14th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
77வது சுதந்திர தினம் - 76 வீர விருத்துகளுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல்
- 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயுதப்படை மற்றும் மத்திய ஆயுதப்படை காவலர்களுக்கு 76 கேலண்ட்ரி விருதுகளை (ராணுவ வீர விருது) வழங்க ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
- இந்த 76 கேலண்ட்ரி விருதுகளில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு வழங்கப்படும் 4 கீர்த்தி சக்ரா விருதுகள், 11 சௌர்ய சக்கரங்கள், 52 சேனா பதக்கங்கள் , 3 நாவோ சேனா பதக்கம் (கடற்படை வீரர்கள்) மற்றும் 4 வாயு சேனா பதக்கங்கள் (விமானப்படை) ஆகியவை அடங்கும்.
- பல்வேறு இராணுவ நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக மரணம் அடைந்த இராணுவ நாய் மதுவுக்கு விருது, விமானப்படை வீரர்களுக்கும் விருது வழங்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
- ஆபரேஷன் ரக்ஷக், ஆபரேஷன் பனிச்சிறுத்தை, ஆபரேஷன் கேசுவாலிட்டி இவாக்யூவேஷன், ஆபரேஷன் மவுண்ட் சோமோ, ஆபரேஷன் பாங்சாவ் பாஸ், ஆபரேஷன் மேக்தூத், ஆபரேஷன் ஆர்க்கிட், ஆபரேஷன் கலிஷாம் பள்ளத்தாக்கு, மீட்பு நடவடிக்கை மற்றும் ஆபரேஷன் வெளியேற்றம் ஆகிய செயல்பாடுகளுக்கும் ஜனாதிபதி திரௌபதி முர்மு விருது வழங்கி கௌரவிக்க உள்ளார்.
- வேலூர் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 150 மாணவர்கள் தங்கும் வகையில் ரூ.8 கோடியே 43 லட்சத்து 9 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டிடம், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ரூ.8 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்கள், திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சிதிலமடைந்துள்ள முதன்மை கட்டிடத்திற்கு மாற்றாக ரூ.10 கோடியே 94 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் என பல மாவட்டங்களில் மொத்தம் ரூ.87 கோடியே 76 லட்சத்து 93 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ளன.
- இந்த கட்டிடங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வீடியோ கான்பரன்ஸ் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்கல்வித் துறை கட்டிடங்களை திறந்து வைத்தார்.
- தேசிய சமூகப் பாதுகாப்பு நிறுவனத்தின் (என்.ஐ.எஸ்.டி) பொதுக் குழுக் கூட்டத்திற்கு மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் ஜி.சி, என்.ஐ.எஸ்.டி தலைவர் திரு சவுரப் கார்க் தலைமை தாங்கினார்.
- என்.ஐ.எஸ்.டி.யின் கட்டமைப்பு, செயல்பாடுகள் மற்றும் திட்டங்களின் நிலையை மதிப்பாய்வு செய்வது கூட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். கலந்துரையாடலின் முன்னோட்டமாக, என்.ஐ.எஸ்.டி இயக்குநர் என்.ஐ.எஸ்.டி குறித்து ஒரு சுருக்கமான விளக்கக்காட்சியை வழங்கினார், மேலும் என்.ஐ.எஸ்.டி பிரிவுகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளை ஒரு குறும்படத்தின் மூலம் காட்சிப்படுத்தினார்.
- கூட்டத்தில் நிகழ்ச்சி நிரல் அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆண்டறிக்கை - 2020-2021, 2021-2022, இருப்புநிலை அறிக்கை 2022-23, 2022-23 நிதியாண்டில் பயிற்சித் திட்டங்களின் நிலை, டெல்லி போலீஸ் அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், மனிதவளத்துடன் ஆராய்ச்சிப் பிரிவை புதுப்பித்தல், 2023-24 ஆம் ஆண்டில் என்ஐஎஸ்டியால் திட்டமிடப்பட்ட ஆராய்ச்சி நடவடிக்கைகள், என்ஐஎஸ்டியின் முன்மொழியப்பட்ட சமூகப் பாதுகாப்பு அமைப்பு, என்ஐஎஸ்டியின் முன்மொழியப்பட்ட சமூகப் பாதுகாப்பு அமைப்பு, என்ஐஎஸ்டியின் ஒளிபரப்பு தளத்தை நிறுவுதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.