12th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மத்தியப் பிரதேச மாநிலம் சாகரில் வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
- பிரதமர் திரு. நரேந்திர மோடி மத்தியப் பிரதேசத்தின் சாகரில் வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- ரூ.100 கோடிக்கு மேல் செலவில் கட்டப்பட உள்ள சந்த் சிரோமணி குருதேவ் ஸ்ரீ ரவிதாஸ் நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டுதல், ரூ.1580 கோடிக்கு மேல் செலவில் உருவாக்கப்படும் இரண்டு சாலை திட்டங்கள் மற்றும் ரூ.2475 கோடிக்கு மேல் செலவில் உருவாக்கப்பட்ட கோட்டா-பினா ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிப்பது ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும்.
- 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்தது.
- இந்த தொடரில், தோல்வியையே சந்திக்காத இந்தியா அணியும் மலேசியா அணியும் இறுதி போட்டியில் மோதின. இதில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியா அணியை வீழ்த்தி 4வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது.
- ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றிய இந்திய ஹாக்கி அணிக்கு வெற்றி கோப்பையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் வழங்கினர். உடன் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இருந்தார்.
- 4வது முரையாக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, தமிழக அரசு சார்பில் வீரர்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் பரிசு தொகையும், பயிற்சியாளர்களுக்கு 2 1/2 லட்ச ரூபாய் பரிசு தொகையும் பரிசாக அறிவிக்கப்பட்டது.
- அதே போல ஹாக்கி இந்தியா அமைப்பில் இருந்து வீரர்களுக்கு 3 லட்ச ரூபாய் பரிசு தொகையும், பயிற்சியாளர்களுக்கு 1 1/2 லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டது.
- நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த சின்னதுரை என்ற மாணவர், வள்ளியூர் கண்கார்டியா அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். பட்டியலினத்தை சேர்ந்த இவருக்கும், அதே பள்ளியில் படித்த சில மாணவர்களுக்கும் இடையே சாதி ரீதியான மோதல் இருந்து வந்துள்ளது.
- கடந்த 9ம் தேதி இரவு வீடு புகுந்து ஒரு கும்பல் சின்னத்துரையையும், தடுக்க வந்த அவரது தங்கையையும் அரிவாளால் தாக்கியது. இது தொடர்பாக, 4 மாணவர்கள் உட்பட 7 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- இந்நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- இந்தக் குழு, கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களைப் பெற்று அதனடிப்படையில் அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழக சட்டப்பேரவையில் 2021-22-ம் ஆண்டுக்கான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கையில், சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில், 'முன்மாதிரி கிராம விருது' தோற்றுவிக்கப்பட்டு, மாவட்டத்துக்கு ஒரு கிராம ஊராட்சி என்ற அடிப்படையில், 37 கிராம ஊராட்சிகளுக்கு முன்மாதிரி கிராம விருது வழங்கி கவுரவிக்கப்படும்.
- இவ்விருதுக்கான கேடயமும், தலா ரூ.7.5 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும். மாவட்ட அளவிலான விருதுகளுடன், சிறப்பாக செயல்படும் மூன்று ஊராட்சிகளுக்கு மாநில அளவில் முன்மாதிரி கிராம விருது வழங்கி அதற்கான கேடயமும், தலா ரூ.15 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது.
- அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், 2021-22-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான முன்மாதிரி கிராம விருதுகளுக்கு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குளூர் கிராம ஊராட்சி, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நி.பஞ்சம்பட்டி கிராம ஊராட்சி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நட்டாத்தி கிராம ஊராட்சி ஆகிய மூன்று கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
- 2022-23-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான முன்மாதிரி கிராம விருதுகளுக்கு கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி (தெற்கு) ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நாயக்கன்பாளையம் கிராம ஊராட்சி, செங்கல்பட்டு மாவட்டம்சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மேல்மருவத்தூர் கிராமஊராட்சி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அரியனேந்தல் கிராம ஊராட்சி ஆகிய மூன்று கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
- தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆறு கிராம ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாநில அளவிலான முன்மாதிரி கிராம விருதுகளும், பரிசுத் தொகையாக தலா ரூ.15 லட்சம் மற்றும் கேடயத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் வழங்கி வாழ்த்தினார்.