4th JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
துலுக்கர்பட்டி அகழாய்வில் தமிழி எழுத்து ஓடுகள்
- துலுக்கர்பட்டி கிராமத்தில், 36 ஏக்கரில், தொல்லியல் மேடு உள்ளது. இந்தாண்டு அங்கு, இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின. இதில், 'புலி' என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட, கருப்பு - சிவப்பு நிற பானையோடு கண்டெடுக்கப்பட்டது.
- இந்நிலையில், மேலும், மூன்று பானையோடுகளில் தமிழி எழுத்து பொறிப்புகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது, தொடர்ச்சியற்ற உடைந்த பகுதிகளாக உள்ளன. தற்போது கிடைத்துள்ள பானை ஓடுகளில், 'திஈய, திச, குவிர(ன்)' ஆகிய தமிழி எழுத்துப் பொறிப்புகள் உள்ளன.
- இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உட்பட 9 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) சுழற்சி அடிப்படையிலான தலைமைப் பொறுப்பை இந்தியா தற்போது ஏற்றுள்ளது.
- இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் 23வது ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று நடந்தது.
- இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாமிடிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் இணைந்தனர்.
- தெற்காசிய கால்பந்து தொடரின் 14வது சீசன் பெங்களூருவில் நடந்தது. 8 அணிகள் மோதின. பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட 4 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. லெபனான், வங்கதேச அணிகள் அரையிறுதியுடன் திரும்பின.
- பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் நடந்த பைனலில் உலகத் தரவரிசையில் 100 வது இடத்திலுள்ள இந்திய அணி, 141 வது இடத்திலுள்ள குவைத்தை எதிர்கொண்டது.
- முடிவில் போட்டி 1-1 என சமனில் முடிந்தது. இதனால் ஆட்டம் 'பெனால்டி ஷூட் அவுட்டுக்கு' சென்றது. இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.
- தெற்காசிய கால்பந்து தொடரில் இந்திய அணி 9வது முறையாக (1993, 1997, 1999, 2005, 2009, 2011, 2015, 2021, 2023) சாம்பியன் ஆனது.
- இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழுத் தலைவராக இருந்தவர் சேட்டன் சர்மா. சர்ச்சைக்குரிய முறையில் பேசி பதவியை பறிகொடுத்தார்.
- நிரந்தர தலைவரை தேர்வு செய்யும் பணியில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) இறங்கியது. இந்நிலையில், தேர்வுக்குழு தலைவராக இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அகார்கர் தேர்வானார். அகார்கர் 191 ஒரு நாள் (288 விக்.,), 26 டெஸ்ட் (58), 4 'டி-20' (3) போட்டிகளில் விளையாடி உள்ளார்.