Type Here to Get Search Results !

9th JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


9th JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

அதிவேக இணையத்துக்காக 48 செயற்கைக்கோள்களை ஏவிய ஸ்பேஸ் எக்ஸ்
  • அதிவேக இணையத்துக்காக எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், 48 செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது. 
  • கலிபோர்னியாவின் வான்டர்பெர்க் ஏவுதளத்தில் இருந்து, ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் 48 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டது.
  • ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஃபால்கன் 9 இன் முதல் நிலை பசிபிக் பெருங்கடலில் நிறுத்தப்பட்ட ஆஃப் கோர்ஸ் ஐ ஸ்டில் லவ் யூ ட்ரோன்ஷிப்பில் தரையிறங்கியது. 
  • இதன்மூலம், இணையம் முற்றிலும் கிடைக்காத இடங்களுக்கும் குறைந்த செலவில் அதிவேக இணையத்தை ஸ்டார் லிங்க் வழங்கும்.
கர்நாடக மாநிலம் ஹம்பியில் 3-வது ஜி-20 கலாச்சார பணிக்குழு கூட்டம்
  • கர்நாடக மாநிலம் ஹம்பியில் 3-வது ஜி-20 கலாச்சார குழு மாநாடு இன்று (09-07-2023) தொடங்கியது. ஹம்பியில் நடைபெறும் மூன்றாவது கூட்டத்தில் ஜி 20 உறுப்பு நாடுகள், அழைப்பாளர் நாடுகள் மற்றும் ஏழு பலதரப்பு அமைப்புகளிலிருந்து சுமார் 50 பேர் பங்கேற்றுள்ளனர். 
  • கலாச்சார சொத்துக்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு; நிலையான எதிர்காலத்திற்காக வாழும் பாரம்பரியத்தைப் பயன்படுத்துதல்; ஆக்கபூர்வமான கலாச்சாரப் பொருளாதாரத்தை ஊக்குவித்தல்; மற்றும் கலாச்சார பாதுகாப்பிற்காக டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை இக்கூட்டத்தின் 4 முன்னுரிமை அம்சங்களாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel