7th JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உத்தர பிரதேசத்தில் ரூ.12,600 கோடி, சத்தீஸ்கரில் ரூ.7,600 கோடி திட்டங்கள் - பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
- சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது ராய்ப்பூர் - கோடெபோட், பிலாஸ்பூர்- பத்ரபாலி இடையே தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- ராய்ப்பூர்-காரியார் இடையே 103 கி.மீ நீளமுள்ள ரயில் பாதையும், கியோட்டி - அந்தகர் இடையே 17 கிமீ புதிய ரயில் பாதையையும், கோர்பாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசனுக்கான ஆலையையும் அவர் தொடங்கி வைத்தார்.
- இதுதவிர்த்து, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், பயனாளர் அட்டை விநியோகத்தையும் அவர் தொடங்கி வைத்தார். அந்தகர் மற்றும் ராய்பூர் இடையே புதிய ரயில் சேவையை ஆரம்பித்து வைத்தார்.
- ஒட்டுமொத்தமாக பிரதமர் நரேந்திர மோடி ரூ.7,600 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கியும் பல திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.
- உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் செயல்படும் கீதா பதிப்பகத்தின் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
- இதன்பிறகு கோரக்பூர் ரயில் நிலையத்தில் இரண்டு வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதன்படி கோரக்பூர்- லக்னோ, ஜோத்பூர்- அகமதாபாத் இடையே வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டு உள்ளன. மேலும் கோரக்பூர் ரயில் நிலையத்தில் ரூ.500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
- இதன்பிறகு தனது தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவர் ரூ.12,100 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்தும் பல திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.
'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டம்
- மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்துக்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னையில், முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக, மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
- இந்த திட்டம் தமிழ்நாட்டின் வரலாற்றில் மாபெரும் திட்டம், எந்தவொரு தகுதியான பளனாளியும் விடுபட்டு விடக்கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
- இந்த திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் நாளன்று தொடங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் பயன்களை பெற கிட்டத்தட்ட ஒன்றரை கோடி விண்ணப்பங்கள் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- TEALS (Tecnical Education And Learning Support) எனும் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தமிழ்நாட்டின் கிராம பகுதிகளைச் சேர்ந்த மாணவச் செல்வங்களுக்கு அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த புரிதலும் சென்றடைய TEALS திட்டம் செயல்படுத்தப்படும்.
- முதலமைச்சர் ஸ்டாலின் வானவில் மன்றம் திட்டத்தின் வாயிலாக STEM முயற்சியை தொடங்கி வைத்தார்கள். மாணவர்களின் கண்டுபிடிப்பு திறனை ஊக்குவிக்கும் விதமாக 710 கருத்தாளர்களின் உதவியோடு மாணவர்களின் அறிவியல் திறன்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.
- இதன் அடுத்த கட்டமாக Robotics, Artificial Intelligence, Machine learning போன்ற தொழில்நுட்பங்கள் நமது கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் எனும் நோக்கில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- தேர்தல் மேலாண்மை மற்றும் நிர்வாகத் துறையில் ஒத்துழைப்புக்கு நிறுவன ரீதியிலான கட்டமைப்பை உருவாக்க இந்தியத் தேர்தல் ஆணையமும், பனாமாவின் தேர்தல் நடுவர் மன்றமும் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- இரு நாடுகளின் தேர்தல் மேலாண்மை அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை வலப்படுத்துவது மற்றும் தகவல் பரிமாற்றம் குறித்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார் தலைமையிலான குழுவினர், பனாமாவின் தேர்தல் நடுவர்மன்ற தலைமை நிர்வாகி திரு ஆல்ஃபிரடோ ஜூன்கா வெண்டேக்கேயுடன் கலந்துரையாடினர்.
- இந்த உரையாடலின் போது, பனாமாவின் முதலாவது துணைத்தலைமை நிர்வாகி திரு எட்வர்டோ வால்டெஸ் எஸ்கோஃபெரி, இரண்டாவது துணைத் தலைமை நிர்வாகி திரு லூயிஸ் ஏ குவேரா மோரல்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
- அரசு இ- சந்தையின் தொலைநோக்குப் பார்வைக்கேற்ப இ-சந்தை நடைமுறையில் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதில் மிகச்சிறந்த பங்களிப்பு செய்துள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் 2023-ம் ஆண்டுக்கு “உரிய நேரத்தில் பணம் செலுத்துதல் (மத்திய பொதுத்துறை நிறுவனங்கள்)” பிரிவில் அரசு இ-சந்தை விருதினைப் பெற்றுள்ளது.
- இந்த விருதினை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் (திட்டமிடல் மற்றும் திட்டங்கள்) திரு கே மோகன் ரெட்டி பெற்றுக்கொண்டார்.
- பாதுகாப்பு அமைச்சகம், ஜூலை 07, 2023 அன்று புது தில்லியில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) உடன் இந்திய கடலோரக் காவல்படைக்கு இரண்டு டோர்னியர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் புதுதில்லியில் கையெழுத்தானது.
- ரூ. 458.87 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில், பாதுகாப்பு அமைச்சகமும், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும் கையெழுத்திட்டன.
- இந்த விமானத்தில் கண்ணாடி காக்பிட், கடல் ரோந்து ராடார், எலக்ட்ரோ ஆப்டிக் இன்ஃப்ரா-ரெட் சாதனம், மிஷன் மேனேஜ்மென்ட் சிஸ்டம் போன்ற பல மேம்பட்ட கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் இந்திய கடலோர காவல் படையின் கடல் பகுதி வான்வழி கண்காணிப்பு திறனை மேலும் மேம்படுத்தும்.
- டோர்னியர் விமானங்கள் கான்பூரில் உள்ள எச்ஏஎல் (போக்குவரத்து விமானப் பிரிவு) இல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன, மேலும் அரசின் ‘மேக் இன் இந்தியா’ முயற்சிக்கு இணங்க, பாதுகாப்பில் தற்சார்பை அடைவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.