Type Here to Get Search Results !

30th JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


30th JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 4 போட்டிகள் - கோவா சாலஞ்சர்ஸ் சாம்பியன் பட்டம்
  • இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 4 போட்டிகள் புனேவில் உள்ள ஷிவ்சத்ரபதி விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வந்தன. இதன் இறுதிப் போட்டியில் சென்னை லயன்ஸ் - கோவா சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின.
  • முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை அணியின் பெனடிக் டூடா, கோவா அணியின் ஹர்மீத் தேசாயை எதிர்த்து விளையாடினார். இதில் உலகத் தரவரிசையில் 33-வது இடத்தில் உள்ள டூடாவை 1-2 (11-6, 4-11, 8-11) என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் ஹர்மீத் தேசாய்.
  • 2-வதாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் சென்னையின் யாங்ஸி லியு, கோவாவின் சுதாசினியுடன் மோதினார். இதில் யாங்ஸி லியு 2-1 (7-11, 11-6, 11-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 
  • 3-வதாக நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் சென்னையின் ஷரத் கமல், யாங்ஸி லியு ஜோடி கோவாவின் ஹர்மீத் தேசாய், சுதாசினி ஜோடியை எதிர்கொண்டது. இதில் ஷரத் கமல், யாங்ஸி லியு ஜோடி 2-1 (11-7,11-9,10-11) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.  
  • 4-வதாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை அணியின் ஷரத் கமல், உலகத் தரவரிசையில் 47-வது இடத்தில் உள்ள கோவாவின் ஆல்வரோ ரோபிள்ஸுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
  • இதில் 32-வது இடத்தில் உள்ள ஷரத் கமல் 0-3 (8-11, 8-11, 10-11)என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். ஆல்வரோபிள்ஸின் வெற்றியால் கோவா அணி 7-5 என முன்னிலை வகித்தது.
  • கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை அணியின் சுதிர்தா முகர்ஜி, கோவா அணியின் ரீத் ரிஷ்யாவை எதிர்கொண்டார். ரீத் ரிஷ்யா 11-6 என சுதிர்தா முகர்ஜியை தோற்கடிக்க கோவா சாலஞ்சர்ஸ் அணி 8-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
அடிப்படைக் கல்வியறிவு தொடர்பான உல்லாஸ் (ULLAS) மொபைல் செயலியை மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் அறிமுகப்படுத்தினார்
  • புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ன் 3 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு புதுதில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் அகில பாரதிய சிக்ஷா சமகம் 2023 எனப்படும் அகில இந்தியக் கல்வி மாநாடு இரண்டு நாட்கள் (29.07.2023 மற்றும் 30.07.2023) நடைபெறுகிறது.
  • இதில் மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் உல்லாஸ் என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார்.
  • சமூகத்தில் அனைவரும் வாழ்நாள் கற்றல் தொடர்பான அம்சங்களைப் புரிந்துகொள்வது (ULLAS Understanding Lifelong Learning for All in Society) என்ற பொருளில் இந்த உல்லாஸ் மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த செயலி அடிப்படை எழுத்தறிவு மற்றும் முக்கியமான வாழ்க்கைத் திறன்கள் தொடர்பான இடைவெளிகளைக் குறைக்கும். பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்த 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படைக் கல்வி, டிஜிட்டல், நிதி கல்வியறிவு வாழ்க்கைத் திறன்களை வழங்குகிறது இது. இத்திட்டம் தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel