அந்த மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்படுவார்கள்.
- கடந்த மாதம் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் பரபரப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியின் ஜேக் க்ராவ்லே மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.
- இதேபோன்று உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் நெதர்லாந்து அணி கவனம் பெற்றது. இந்த அணியின் பாஸ் டீ லீடும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.
- இந்நிலையில் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரராக கிறிஸ் வோக்ஸை தேர்வு செய்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடியது.
- 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றன. 4 ஆவது போட்டி டிராவில் முடிந்தது.
- இதன் மூலம் ஆஷஸ் தொடர் 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது. இதில் தொடர் நாயகனாக இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ் அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.