Type Here to Get Search Results !

கோப் பஜார் செயலி / CO-OP BAZAAR APP

  • கோப் பஜார் செயலி / CO-OP BAZAAR APP: தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையின் கீழ் பல்வேறு நிறுவனங்கள் பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தி வருகின்றன. இதனை மேலும் விரிவுப்படுத்தும் விதமாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 
  • கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்தவும், வீடுகளுக்கு டெலிவரி செய்யவும், அந்த வகையில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் CO-OP Bazaar என்னும் 'கோப் பஜார்' எனப்படும் கூட்டுறவு சந்தை செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. 
  • இதன் செயல்பாட்டை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். 
  • இந்த செயலி வாயிலாக, திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், ஈரோடு, பெருந்துறை, சைதாப்பேட்டை கூட்டுறவு சங்கங்கள், திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம், காஞ்சிபுரம் பண்டகசாலை, கொல்லிமலை மற்றும் சத்தியமங்கலம் பெரும் பன்னோக்கு கூட்டுறவு சங்கம் ஆகியவற்றின் மளிகை, தேன், மஞ்சள் துாள், மிளகாய் துாள் உட்பட, 44 பொருட்களை வாங்கலாம். 
  • இது தவிர, கூட்டுறவு விற்பனை இணையத்தின் உரங்கள், நுண்ணுாட்ட சத்து, நீரில் கரையும் உரங்கள் உட்பட, 20 பொருட்கள் என மொத்தம், 64 பொருட்களுக்கும் 'ஆர்டர்' கொடுக்கலாம்.
  • இதனால் இனிமேல் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்யலாம். 

ENGLISH

  • CO-OP BAZAAR APP: Various companies are manufacturing and marketing products under the cooperative department of Tamilnadu government. Further steps are being taken to expand this further.
  • CO-OP Bazaar, a co-op market app, has been developed at a cost of Rs 20 lakh to market the products of co-operative societies and deliver them to homes. Cooperative Minister Periya Karuppan inaugurated the operation at the Chennai Chief Secretariat.
  • Through this app, you can buy 44 items including grocery, honey, turmeric powder, chili powder from Tiruchengode Agricultural Producers Cooperative Society, Erode, Perundurai, Saidappettai Cooperative Societies, Tiruvallikeni City Cooperative Society, Kanchipuram Shop, Kollimalai and Sathyamangalam Perum Pannoku Cooperative Society.
  • Apart from this, Co-operatives can 'order' a total of 64 products, including 20 products including fertilizers, micronutrients, water-soluble fertilizers on the internet.
  • Henceforth, the public can order the products they need from the comfort of their homes.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel