ஆன்லைன் விளையாட்டுக்கான ஜி.எஸ்.டி மசோதா / GST BILL FOR ONLINE GAMING
TNPSCSHOUTERSAugust 14, 2023
0
ஆன்லைன் விளையாட்டுக்கான ஜி.எஸ்.டி மசோதா / GST BILL FOR ONLINE GAMING: இந்த மசோதாவின்படி ஆன்லைன் விளையாட்டு, கேசினோக்கள் மற்றும் குதிரை பந்தயங்கள் ஆகியவற்றுக்கான ஜி.எஸ்.டி., பந்தய தொகையில், 28 சதவீதமாக வசூலிக்கப்படும்.
வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களால், நம் நாட்டிலிருந்து மேற்கொள்ளும் ஆன்லைன் விளையாட்டுகளை பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுகிறது.
வெளிநாடுகளைச் சேர்ந்த ஆன்லைன் விளையாட்டு தளங்கள், தங்களை முறையாக ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்யாவிட்டால், அந்த தளங்களை பயனாளர்கள் அணுகுவதற்கான அனுமதி மறுக்கப்படும்.
இதன் வாயிலாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுக்கப்படும். மேலும், இந்த விளையாட்டுகள் வாயிலாக முறைகேடாக வருமானம் ஈட்டுவது, கருப்பு பணத்தை புழக்கத்தில் விடுவது போன்றவையும் தடுக்கப்படும்.
பணம் இல்லாமல் மேற்கொள்ளப்படும் சாதாரண ஆன்லைன் விளையாட்டுகள், ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் வராது. பார்லிமென்டில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதன் வாயிலாக, மாநில அரசுகளும் தங்களின் ஜி.எஸ்.டி., விதிமுறைகளை சட்டசபை நடவடிக்கைகள் வாயிலாக திருத்தம் செய்யலாம்.
ENGLISH
GST BILL FOR ONLINE GAMING: According to the bill, GST for online gaming, casinos and horse racing will be levied at 28 percent of the bet amount. It is mandatory for foreign companies to register online games from our country.
Amendment If online gaming sites from foreign countries do not register themselves properly with GST, users will be denied access to those sites.
This will prevent illegal money transactions. Also, illegal income generation and circulation of black money through these games will also be prevented. Casual online games without money are not covered by GST.
With the passage of this bill in Parliament, state governments can also amend their GST regulations through legislative acts.