Type Here to Get Search Results !

6th JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


6th JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஜப்பான் முன்னாள் பிரதமரும், ஜப்பான்-இந்தியா கூட்டமைப்பு தலைவருமான மேன்மை தங்கிய திரு யோஷிஹிடே சுகாவை பிரதமர் சந்தித்தார்
  • ஜப்பான் முன்னாள் பிரதமரும், ஜப்பான்-இந்தியா கூட்டமைப்பு தலைவருமான மேன்மை தங்கிய திரு யோஷிஹிடே சுகாவை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார். 
  • நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய "கணேஷா நோ கை" குழு மற்றும் கெய்டன்ரன் (ஜப்பான் வர்த்தக கூட்டமைப்பு) உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளுடன் திரு சுகா இந்தியா வருகை தந்துள்ளார்.
  • ஜப்பான்-இந்தியா கூட்டமைப்பு தலைவராக முதல் முறையாக இந்தியா வந்துள்ள திரு சுகாவை பிரதமர் வரவேற்றார். அப்போது இரு தலைவர்களும் முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, ரயில்வே, இருநாட்டு மக்களிடையேயான தொடர்பு, திறன் மேம்பாட்டு கூட்டாண்மை உள்ளிட்ட ஜப்பான்-இந்தியா இடையே உலகளாவிய கூட்டாண்மை மற்றும் நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.
  • ஜப்பானில் யோகா மற்றும் ஆயுர்வேதா பிரபலமாகி வருவதை வரவேற்ற அவர்கள், இந்தியா-ஜப்பான் இடையே கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.
  • கெய்டன்ரன் உறுப்பினர்களை வரவேற்ற பிரதமர், வர்த்தக சூழல் முறையை மேம்படுத்த நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்து அவர் எடுத்துரைத்தார். ஜப்பான் முதலீட்டாளர்கள் இந்தியாவில் தங்கள் முதலீடுகளை விரிவுபடுத்துமாறும் ஒத்துழைப்பில் புதிய வழிவகைகளை காணுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.
தான்சானியாவில் சென்னை ஐ.ஐ.டி. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
  • நாடு முழுதும், 23 இடங்களில் ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. என்.ஐ.ஆர்.எப்., எனப்படும், தேசிய கல்வி மைய தரவரிசை கட்டமைப்பு வெளியிட்ட, தரவரிசை பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி.முதல் இடம் பிடித்து உள்ளது. 
  • வெளியுறவுத்துறை அமைச்சர், ஜெய்சங்கர் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக, தான்சானியா சென்றுள்ளார்.அங்கு, தான்சியா தீவு நாடான சான்சிபாரில், அந்நாட்டு அதிபர் ஹூசைன் அலி முவின்யி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இந்த வளாகம் இந்தியாவுக்கும், தான்சானியாவுக்கும் இடையேயான, நீண்டகால நட்பை பிரதிபலிப்பக்கிறது. ஆப்ரிக்கா மற்றும் உலகளாவிய தெற்கில் உள்ள மக்களுடன் நல்லுறவை உருவாக்குவதில், இந்தியா கவனம் செலுத்துவதை நினைவூட்டுகிறது.
  • ஒப்பந்தப்படி, தான்சானியாவில் துவங்கப்பட உள்ள ஐ.ஐ.டி.,யில் கல்வி திட்டங்கள், பாடத்திட்டங்கள், மாணவர் தேர்வு அம்சங்கள் மற்றும் கற்பித்த விபரங்கள் ஆகியவை, சென்னை ஐ.ஐ.டி.,யால் மேற்கொள்ளப்படும். 
  • இங்கு, பயிலும் மாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி.,யால் பட்டமும் வழங்கப்படும்.அதற்கான, செலவுகள் சான்சிபார் - தான்சானியா அரசால் மேற்கொள்ளப்படும்.
இந்தியக் கப்பற்படையும் (ஐஎன்) அமெரிக்கக் கப்பற்படையும் (யுஎன்) மேற்கொண்ட சால்வெக்ஸ் எனப்படும் அழிவுக் காப்பு மற்றும் வெடிக்கும் ஆயுதங்களை அகற்றும் பயிற்சி
  • இந்தியக் கப்பற்படையும் அமெரிக்கக் கப்பற்படையும் மேற்கொண்ட அழிவுக் காப்பு மற்றும் வெடிக்கும் ஆயுதங்களை அகற்றும் (இஒடி) பயிற்சி, சால்வெக்ஸ் ஜூன் 26 முதல் ஜூலை 06 வரை கொச்சியில் நடத்தப்பட்டது. 
  • இந்தப் படைகள் 2005 ஆம் ஆண்டு முதல் கூட்டாக அழிவுக் காப்பு மற்றும் இஒடி பயிற்சிகளில் பங்கேற்று வருகின்றன. இதில் இந்தியக் கப்பற்படையின் ஐஎன்எஸ் நிரீக்ஷக், அமெரிக்கக் கப்பற்படையின் சால்வர் ஆகிய கப்பல்களும் அடங்கும்.
  • 10 நாட்களுக்கும் மேலாக, இரு நாடுகளின் நீச்சல் குழுக்களும் கடல்சார் மீட்பு பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர் மற்றும் நிலத்திலும் கடலிலும் வெடிக்கும் ஆயுதங்களை அழித்தல் செயல்பாடுகளின் பல்வேறு அம்சங்களில் கூட்டாகப் பயிற்சி பெற்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel