Type Here to Get Search Results !

13th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


13th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

'இல்லந்தோறும் மூவர்ணக் கொடி' என்ற உணர்வுடன் சமூக ஊடகங்களின் காட்சிப் படத்தை மாற்றுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி, தனது சமூக ஊடகக் கணக்குகளின் காட்சிப் படங்களை மூவர்ணக் கொடியாக மாற்றினார். 'இல்லந்தோறும் மூவர்ணக் கொடி’ #HarGharTiranga உணர்வில் அனைவரும் இதைச் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
  • நாடு முழுவதும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை இல்லந்தோறும் மூவர்ணக் கொடி இயக்கம் கொண்டாடப்படுகிறது.
மூரிங் பிளேஸ் தளத்துக்கும் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்
  • குஜராத்தின் கட்ச் பிராந்தியத்தின் ஒரு பகுதி ரான் ஆப் கட்ச். பல நூறு கிலோ மீட்டர் விரிந்து பரந்து கடக்கும் சதுப்பு நிலப் பகுதி. இதன் ஒரு முனைதான் இந்தியா, பாகிஸ்தான் எல்லைகளாக பிரிகிறது. 
  • பாகிஸ்தானுடனான மிக முக்கியமான எல்லை பிரச்சனை உள்ள சர் கிரீக் என்பது இங்குதான் இருக்கிறது.  இந்த சர் கிரீக், ஹராமி நாலா பகுதிக்குதான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடி விசிட் அடித்துள்ளார். 
  • ஹராமி நாலாவில் எல்லைப் பாதுகாப்புப் படையின் கப்பல்கள் மற்றும் படகுகளை நிறுத்தி வைத்திருக்கக் கூடிய மூரிங் பிளேஸ் (Mooring Place) எனப்படும் தளத்துக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினார் அமித்ஷா. 
  • மேலும் குஜராத்தின் கட்ச்சில் பல்வேறு திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை செயலாளர், எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைமை இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
  • ஹராமி நாலாவுக்குச் சென்று அங்குள்ள பாதுகாப்புச் சூழல் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். அங்கு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா, காந்திநகரில் தேசிய பாதுகாப்புப் படையின் (என்.எஸ்.ஜி) பிராந்திய மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்
  • மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா, தேசிய பாதுகாப்புப் படையின் (என்.எஸ்.ஜி) பிராந்திய மையம் மற்றும் குஜராத் அரசின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு காந்திநகரில் இன்று அடிக்கல் நாட்டினார். 
  • முன்னதாக, 450 சங்கங்களில் ஏற்பாடு செய்திருந்த மரம் நடும் இயக்கத்தில் திரு. அமித் ஷா பங்கேற்றார். ரூ.40 கோடியில் கட்டப்பட உள்ள மான்சா-பல்வா 4 வழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். 
  • ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்ட மான்சா சார்பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார், மானசாவின் சந்திரசர் கிராமத்தில் உருவாக்கப்பட்டு வரும் குளத்தை பார்வையிட்டார். 
  • திரு. மோடியின் "என் மண் என் தேசம்‘’ பிரச்சாரத்தின் கீழ், தாய் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு நினைவுப் பலகையையும் அவர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் என்.எஸ்.ஜி இயக்குநர் ஜெனரல் எம்.ஏ.கணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel